(Reading time: 1 - 2 minutes)

சீதையின் மனமும் கல் மனமோ - புவனேஸ்வரி 

Seetha

விழிகளால் விவாகம் முடித்தோம்

விதியால் மீண்டும் இணைந்தோம்

 

ராமனே பதியென கொண்டபின்

விதியை வென்றிட தயங்குவேனோ ?

 

கடமைக்கு என்னவர் இசைந்து போகையில்

தலைவனின் துணையாய் நான் இணையாமல் போவேனோ ?

 

துயர் என்பது நிரந்தரம் -அதை

இராமனின் துணைவியாய் நின்று எதிர்கொள்ளாமல் போவேனோ ?

 

கானகமே எமது அகம் என்று முடிவானால்

எம் அகத்தின்  ஐயனை பிரிவேனோ ?

 

துன்பம் எனும் ஓடைக்கு அஞ்சி

கோசலை மைந்தனெனும்  சமுத்திரத்தை விட்டுத் தருவேனோ ?

 

இன்பம் மட்டுமே இல்லறம் என்று

சொல்வதும் நல்லறம் ஆகிடுமோ ?

 

தன்னில்  இன்னோர் உயிராய் எமை ஏற்றப்பின்

இன்னல் கண்டு ஓடிடுவேனோ ?

 

இருளில் மறைகின்ற நிழலாய்

இடையில் வந்த உறவோ நான் ?

 

உயிராய் உணர்வாய் கலந்தப்பின்

பிரிவாய் என உரைப்பதும் தகுமோ ?

 

என்னில் பாதி பிரிந்து போகையில் -சிரித்திருக்க

சீதையின் மனமும் கல் மனமோ ..?

 

ஹாய் நண்பர்கள் .. அண்மையில் "சீதையின் ராமன் "தொடரில் இராமனுடன் சீதை கானகம் போக விழையும்  அத்தியாயத்தை கண்டு இந்த கவி தோன்றியது .

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.