(Reading time: 2 - 3 minutes)

பணம் பந்தியிலே..பாசம் சந்தியிலே.. - தங்கமணி சுவாமினாதன்

தந்தைக்கு உடல் நிலை..

கொஞ்சம் சரியில்லை

வந்து பாருங்கள்--போனில்

தாயும்தான் கெஞ்சி அழைத்திட..

அரசுப் பணி காரணமாய்..

ஆந்திரா செல்கின்றேன்...

மேலிட உத்தரவு..மீறி வர இயலாது..

இது மூத்தவன் சொன்ன பதில்..

ப்ராஜக்ட் முடித்திட-- இன்னும்

பத்து நாளே அவகாசம்..

முடித்துத்தான் தராவிட்டால்

முடித்திடுவர் என் பணியை..

சின்னவன் சிணுங்கலோடு

தந்திட்டான் ஓர் பதிலை..

வந்திடத்தான் நினைக்கின்றேன்

ஆனாலும் இயலாது..

டிவி சேனலொன்றின்"குரங்காட பேயாட"

குத்தாட்ட நிகழ்ச்சியொன்றில்..

நாளை என் மகளின் ஆட்டம் இருக்கிறது..

அன்பு மகள் அவள் நிலையை

அழகாய்ச் சொல்லி விட்டாள்..

தந்தை நாளை "உயில்" எழுத நினைக்கின்றார்..

அம்மா மீண்டும் அலைபேசியில்..சொல்லிடவே

சொன்ன அன்றே.. பெரியவன் மாலையிலும்

சின்னவன் இரவினிலும் விடிகாலைத்

தன் கணவனோடு அன்பு மகளும் வந்து சேர..

இந்தப் பெரிய வீடு எனக்கப்பா..பெரியவன்..

மளிகைக்கடையை இடத்தோடு என் மீது 

எழுதுங்கள்..சின்னவன்..

அம்மா உன் மொத்த நகையும் அம்முக்குட்டி

எனக்குத்தானே..ஆசைமகள்..

பேங்க் பேலன்சும் மற்ற லேண்சும்.

மூவருக்கும் சமமாய்ப் பிரித்துக் தரப்பட்டால்

பிரர்ச்சனை ஏதும் வராது.. மூவரும் ஓர் குரலில்..

தாயும் தந்தையும்தான் விலையில்லாப் பெரும் சொத்து..

மூவரில்... யாரும் கேட்கவில்லை..

பெற்றோரைத் தம்மோடு தம் சொத்தாய்ச் சேர்த்துக்கொள்ள..

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.