(Reading time: 2 - 4 minutes)

காதலர் தினம்...பராக்..பராக்... - தங்கமணி சுவாமினாதன்

heart

வருது..வருது"காதலர் தினம்"..

காதல் என்னும் சொல்லை கேட்டால்..

காதில் தேன் வந்து பாய்கிறது..

உச்சரிக்கும் நாவும் இனிக்கிறது..

நினைத்தாலே நெஞ்சம் தித்திக்கிறது..

அடடே..அடடே..காதலுக்குதான் 

எத்தனை சக்தி..

காதல் வசப்பட்டால் அறிவு வளர்கிறது..

ஆற்றல் பிறக்கிறது..உத்யோகம் கிடைக்கிறது..

உழைப்பு உயர்கிறது.. ஊரும் செழிக்கிறது..

உலகம் என்னையே சுற்றிச் சுற்றி வருகிறது..

காதலே எனக்கு வரமாகிறது..வாழ்வாகிறது..

பகலாகிறது,,இரவாகிறது..

உறவாகிறது..உயிராகிறது..

பிறந்த பலனாகிறது..அனைத்தும் அதுவே ஆகிறது..

குருதியை வியர்வையாக்கி உழைக்கும்..

அப்பன் இருக்கிறான் எனக்கு..

அவனின் உழைப்பின் ஊதியத்தில்..

காதலிக்காக ரூ.நூறுக்கு ஒரு "ரோசா" வாங்குவேன்..

காதல் வசன காதல் அட்டையினை ..

கடைக்காரன் கேட்கும் காசுக்கு வாங்கி..

காதலி கையில் கொடுத்து அவளின்..

மலர்ந்த "முகம்" பார்ப்பேன்..

காதல் என்பது வாழ்க்கையில் பத்து விழுக்காடாம்..

வாழ்க்கைக்காக காதலாம்..

காதலுக்காக வாழ்க்கை இல்லையாம்..

இது யாரோ சொன்னது..

அவன் கிடக்கிறான் மடையன்..

முட்டாள்,விவரம் கெட்டவன்..

ரஸனையற்றவன்..அவனை நேரில் பார்த்தால்..

முகத்தில் அறைவேன்..குமட்டில் குத்துவேன்..

வீணாய்ப்போனவன் என்று விரட்டியடிப்பேன்..

காதலியின் கண்ணசைவு எனக்கு..

காட்பரீஸ் இனிப்பு..அவளின் இதழ் சிரிப்பு..

எனக்கு தென்றலின் சிலிர்ப்பு..

ஆவளின் வாய் மொழி எனக்கு தேன் துளி..

அவள் தொட்டால் என் உடலில் மின்சார துடிப்பு..

அவள் தரும் முத்தமோ எனக்கு சொர்க்கத்தின் திறப்பு.

இவள் இல்லா வாழ்வில் எனக்கு வேறேது சிறப்பு..?

நான் என்ன உலகை மாற்றப் பிறந்தவனா?

சமுதாயம் மேம்பட.நாடு உருப்பட..தாய் நாடு உயர..

நாட்டைக்காக்க..வீட்டைக்காக்க..

நானேன் சிந்திக்க..?

காதல் போதாதா..?காலம் முழுதும் களித்திருக்க..?

வாழ்க காதல்..வளர்க "காதலர் தினம்".....

 

(உண்மையான காதலர்களுக்கு வாழ்த்துக்கள்..காதல் எனும் போர்வையில் காமக் களியாட்டம்  நிகழ்த்தும்..வீணர்களைக் கண்டு மனம் வெதும்பியே இந்த கவிதை...யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்...நன்றி..)

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.