(Reading time: 1 minute)

என் காதலி - அமீர்

உவமையும்
உவமேயமும் இல்லா
சிருங்காரம் நீ!
புலமையும்
காம செழுமையும் கொண்ட
அலங்காரம் நீ!
முழு வெண் திங்கள்
முகத்தாள் நீ!
கூர் கொங்கை பூத்த
மங்கை நீ!
நறுவாச சிலைபோல்
பெருவனப்பாள் நீ!
மதி மயக்கும்
மோக ரூப சுந்தரி நீ!
இல்லா இடை அணிந்த
இந்திராணி நீ!
மென் நடை உதிரும்
இளவேனில் நீ!
நயனங்கள் காட்டும்
நாணத்தால் நீ...
என்னை கள்வனாக்கி
சிறையெடுத்த காதலி நீ!

"உன்
அதரங்கள்
ஒருமுறை துய்க்க
ஈதலிப்பாயா?"
தே மதுவதை
பருகிட
சம்மதிப்பாயா?

என்று
என் காதலியை வர்ணித்தேன்.

அவளோ...
க்யூட்டா
ஹாட்டா
ஸ்வீட்டா
புரிகிற மாதிரி
தமிழில் சொல்லேண்டா
என்கிறாள் !

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.