(Reading time: 1 - 2 minutes)

கருணை கற்கள் - நிலவினி

"காயம் பட்டால்..
கண்ணீர் சொரிவுது மனித இயல்பு........
 
காயம் பார்த்தே கண்ணீர் வடிப்பது......
மானுட சிறப்பு......"
 
இப்படியே வளர்க்கப்பட்டு இருக்கிறோம்    நாம் .............
கருணையினால் வரும் கண்ணீர் ......
கடலை விடவும் கரிப்பானது  
கருனைவயபட்டவனுக்கு...  .....
 
இட்டவனுக்கு மகிழ்ச்சி    ....
பட்டவனுக்கு இகழ்ச்சி........
பரிதாபம்..........
 
கொடுத்து கொடுத்து -நாம் 
வள்ளல் ஆகிவிடுகிறோம்   ......
வாங்குபவனின் வலி உணராமல்.......
 
என்னிலும் நீ குறைவு....
என்ற  நினைவு 
தரும் உணர்வே....
பரிவு.....
 
ஒரு உயிரின் வாழ்வியல் வேட்கை...
மற்றொரு உயிருக்கு உணர்வு சார்ந்த வேடிக்கை....
 
தம் சுய மேன்மையை காண்பிக்க.....
சக மனிதன் நாடுவது கருணை என்னும் வாடிக்கை.....
 
பறவைகளின் தூரம் அது கடக்கும் 
திசைகளில் இல்லை.......
அதன் சிருகுகளின் விசைகளில் இல்லை......
பறக்க வேண்டும் என்ற அதன்....
ஆசைகளில் இருக்கிறது......
 
காயம் பார்த்தே நீ 
என் மீது அம்பு தொடுத்து விடுகிறாய்....
உன் கருணையால்......
நான் காயம்  தாங்கி  மட்டுமல்ல....  
உன் கருணையும் விழ்த்தி வருவேன்........
 
அடிபட்டவானை  அல்ல....
அனுதவயபட்டனாய்.....
 
உன்  தற்காலிக.. கருணையின்  கரங்கள்....
என்னால் நிச்சயம் ஜீரணிக்க படும்.....
ஏனெனில் நான் உன்னிலும்.....
கடியவன்.....!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.