முத்தங்கள் - கிருத்திகா
இதழ் முத்தங்களில்
எல்லாம் பெரிதாக
ஆர்வம் இல்லை எனக்கு.......
ஏன் என்று அறிய விருப்பமுமில்லை..........
அவள் கூந்தலில்
முத்தமிடுவதும்
முத்தமிட்ட கூந்தலை
வளைத்து
விளையாடுவது
பிடிக்கும்................
.
என் எல்லை தாண்டி
சீண்டல்கள் கூடும்போது
வரும் அவள் கோபத்தை
அடக்க மட்டும்
சில இதழ் சண்டைகள்.......
அந்த சண்டை
அவளுக்கும் பிடிப்பதால்
மீண்டும் தொடர்கிறது
விடுபட்ட கொஞ்சல்..........................
{kunena_discuss:779}