காபி பிரியன் (வெறியன்) - மாது
கல்கண்டு ரவையும்
பாலுமாய் கலந்து
கஞ்சி உமகொரு லோட்டா
அது வேண்டாம்!
கம கமவென்று
வாசனை வீசும்
கோகோ உமகொரு லோட்டா
அது வேண்டாம்!
தேயிலை என்பார்
டீத்துள் என்பார்
தித்திக்க உமகொரு லோட்டா
அது வேண்டாம்!
உள்ளதை ஈர்க்கும்
உடல்நலம் காக்கும்
ஓவல் உமகொரு லோட்டா
அது வேண்டாம்!
கசந்திடும் உடல்நலம்
கெடுத்திடும் கெட்ட
காபி உமக்கொரு லோட்டா
அதுவே வேண்டும்??
தாமதம் செய்யாமல்
சீக்கிரம் தாயேன்
தலையே வலிகிறது
சுட, சுட தா
ஒரு டம்பளர்
காபி