(Reading time: 2 - 3 minutes)

குடித்தவன் வாழ்க்கை... - முஹம்மது காசிம்

Alcohol

குடிகாரன்

ரோட்டில் மயக்கத்தில்!

குடும்பத்தினர்

வீட்டில் கலக்கத்தில்!

 

குடிக்க துவங்கிய போது,

அவன் வீட்டில்

வறுமையும் குடியேற துவங்கியது!

 

மது அவனைக் குடிக்கும் முன்,

குடுவையில்

அவன் ஆயுளை அளந்து கொண்டான்!

 

முதலில்

மதிகெட்டுப்  போனது !

   போதையில் பாதை மாறிப் போனது!

 

கடைசியில்

வாழ்க்கை தறிக்கெட்டுப் போனது

அவன் விதியே கோரமாய் முடிந்துப் போனது!

 

கோமான்கள் கோபுரத்தில்

குடித்து அடிக்கும்

பெருமை கொண்டாட்டம் !

குடிசைவாசிகள்

வயித்துக்கே வழியின்றி

வறுமையில் திண்டாட்டம் !

 

அப்பன்

குடியை தொட்டான்

பையன்

பாதியில் படிப்பை விட்டான் 

 

மில்லியில் துவங்கிய குடியால்,  

வீட்டில் உள்ள சல்லியும்

மில்லியானது!

 

கவலையை போக்க ,

கணவன்

கள்ளை குடிக்க போனான் !

வறுமையை போக்க,

மனைவி

கல்லை உடைக்க போனாள் !

 

“குவாட்டர் “அடிக்கும் போது ,

குடும்பத்திற்கு  

தெரியவில்லை!

“ஃபுல்” அடித்து வந்த போதுதான், 

புரிந்துக் கொண்டாள்

மனைவி !

 

குடித்தவன்

வாழ்க்கை 

பாடையில் முடிந்ததுவிட்டது!

குடும்பத்தினர்

வாழ்க்கை 

வீதியில் தொடங்கிவிட்டது! 

 

குடியினால்

அழிந்த ராஜ்யங்களின்

சரித்திரங்கள் அதிகம்!  

குடியினால்  

குடும்பங்களில் விளைந்த

தரித்திரங்களும் அதிகம்! 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.