(Reading time: 1 - 2 minutes)

கிரிக்கெட் பக்தி - முஹம்மது காசிம்

Cricket

சீட்டாட்டம்

மலையேறிப் போனது

கிரிக்கெட் சூதாட்டம்

ஆகிப்போனது

நவீன உலகமாகி

போனதால் !

 

சுதந்திரம்

நம்மை கடந்து விட்டதால்

தேசபக்தியை கிரிக்கெட்டில்

தேடிக் கொண்டு இருக்கிறார்கள் !

 

நாடு அடிமைப்பட்டுயிருந்தது

பிரிட்டனிடமிருந்து

விடுதலை பெற்றது 

கிரிக்கெட்டை தவிர !

 

மைதானத்தில்

பதினோறு வீரர்கள் 

விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள்

இல்லை

நாம் முட்டாள்களாக இருப்பதால் 

அவர்கள் நமக்கு

தொழில் அதிபர்களாக இருப்பது

தெரிவதில்லை !

 

நாம் கிரிக்கெட்டுக்கு

அடிமையாகி போகிவிட்டதால்

அங்கு அம்பியர்கள்

அரசியல்வாதிகளாக

இருப்பது தெரிவதில்லை !

 

அங்கு வீசும் 

ஒவ்வொறு பந்தும்

பல திசைகளில் உள்ள

முதலாளிகளின் பணப் பைகளை

நிரப்பிக்கொண்டு இருக்கிறது !

 

கூத்தாடிகளால்

விளம்பரப்படுத்தபடுகிறது

விபச்சாரத்திற்க்கு

பகிரங்க அழைப்பு விடுக்கப்படுகிறது

கிரிக்கெட்

அவர்களுக்கு 

திருவிழாவாக இருப்பதால் !

 

தேச பற்று

மறந்துவிட்டதால் தான்

ஹாக்கியை தேசிய விளையாட்டா

என்று

யோசித்துக் கொண்டு இருக்கின்றோம் !

 

விளையாட்டை

விளையாட்டாக பார்ப்பதில்லை

அதை மதபக்தியாக்கி

விட்டதால்

மதநல்லிணக்கம்

மைதானத்திலே

ரனகளம் ஆக்கப்படுகிறது !

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.