(Reading time: 2 - 4 minutes)

“காதலி” என்ற புத்தகம் - வின்னி

Book

ஓ!....கடைசியில் நீ என்பக்கம் திரும்பிவிட்டாய்!

 

இந்த அறையின் ஒரு மூலையில் தூசு படிந்து

அநாதரவாக  உன்னை நினைத்துக் 

'காதலி' என்ற பெயரில் இருந்தது உனக்குத் தெரியாதா?

 

எங்கிருந்தாய் இவ்வளவு நாளும்?

 

நீ இவ்வளவு நாளும் கட்டித் தழுவிச் சுவைத்தவை,

என்னைப் போல தீவிரமான,

அனுபவமாக இருக்கவில்லையா?

 

என்னை எடுத்து, உன் ஆவலான விரல்களால்  துருவிப் பார்த்து,,

உடலில்  படிந்த தூசு  என்னும்  கறை யை நீக்கி, இறுக்கப் பிடித்து,

மறுபடியும் சுவைக்க, நான்உன்னை  விடமாட்டேன்!     

 

காதல்  என்னும்  உன்  பேரார்வமான  நயத்தால்,

என்னுள்  ஆழமாகப் பதிந்திருக்கும் உனது எண்ணம் .

மறுபடியும் என் பக்கங்களைத் திருப்ப நான்  விடமாட்டேன்!

 

என்னை நீ படிக்க விடமாட்டேன்!

 

இந்தப் பழைய புத்தகம் இப்போது,

ஆவணக் காப்பகத்துக்குச் சென்றுவிட்டது,  என்று நினைத்துவிடு!.

என்னை  இருந்த உடத்திலேயே நிம்மதியாக இரு க்கவிடு!

 

மற்றப் புத்தகங்களின் ஒவ்வொரு பக்கங்களை,

உன் கவனமில்லா விரல்களால்  வருடி,

உன் கண்களால் உற்றுப் பார்த்து , 

 நீ சுவைத்து,  தூக்கி எறிந்தது போல,

என்னையும் கவனிப்பாரற்று விடவா பார்க்கிறாய்?   

 

என்னை விட்டு விடு!

 

மர்மங்கள் நிறைந்த என் காதல் கதையை ,

உன்னைப் போன்ற காதலின் கன்றுக் குட்டிக்குப்

புரிந்து கொள்ள முடியாது.

அது முதிர்ந்த அறிவுள்ளவனுக்கு ரசிப்பதற்கு! 

என்னைப் பாதுகாக்கக் கூடிய

ஒருவனுக்கே உரியது!

 

மெலிந்த,

என்னைவிட ச் சிக்கலில்லாத,

எளிய நடையில் எழுதப்பட்ட,  

மிகவும் அற்பமான,

கேளிக்கையான,

மற்றப் பதிப்புகளை வாசித்து அனுபவி ! 

 

ஆனால், ஆழமான கருத்துள்ள,

உணர்ச்சியின் உச்ச நிலையை,

சிக்கலில்லா நேர்மையான காதலை,

அறிய வேண்டுமானால்,

என்னிடம் திரும்பி வா!

 

 நீ ஒரு பக்தியுள்ள புத்தத் தொகுப்பாக,

 காதலால், உயிரோடு என்னை அணைக்கும் போது தான்,

அது என் தேவைகளைப் பூர்த்தி செய்யும்! 

 

அதன் பின்புதான் நான் உன்னை,

என் பக்கங்களைத் திறக்க விடுவேன்.

 

என் இரகசியத்தின் சாரத்தின் உள்ளே

உனது பிரபஞ்சத்தின் மர்மத்துக்கு, 

 உன்னைக் கொண்டு செல்வேன்!

 

அதன் பின்பு……..

வாழ்வதற்கு,,

கற்பதற்கு,

காதலிப்பதற்கு,

இந்த நீண்ட “காதலி” என்ற கவிதைத் தொகுப்பைத் தவிர,   

வேறு ஒரு புத்தகமும் உனக்குத் தேவைப்படாது!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.