(Reading time: 2 - 3 minutes)

எங்கே என் மக்கள்...?? - டோனா

India

எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்!!!
ஆனால் புரியவில்லை...
எதற்காக பெருமிதம் கொள்வது என்று...!!

தலைநகரில் நடு இரவில்
கற்பழிக்கப்பட்டு இறந்த
நிர்பயா...

ஒருமுறை சிதைக்கப்பட்டு 
அதிலிருந்து மீண்டு
கல்லூரியில் காலடி வைத்த மொட்டு...
புகாரை வாபஸ் பெறாததால்
கருகிய அவலம்...!!
இப்படி ஒன்றா இரண்டா??
எத்தனையோ???

காதலிக்க மறுத்து
முகம் கருகி துடிக்கும்
வினோதினிகள்...
வெட்டி சாய்க்கப்படும்
சுவாதிகள்...
கேவலமாய் பழிவாங்கபடும்
வினுப்பிரியாக்கள்...

மிருகங்களுக்காய் அத்தனைக்குரல்கள்...
அந்தோ மனிதனுக்காய் யார்??

மாட்டிறைச்சி பிரச்சனை..
எத்தனை எத்தனைக் கொலைகள்..??

நாய்கள் கொன்றன மூதாட்டியை..
குரல்கள் கேட்பதென்னவோ
நாய்களுக்காக...!!

எத்தனை சாதிக் கொலைகள்..??
எத்தனை ஆணவக் கொலைகள்..??

ஏழைகள் எப்பொழுதும்
சிலந்தி வலையில் சிக்கியப் பூச்சிகள் தான்...
நியாயங்கள் அவர்கள் பக்கம் தான்..
ஏழைகள் என்பதால் என்னவோ
மரணமும் அவர்கள் பக்கம் தான்..!

தன் எழுத்துகள் கொல்லப்பட்டதால்
தானே இறந்து விட்டதாக 
அறிவித்துக்கொண்ட
பெருமாள்முருகன்...!!

பழமைவாதத்தை எதிர்த்ததால்
சுட்டுக்கொல்லப்பட்ட கல்புர்கிகள்...!!

அரசை விமர்சித்தால்
அவதூறு வழக்குகள்...!

எங்கே எங்கள் பேச்சுரிமை??
எங்கே எங்கள் கருத்துரிமை??

தேசத் துரோக வழக்குகள்.. 
காரணங்களோ கேலி கூத்துகள்..!!

மனைவி இறந்த பாரம் மனதில்..
உடலினை ஏற்றிச் செல்ல ஊர்த்திகாய்
கெஞ்சும் கணவன்...!!
அதிகாரிகளின் கல்நெஞ்சில்
ஏது ஈரம்..??
அதோ விறைத்த அவள் உடலினை 
சுமந்து நடந்தான் 10கி.மீ..!!
ஏழையாய் பிறந்தது அவன் தவறா??
இல்லை
நம் நாட்டில் பிறந்தது தான் அவன் தவறா??

எங்கும் ஊழல்...
எதிலும் சுரண்டல்...
ஆவென்று அலையும் பணப்பேய்கள்...!!

குடும்பங்கள் எங்கே??
எளிதில் கலைக்கப்படும்
கூடுகளாய் அவைகள்...!!
சுமந்து பெற்ற பெற்றோர்களோ
இன்று பாரங்களாய்...!!!

எந்த குற்றம் இல்லை இந்த திருநாட்டில்....??
வளங்களுக்கு பஞ்சமில்லை...

ஆனால்...

மனிதர்களை தான் காணவில்லை..
மனிதநேயத்தையும் தான்...!!!

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.