காத்திருப்பேன் கண்ணா - அபிநயா
அறிமுகம் இல்லா
ஆயிரம் முகங்கள் கண்டேன்
ஆனால் நான் காணும் முகங்களில்
நீ இல்லை...
நான் போகும் ஒவ்வொரு சாலையிலும்
விழி விரித்து தேடினேன்....
தேடி தேடி
தேடிக்களைத்த கண்களுமாய்
தேடலை தொடர்ந்தேன் ..
விழி விரித்து தேடி கிடைக்கவில்லை
மின்வலை விரித்து தேடுகிறேன்
இப்போது இணையத்தில் தேடி ,
இணையாமல் போனாய்
முகத்திரையில் தேடினேன்
நான் காணும் முகங்களில் நீ இல்லை....
நான் சோகமாய் இருக்கும்போதெல்லாம்
என்னை சிரிக்க வைத்தாய்
இன்று அதை விட ஆயிரம் மடங்கு
சோகம் அனுபவிக்கின்றேன்
ஆறுதல் சொல்ல வருவாயா ...
நீ கூப்பிடும் அந்த ஒரு கண்ணம்மாக்காக ஏங்குகிறேன்
இனி விளையாட்டுக்காக கூட கோபம் கொள்ளமாட்டேன்
வந்துவிடு என் கண்ணா
இந்த பிரிவு நிரந்தரமல்ல
நாட்கள் பல சென்றாலும்
என்றேனும் ஒரு நாள்...
தொலைவிலாவது
உன்னை
ஒருமுறையேனும்
காண்பேன் என்று நம்பிக்கையுடனும் கனவுகளுடனும்
காத்திருக்கிறேன்...!
{kunena_discuss:779}