(Reading time: 1 minute)

உடை - கிருஷ்ணபாபு

Saree

இதப் போட்டாலே சண்டைதான்! 'வெவ்வெவ்வெ' பழிப்பாள்..

'பொண்ணு பார்க்க வந்தப்போ போட்டது!' காதலில் சேமிப்பாள்.,

'போனமுறையும் இதுதான் போட்டீங்க!' தேதியும் சொல்வாள்..

'இதைத் தேய்க்கும்போதுதான் தம்பி கை சுட்டுருச்சு!' கவனமாவாள்...

என் உடைகளிலும் வாழ்பவளின் சேலைகள் வரலாறை கூற.. முயன்று கிண்டல் சிரிப்பு வாங்கியது எத்தனை முறை?

தனிமையில் அவள் சேலையில் முகம் பதித்து யோசிக்கிறேன்...

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.