(Reading time: 13 - 26 minutes)
Verukku neer - Rajam Krishnan
Verukku neer - Rajam Krishnan

Flexi Classics தொடர்கதை - வேருக்கு நீர் - 07 - ராஜம் கிருஷ்ணன்

  

கைக்கடியாரத்தைப் பார்த்துக் கொண்டு யமுனா அரை மணியாகக் காத்து நிற்கிறாள். நீரு புடைவை மாற்றிக் கொண்டு இன்னமும் வரவில்லை. வாசலில் கார் தயாராக நிற்கிறது.

   

மாடியிலிருந்து வாசக் கலவைகள் காற்றிலேறிச் சவாரி செய்த வண்ணம் நாசியைக் குசலம் விசாரிக்கின்றன. மணிப் பிரவாளப் பேச்சுகள், சிரிப்பொலிகள், பட்டு மென்மைகளின் சரசரப்புக்கள்...

   

யமுனா எட்டிப் பார்க்கிறாள்.

   

"நீரு? உனக்கு வர நேரமாகுமா? நான் முன்னே போகட்டுமா?"

   

"இல்லே...டி! காரிலே போகலாமே?..."

   

"நீ அஞ்சு நிமிஷம்னு சொன்ன நினைவு. ஒரு மணி நேரம் ஆகப் போகிறது."

   

"போடி... இந்தக் கொண்டை இப்போதும் சரியில்லை..."

   

அவளுக்குத் தலையில் குல்லா வைப்பது போல் ஒரு தோழி, அவள் தலையைப் பற்றிக் கோண்டிருக்கிறாள்.

   

"சரியா இருக்காடி?"

   

நீரு கண்ணாடியின் முன் வலமும் இடமுமாக அசைந்து பார்க்கையில், "கச்சிதமாய் விழுந்திருக்கு..." என்று தோழி முத்தாய்ப்பு வைக்கிறாள்.

   

"பின்னே நீ என்ன சொல்லுவே? இது கொஞ்சம் லெஃப்ட்டிலே சாய்ந்தால் தான் இயற்கையாக இருக்கும்!" என்று இன்னொருத்தி வெட்டுகிறாள்.

   

"முடி கொஞ்சம் இருக்கிறவங்களுக்குத்தான் இது பிரமாதமாக இருக்கும். சைனாபஜாரில் ஒரு கடையில் நைலான் கொண்டை ஆர்டர்படி செய்து கொடுக்கிறான். ரூபமாலாவுக்கு அவன் தான் 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.