(Reading time: 41 - 82 minutes)

வீட்டுக்கே வந்தான்..பாரதியோ தோட்டத்திலிருந்து அவனை காண்பதற்கு வரவே ஆயத்தமாக.. அவனே அவள் முன்னால் சென்று நின்றான்... ஹேய் லீடர் உன்னை பார்க்கலாம்னு தான் நினைத்தேன்..நீயே வந்திருக்க..நீ கொடுத்தச் செடி.. ரெட் ரோஸ்.. முதல் முறை பூத்திருக்கு உனக்குத் தான் கொடுக்கனும் என்று இருந்தேன்.. இத்தோடு உனக்கும் செடிக்கும் உள்ள ரிலேஷன்ஷிப் முடிச்சிக்கனும்.. இனி மேல் பூக்கும் பூக்கள் எல்லாம் எனக்கு மட்டும் தான்..என சிரித்துக்கொண்டே பூவினைக் கொடுத்தாள்.. அதை வாங்கியவன் அந்த செடிக்கும் எனக்குமான உறவு இத்தோடு முடிந்தது.. இந்த பூவுக்கும் எனக்குமான ரிலேஷன்ஷிப் ஆரம்பம் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளவா..? என நிறுத்தி அவளைப் பார்த்தான்..

ஹான்.. புரியலை.. என்ன லீடர் நேற்று ஏதும் மணிரத்னம் சார் பில்ம் பார்த்தீங்களா..? என்ன பேசுறீங்கன்னே புரியலையே எனக் கேலியாய் கேட்டாள் பாரதி... விஷ்வா சிறு தடுமாற்றத்துடன் பாரதி... எங்க என்னை விட்டு ரொம்ப தூரமாய் போய்விடுவனு பயமாக இருக்கு.. பட் சொல்லாமல் இருக்கவும் முடியலை.. உன்னை அவ்வளவு பிடிக்கும் ..நீ எப்போதும் போல என் கூடவே இருக்கனும்... ஐயம் மேட்லி லவ் வித் யு.. லவ் யு சோ மச் .. என்று அவள் கையைப் பற்றி கூறியே விட்டான்..

விஷ்வா கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கே பாரதிக்கு சற்று நிமிடங்கள் தேவைப்பட்டது.. விஷ்வா வாட் யு மீன் இட்..புரிந்து தான் பேசுகிறாயா.. இதெல்லாம் இப்போ அவசியமா..? உனக்கு லவ்னா என்னனு புரியுதோ என்னவோ தெரியலை..பட் எனக்கு அதன் அர்த்தம் தெரியவில்லை இதுவரை...என்னை பொருத்தவரை இப்போ நீ லவ்னு சொல்வது ஜஸ்ட் எபக்ஷன் ஒன்லி.. அது சில காலம் வரை தான்.. இன்னும் நமக்கு நிறைய டைம் இருக்கு ... புரியுதா உனக்கு... என பாரதி தனக்கு தெரிந்தவரை எடுத்துக் கூறினாள்..

பாரதி என்னை புரிந்துக்கொள்.. நான் இப்போவே லவ் பண்ணு அப்படி சொல்லவில்லையே... என் மேல உனக்கு லவ் இருக்கு என்னை பிடிச்சிருக்கு என்பதை ஏற்றுக்கொள்... அது போதும் உன்னை டிஸ்டர்ப் பண்ணமாட்டேன்.. நீ எனக்கு மட்டும் என்ற நினைவே போதும் என அவன் முடிவில் குறியாய் நின்றான்..

விஷ்வா என்ன பேச்சு இது... உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் பட் நீ கூறும் அர்த்தத்தில் இல்லை..நல்ல ப்பிரண்ட்டாக மட்டும் தான் .. நட்பு என்பது எதிர்ப்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டது அப்படியான விஷ்வாவை மட்டும் தான் பிடிக்கும்... பட் லவ் அப்படியில்லை ...இந்த லவ்வு எலவுன்னு உளரிட்டு இருக்காமல் தூக்கி தூரப்போடுங்க லீடர்...நமக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.