(Reading time: 41 - 82 minutes)

அதன் பிறகு விஷ்வாவோடு பேசுவதேயே நிறுத்தி விட்டாள் .. அத்தோடு அவர்களது வீட்டுக்கு செல்வதையும் தவிர்த்ததோடு அதை யாரும் அறியாதவாறு சமாளிக்கவும் பழகிக்கொண்டாள். இதற்கிடையில் விஷ்வா பிளஸ் டூ வில் பாஸ் ஆகி வெளியூர் கல்லூரியில் சேர்ந்தது பாரதியிற்கு பலத்த நிம்மதியையும் ஆறுதலையும் கொடுத்தது.. வினி வீட்டிற்கு இழுத்து செல்கையில் தடையின்றி முன் போல் சென்றாள். ..விஷ்வா விடுமுறையில் வருவது அறிந்தால் சித்தி வீட்டில் சில நாட்கள் தங்கிவிடுவாள்..எப்படியோ விஷ்வாவின் தொல்லைகள் ஏதுமின்றி பல மாதங்கள் நிம்மதியாய் இருந்தாள்.. விஷ்வாவும் இத்தனை மாதங்களில் மாறி இருக்கலாம் என்றே நினைத்திருந்தாள் பாரதி.

பாரதி.. பாரதி... என அவளது தாய் அழைக்க... தூக்கம் கலைந்த கடுப்பில் ஏன்மா ஏலம் விட்ற .. கொஞ்ச நேரம் தூங்க விட மாட்டீயா..? எனச்சிணுங்க .. இது கொஞ்ச நேரமா டி.. மதியம் சாப்பிட்டதும் ஆரம்பிச்சே .. இப்போ மணி ஐந்தாகுது.. எழுந்திரு...

... ம்மா..! இன்னும் கொஞ்ச நேரம் தூங்கினால் தான் என்ன வந்தது.. சொல்லு உனக்கு என்ன காரியம் ஆகனும்..என பாரதி கண்ணைத் திறக்காமலே கேட்டாள்..நான் கோவிலுக்கு போறேன்.. நீ மேசையில் ஒரு பை இருக்கு.. வினி அம்மாவிடம் டைலர் கடையில் கொடுத்தாங்கன்னு கொடு .. என கூறிவிட்டு அவளது தாய் செல்ல முற்படுகையில்..

ம்மா... ஆண்ட்டியும் நீயும் ஊர்கதை,உலக நடப்புன்னு நம்ம வீட்டில் வட்ட மேசை மாநாடு நடத்தீனீர்களே.. அப்போ ஆண்ட்டி போகும் போது கொடுத்து விட்டிருக்கலாம்ல.. வயசாகிட்டு போகுதில்ல அதனால் தான் இப்படி மறதி... சரி சரி கோவிலுக்கு போற.. கடவுளே எனக்கு நல்ல புத்தியை கொடுனு வேண்டிக்க மறந்திடாமல்.. என பாரதி அவளது தாயை கலாய்க்க...

ம்.. ஆமாண்டி உன் வாய் கொழுப்பு குறையனும்னு தான் வேண்டிக்கனும்... ஆமா போனவாரம் ஸ்கூலில் என்ன நடந்தது .. என பாரதியின் முகத்தை ஆராய .. அவளோ அதனை பொருட்படுத்தாமல் ..ஓ மம்மி காது வரை நியுஸ் வந்திடுச்சோ ...என எண்ணியபடி எல்லாரும் தான் நடந்தாங்க.. நீ யாரை கேட்கிறாய்..என அறியாதவள் போல் பதில் கேள்வி கேட்டாள்..

ம்ம்.. உன் கிளாஸ் டீச்சரை மார்கட்டில் தற்செயலாக மீட் பண்ணேன்.. உன்னை தப்பாக பேசினான்னு ஒரு பையனை க்கிளாஸில் எல்லார் முன்னாடியும் அரைந்ததோடு ப்பிரின்சிபலிடம் போய் இவன் என்னை தப்பாக பேசினான் அதற்கு அரைந்தேன்.. என் மேல தப்புன்னா என் மீது வேண்டிய எக்ஸ்ஷன் எடுங்கனு தைரியமாக போய் ஆபீஸ்ல

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.