(Reading time: 41 - 82 minutes)

நடந்துக்காதனு.. உன் பைத்தியகாரத் தனத்துக்கு ஒப்புக்குச்சப்பாணி என்னால் போட முடியாது... முதலில் கையை விடு..விட்றானு தள்ளிவிட்டு செல்ல முற்படுகையில் இந்த திமிரு.. தான்டி இது..இது இல்லன்னால் எல்லாமே சரியாக இருக்கும்.. என வெறி கொண்ட வேட்டை மிருகமாய் அவள் மீது பாய பாரதித் தான் போராடவேண்டியதாயிற்று அவன் பிடியில்..

அவனிடமிருந்து தப்பிச்செல்லும் வழியில்லையோ என நம்பிக்கையிழக்கும் நிலையில் போராட்டம் தொடர்ந்தது.. அவள் ஓடிச்சென்று மேசையில் இடரி விழுகையில் சிறிய கத்தி ஒன்றும் அசைவில் விழ அதனை பாரதி பற்றி எடுத்துக் கொண்டாள் ..எழுந்து வாசல் நோக்கி ஓடுகையில் வலக்கையைப் விஷ்வா பற்றி இழுக்க பாரதி தன் ஒட்டு மொத்த பலத்தையும் கொண்டு விஷ்வாவை தள்ளிவிட்டு இடது கையால் கத்தியை அவன் கழுத்திலே வைத்துப் பிடிக்க விஷ்வா அசைவின்றி அவளது பலத்திற்கும் ஆயுதத்திற்கும் அடங்கித்தான் போனான்..

ச்சீ.. பொறுக்கி நாயே... ஆம்புலன்ற திமிரா.. உன் வக்கிர புத்திக்கு நான் வடிகால் ஆகனுமா..அசிங்கமாக இல்ல..என பாரதி சீற.. ஹேய் பாரதி என அவன் பேச முனைய..மூச்.. ஏதாவது பேசினால் அப்புறம் உயிருக்கு உத்தரவாதமில்லை...அவள் கண்கள் கோபம்.. ஆத்திரம்.. வெறி என அத்தனை உணர்வுப்பிழம்பாய் இருந்தது.. இனி காதல் ..கருமாந்திரம் னு பின்னால வா கொலை பண்ணிடுவேன் பொறுக்கி..

ஆத்திரத்தில் கத்தியை கழுத்தில் வைத்த எனக்கு அழுத்தி வைக்க எத்தனை நிமிசமாகும்.. இனி என்னை நினைத்தால் செத்தடா.. எனக்கூறி பலம்கொண்டு தள்ளி விட்டு தன் வீட்டிற்கு ஓடி வந்து தன் அறையில் தாழிட்டுக் கொண்டு கத்தி அழுதாள்.. இன்னும் சில நொடிகள் தாமதமானால் அவளது வாழ்க்கையே சீரழிந்து போயிருக்கும்.. அங்கு விஷ்வாவின் கழுத்திலிருந்து லேசாக இரத்தம் கசிந்துக் கொண்டிருந்தது.. பாரதியின் ஆத்திரத்திற்கு ஆழமாய் வெட்டி இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..

அவளது தாய் கோயிலுக்கு சென்று வந்த பின் அவள் அறைக் கதவை பல முறைத் தட்டியும் பாரதி திறக்கவே இல்லை.. அந்த சமயம் வினி பாரதி.. பாரதி என வாசலில் இருந்து ஏலம் விட்டுக் கொண்டே வந்தாள்.. ஆண்ட்டி பாரதி இல்லையா..? எனக் கேட்க.. ரூம்ல தான் இருக்கா .. டோர் லாக் பண்ணியிருக்கா டா... இன்னும் அந்த கும்பகர்ணி தூக்குறாள் போல.. நீ மேல போய் பார் எனக் கூறிவிட்டு இரவு உணவுக்கான ஏற்பாட்டை தொடங்கலாம் என்று சென்று விட்டார்..

பாரதி .. அடி எருமை ..கதவை திற..இத்தனை நேரம் தூங்குகிறாயா..பாரதி..என்று சிலமுறை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.