(Reading time: 41 - 82 minutes)

முடியாது..அவங்க என்னை பார்த்தே கண்டுபிடித்துடுவாங்க .. ப்பிலீஸ் என பாரதி கேட்க.. சரி இருக்கேன்.. முகமெல்லாம் வீங்கி ரொம்ப டல்லாக இருக்கு.. போ முதலில் குளி என அனுப்பி வைத்தாள் வினி அவளது உணர்வுனை புரிந்துக்கொண்டு அவளோடு இருந்தாள்.. நான் ஏன் இத்தனை நாளாய் இதனை கவனிக்காமல் விட்டேன் என அவள் மீதே ஆத்திரம் வந்தது..

இந்த நிகழ்வுக்குப் பின்னர் வினியின் தந்தைக்கு பணியிடம் மாற்றம் வர அவர்கள் அங்கு குடும்பத்தோடு செல்ல வினி பாரதி வீட்டில் தங்கி இருந்து இருவரும் கல்லூரி வரை ஒன்றாகவே படித்து முடித்தனர்..இதனிடையே பாரதி விஷ்வாவை பார்க்கவோ அவனைப்பற்றி ஏதும் அறிந்திருக்கவோ இல்லை..சரியாக கூறுவதானால் விஷ்வாவை பற்றி அறியவிரும்பவில்லை என்பதே பொருத்தமானதாக இருக்கும்.

அவளது நினைவுச்சக்கரம் தனது சுழற்சியினை நிறுத்த நிஜத்தின் பிடியில் வர்ணம் இழந்த ஓவியமாய் இருளில் நின்றாள்.. ஜன்னல் வழியே விண்மீன்களை வெறித்துப் பார்த்தபடி.. காதல் எத்தனை அழகானது.. அவள் அகராதியில் அகற்றப்பட்ட பின்புலம் கசப்பானதே... பாரதி.. என்ன இது ரூம்ல லைட்டை கூட ஆன் பண்ணாமல் என்ன யோசனை.. என அவளது தாய் கூற எப்போதும் போல் தன்னை நொடியில் சமாளித்துக்கொண்டு இயல்பு நிலைக்கு வந்தாள்.. சிரித்துக் கொண்டே மின்சாரத்தை சேமிக்கும் நல்லெண்ணத்தினால் தான் மம்மி.. எனக் கூறினாள்.. அது சரி .. உன்னைப் போல் ஒருத்தி வீட்டுக்கு இருந்தால் நாடு முன்னேறிவிடும் என கிண்டலாய் கூறிவிட்டு சென்றார்.. பாரதியிற்கு புரிந்தது தாய் தான் இயல்பாய் இருக்கின்றேனா..என்பதை அறியவே வந்து செல்கிறார் என்பதும்.. விஷ்வாவின் நினைவில் அவள் தன் நல்ல பொழுதினை இழக்க விரும்பாமல் வேறு எண்ணங்களில் தன் சிந்தனையை திருப்பினாள் பாரதி...

இரண்டு நாட்களின் பின்னர் பாரதி நூலகம் சென்று திரும்பும் வேளையில் ஒருவர் தன்னை நோக்கி வருவதை கண்டதும் சற்று தாமத்தித்தாள்.. சற்று அருகில் வந்தவுடன் தான் தெரிந்தது அது விஷ்வா என..அவன் வெகுவாக தோற்றத்தில் மாறியிருந்தான்..ஓ இவன் தானா எண்ணியபடி இருக்க.. ஹாய்.. பாரதி.. நான் யாருன்னு சொல்லும்னு அவசியமில்லைனு நினைக்கிறேன்..என விஷ்வா பேச்சை ஆரம்பிக்க.. ம்ம் புரியுது.. நீங்க என்னைத் தேடி வந்ததன் ரீசன் என்ன ..? என தள்ளிவைத்து பேச..

பாரதி நான் பண்ணிணது மிகப் பெரிய தவறு.. மன்னிப்பு கேட்கும் தகுதி எனக்கில்லை..இருந்தாலும் மன்னித்துவிடு.. நான் பண்ணினது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்பதை புரிந்துக்கொண்டேன்.. என்று விஷ்வா கூற..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.