(Reading time: 41 - 82 minutes)

கையால் பொத்தி ஹேய்... சத்தம் போடாதே... நான் தான்... நீ போடும் கூச்சலில் வீட்டில் எல்லோரும் வந்துடுவாங்க.. என மெதுவாக கூறவே நிலமை புரிந்தது அவளுக்கு.. வேறு வழியின்றி அவன் கைகளை தட்டிவிட்டு அவள் போக முற்படுகையில் அவள் கரங்களை இறுக்க பற்றி பாரதி என நிறுத்த ..

விஷ்வா என்ன பண்ற ..கையை விடு..வலிக்குதுடா..விடு... விஷ்வா திஸ் ஈஸ் யுவர் லிமிட்..நீ ரொம்ப ஓவரா போற... இது எல்லாம் நல்லதிற்கில்லை என விஷ்வாவிடம் சீர..

ஹேய் சும்மா கத்தாதே.. நான் உன்னை லவ் பண்றேன் .. நீ அதை எக்சப்ட் பண்ணியே ஆகனும்..நீ என்னடான்னா என்னை அவொய்ட் பண்ற.. திமிரா பேசுற.. என்னடி ஓவரா சீன் போடுற.. என விஷ்வா அகங்காரமாய் பேச..

ச்சீ..! இதெல்லாம் லவ்னு சொல்லாத கேவலமாக இருக்கு ..போகும் போதும் வரும் போதும் வழியை மறைத்து லந்து பண்றது..டபல் மீனிங்ல பேசுறது..சொல்லவே கூச்சமாக இருக்கு.. விஷமத்தோடு அசிங்கமாக பார்க்கிறது.. ஏன்டா என்னை இப்படி டாச்சர் பண்ற.. என்று சொல்லும் போதே அவள் குரல் கரகரத்து வலிவிழக்கத்தான் செய்தது..இப்போதெல்லாம் உன்னை பார்த்தாலே பயமா தான் இருக்கு.. நீ ஏன் லவ்னு உன் கேரக்டரையே இழக்குற..என பாரதி கூற...

ஓ அப்போ நான் பார்க்கும் அர்த்தம் கூட புரியுது..மேம்க்கு என் காதல் மட்டும் புரியலையா..? என பதிலுக்கு கேட்டான் விஷ்வா...

என் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு..விஷ்வா ..அதை அட்வான்டேஜ் ஆக எடுத்துக்காதே.. நான் ஏன் இன்னும் வீட்ல சொல்லாமல் அமைதியாக இருக்கேன்னு தெரியுமா.. உனக்கு எங்க புரிய போகுது இத்தனை நாள் உனக்கு எடுத்து சொன்னதெல்லாம் சாத்தானுக்கு வேதம் ஓடியது போல வேஸ்ட் தானே...

ஒன்னு புரிந்துக்கொள் இது லவ்வுன்னு கண்மூடித்தனமாக நடந்துக்குற வயசும் கிடையாது.. அதற்கான பக்குவமும் கிடையாது உனக்கும் சரி எனக்கும் சரி...நமக்குள்ள என்ன பிரச்சினை நடந்தாலும் நம்ம இரண்டு குடும்பத்தின் நிம்மதியும் போய்டும்.. ப்பிலீஸ் .. இதோடு எல்லாத்தையும் விட்டுவிடேன்.. என பாரதி தனிவாய் மிகத் தெளிவாய்க் கூறினாள்...

விஷ்வா மிக அமைதியாய் கேட்டுவிட்டு நான் முன்பு போல் மாறினால் என்னை ஏற்றுக்கொள்வாயா..? பதில் சொல்லிட்டு போ என பழைய பல்லவியைப் பாட ச்சே.. உன்னையெல்லாம் திருத்தவே முடியாது .. உன்னோட பேசுவதே வேஸ்ட்.. என கோபமாய் கூறிவிட்டு சென்றுவிட்டாள்.. விஷ்வாவோ தன்னிலை உணர்வதாய் இல்லை..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.