(Reading time: 13 - 25 minutes)

திசை மாறிய பறவை - வளர்மதி

ள மஞ்சள் வெயில் கதிரவன் தன் கடமையை செய்ய தொடங்க, காலை நேர பரபரப்பு அந்த அரசு மனநல மருத்துவமனையில் வேலை செய்யும் அனைவரிடமும் இருந்தது. ஒரு புறத்தில் மருத்துவர்களும் தாதியர்களும் தங்களின் கடமையில் கண்ணும் கருத்துவமாக இருக்க, மற்றொரு புறத்தில் தான் யார் எனும் நிலையை மறந்து தனக்கு தானே பேசி சிரித்த படி இருந்தவர்களை பார்த்த படி இருந்த கவிதாவின் சிந்தனை நேற்று டாக்டர் மதுவிற்கு வந்த தொலைநகலில் இருந்தது.

thisai mariya paravai

“கவிதா நேற்று  நான் சொன்னதுபோல்  இன்னைக்கு சிறைச்சாலையில் இருந்து ஒரு பெண்ணை அழைத்து வருவாங்க. அவர்கள் வந்தால் நேராக என் அறைக்கு அழைத்து வாங்க”.

“சரி டாக்டர்” என தன் வேலையில் மூழ்கினாள்.

மிகவும் அழுத்தமான காலடிகளுடன் நடந்து வந்த இன்ஸ்பெக்டர் சுரேஷ்யுடன்  வில் சேரில் இறுகிய முகத்துடன் அலைபாயும் விழிகளுடன் அமர்த்து இருந்தவளை விநோதமாக பார்த்தாள் கவிதா. அவள் நர்ஸ் ஆக வேலை செய்யும் இத்தனை வருடத்தில் பல நோயாளிகளை பார்த்து இருக்கிறாள் ஆனால் இந்த பெண்ணை பார்க்கையில் அவளுக்கு ஏனோ மனதினில் பயம் தோன்றியது.

கவிதா அந்த பெண்ணையும் உடன் வந்த உதவி போலீசையும் டாக்டர் மதுவின் அறைக்கு வெளியே உள்ள இருக்கையில் காத்திருக்க சொல்லி இன்ஸ்பெக்டர் சுரேஷ்யுடன் உள்ளே சென்றாள்.

“குட் மோர்னிங் டாக்டர் மது”

“குட் மோர்னிங் இன்ஸ்பெக்டர் சுரேஷ்.  அந்த பெண்ணிற்கு இதற்க்கு முன் ட்ரீட்மென்ட் கொடுத்த விவரங்கள் எனக்கு வேண்டும் . அதை பார்த்து தான் அவளுக்கு அதே மருந்தை தொடர வேண்டுமா இல்லை புதுய சிகிச்சை முறையை தொடங்கனுமா என தெரியும்”.

“இந்த கோப்பில் எல்லாமே இருக்கு. டாக்டர் ஒரு சின்ன வேண்டுகோள் முடிந்தால் சரளாவை தனி  அறையில் வைங்க”.

“ஏன்” என்ற கேள்வியாக எதிரில் அமர்ந்து இருந்தவனை பார்க்கையில்

“இவள் இரண்டு ஆடவர்களை கொலை செய்து இருக்கிறாள், அதை அவளும்  ஒத்துக்கொண்டாள். ஆனால் ஏன் கொலை செய்தாள் என்ற கேள்விக்கு பதில் சொல்லக்கிடையாது. மற்றபடி சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த கத்தி, அதில் பதிந்த அவளுடைய கைரேகை சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி மற்றும் சிசிடிவி பதிவுகளை கொண்டு சரளாதான் கொலை செய்ததுன்னு முடிவானது”.

“ம்ம்ம் எப்படி சரளா மனநல சரி இல்லை என்ற முடிவிற்கு வந்திங்க சுரேஷ்”

“சரளாவின் கேஸ் இன்னும் நடைபெற்று கொண்டிருக்கிறது, அதனால் அவள் சிறையில் அடைத்த சில நாள்களுக்கு பிறகு அவளின் நடவடிக்கையில் நிறைய மாற்றம் இருந்தது. மற்ற கைதிகள் போல் இல்லாமல் ரொம்ப விசித்திரமாக இருந்தாள். யாரிடமும் பேசிவது இல்லை, மிகவும் தனிமையை நாடுவாள் அந்த நேரத்தில் அவள் அருகில் யாரும் செல்ல முடியாது, ஒரு முறை அங்கு உள்ள பெண் போலீஸ்சை  தாக்கியதில்  காயம் ஏற்பட்டு மருத்துவனையில் அனுமதிக்க வேண்டிய நிலை வந்தது”.

“அதன் பிறகு நீதிமன்றத்தில் இவளுக்கு இங்கு சிகிச்சை கொடுக்க சொல்லி உத்தரவு. அவள் உண்மையில் மனநல பதிக்க பட்டவளா என தெரியவேண்டும், அதன் பின்னரே அவளுக்கு தண்டனை உறுதி செய்யப்படும்”.

“சரி சுரேஷ். நீதிமன்றத்தில் இரண்டு மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது, அதற்குள் நான் அந்த பெண்ணிற்கு நிலையை பற்றி உங்களுக்கு ரிப்போர்ட் கொடுக்கிறேன்”.

“கவிதா அந்த பெண்ணிற்கு போர்மளிதிஸ் எல்லாம் முடித்து அந்த பெண்ணை கடைசி அறைக்கு அழைத்து போங்க”.

“சரி டாக்டர்”.  இவர்கள் இருவரும் பேசியதை கேட்ட கவிதாவிற்கு சரளாவின் அருகில் செல்ல ஏனோ தயக்கமாக இருந்தது. கடவுள் இட்ட வழி என நினைத்து சரளாவிற்கு தேவையானதை செய்த அவளை அறைக்கு அழைத்து சென்ற பின்னர்  சற்று தள்ளியே நின்று விட்டாள்.

ரளாவின் அறைக்குள் நுழையும் முன்பே சரளாவிற்கு சற்று தள்ளி நின்ற கவிதாவை பார்த்த மதுவிற்கு சிரிப்பு வந்த நிமிடமே அது மயமாய் மறைந்தது.

இருகரங்களால் கால்களை கட்டிய படி அலைபாயும் விழிகளுடன் கட்டிலில் அமர்த்து இருந்த சரளாவை பார்த்த பொது ஏனோ மதுவிற்கு உன் மனதில் என்ன சோகம் பெண்ணே. உன்னை கொலை செய்ய துண்டிய காரணம் என்ன? நினைத்தவள் தன்னையும் அறியாமல் சரளாவின் கைகளை தொட்டாள்.

அலைபாய்ந்த அந்த விழிகள் தெரிந்த கோபத்தை கண்டவள் உடனடியாக தன் கையை விலக்கிக்கொண்டாள்.

“சுரேஷ் இந்த பொண்ணின் உறவினர்கள் யாரவது உடன் வந்து இருகிறார்களா

எனக்கு சில தகவல்கள் தேவை படுத்து.”

“இல்லை மது இவள் பெயர் சரளாவை தவிர எந்த தகவலும் எங்களுக்கு தெரியாது. இது நாள் வரைக்கும் யாரும் இவளை தேடி வந்ததும் இல்லை. பல வகையில் நாங்களும் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறோம்.  நீதிமன்றத்தில் திர்ப்பு வரும் முன்னர் இவளை பற்றிய தகவல்களை திரட்டி விடுவோம்”.

“சரி சுரேஷ் நான் நாளையில் இருந்து ஒருவாரத்திற்கு விடுமுறை. அதன் பிறகு சரளாவின் நிலையை பார்த்து தான்  சிகிச்சையை ஆரம்பிக்க முடியும். உங்களுக்கு சரளாவை பற்றி ஏதும் தகவல் கிடைத்தால் கண்டிப்பாக என்னை தொடர்பு கொண்டு தெரியபடுத்துங்க”.

“கவிதா இந்த மருந்துகளை தொடர்ந்து கொடுங்க”.

“சரி டாக்டர்” என வாய் சொன்னாலும் மனதில் ஒரு வாரத்திற்கு இந்த பெண்ணை எப்படி சமாளிப்பது என நினைத்தவளின் எண்ணத்தை மதுவின் அழைப்பு தடை செய்தது

“கவிதா சரளாவும் மற்ற நோயாளிகள் போல தான். அவளை கண்டு நீ பயப்படாதே! மற்றவர்களை நீ எப்படி கவனிப்பையோ அதே போல் அவளையும் பார்த்துக்கொள். ஆனால் நீ இங்கே வரும் போது உன்னுடன் ஒரு நர்ஸ்சை துணைக்கு அழைத்து வா. ஒரு பாதுகாப்புக்கு தான். புரியுதா”?

“சரி டாக்டர்” என தன் வேலையை பார்க்க சென்றாள்.

நாட்கள் உருண்டு ஓடின ஆனால் சரளாவிடம் ஒரு சில மாற்றம் மட்டுமே காணப்பட்டது. மற்ற மருத்தவர்களை அவள் அருகில் வர அனுமதிப்பதில்லை மாறாக மது, கவிதாவின் பேச்சை மட்டுமே கேட்பதுண்டு. கடந்த சில நாட்களாகவே அவளின் உடல் நிலை மோசமடைந்து வருவதை இன்ஸ்பெக்டர் சுரேஷிடம் தெரிய படுத்தி அவரின் வருக்கைக்காக காத்திருக்க தொடங்கினாள்.

“குட் மோர்னிங் சுரேஷ்.  நேற்றே வருங்கன்னு எதிர் பார்த்தேன்”.

“சரளாவை பற்றி ஒரு தகவல் கிடைத்து, அதை விசாரிக்க நேற்று சென்றால் அவர் ஊரில் இல்லாததால் நாளைக்கு வர சொல்லி இருகாங்க”.

இருவரும் சரளாவின் உடல் நிலையை பற்றி பேசி கொண்டிருக்கையில் சுரேஷ் தன் கையில் உள்ள பைல்லை சரளவில் கட்டிலின் வைத்தான். வேகமா காற்றுக்கு அந்த பைல் திறக்கையில் அதில் உள்ள இருந்த புகைப்படத்தில் சிரித்த படியிருந்த  இளைஞனின் தோற்றம் சரளாவின் கவனத்தை ஈர்த்தது.

ரு மாத காலமாக சுயமாக ஏதும் செய்யாமல் இருந்த சரளா அந்த புகைப்படத்தை எடுத்து பார்த்து கொண்டிருக்கையில் அவள் கண்களில் எல்லை இல்லா கோபமும் வலியும் தெரிந்தது. இதை மதுவும் சுரேஷும் கவனிக்க தவறியதில் சுரேஷின் டிரைவர் அந்த பைலையும் சரளாவின் கையில் இருந்த புகைப்படத்தையும் எடுக்கையில் அவள் வெறி கொண்டவளை போல் கத்த தொடங்கி அந்த டிரைவரின் கழுத்தை நெரிக்க தொடங்கினாள்.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பத்தினால் இருவரும் ஒரு நொடி சிலையென நின்றனர்

முதலில் சுதகரித்தது கவிதா சற்று முன் சரளாவிற்கு எடுத்த மயக்க உசியை மதுவிடம் கொடுக்க, உடனே அந்த ஊசி சரளாவின் கையில் போடப்பட்டது. மயக்க மருந்தின் விரித்தைனால் சரளா அவன் கழுத்தில் இருந்து கைகள் தளர்கையில் சுரேஷின் உதவியால் சரளைவை கட்டிலில் படுக்க வைத்தனர்.

“என்ன டாக்டர் மது மாற்றம் இருக்குன்னு சொன்னிங்க ஆனா அவளுக்கு இன்னும் அந்த வெறித்தனம் இருக்கும் போல இருக்கே” சுரேஷ் மதுவிடம் கேட்க அவளும் அதையே தான் யோசித்து கொண்டிருந்தவள் உடனே திரும்பி அந்த டிரைவரிடம்

“ஏன் அவ உங்க கழுத்தை நெரித்தாள்” என கேட்டாள்.

“காற்றுக்கு பைல் திறந்துவிட்டது அதை எடுக்க வந்தேன்ம்மா அப்போ அந்த பொண்ணின் கையில் போட்டோ இருந்தது அதை வாங்கினப்போ தான் இப்படி” அவர் சொல்லிக்கொண்டு இருக்கையில்

“எங்க அந்த போட்டோவை தாங்க” என வாங்கி அதை கேள்வியாக அந்த புகைப்படத்தை பார்த்து கொண்டுயிருந்தாள்.

“இவன் பெயர் சரவணன், இவனை தான் சரளா கொலை செய்தது”.

இவர்கள் இப்படி பேசிக்கொண்டு இருக்கையில் சரளா மருந்தின் விரித்தினால் தன்னை மறந்து பேச ஆரம்பிக்கையில் இவர்களின் பேச்சு பாதியில் நின்றது.

பல முறை முயன்று இவள் பேசவில்லை என்பதால் மது அமைதியாக கேட்க, சுரேஷ் இவள் ஏன் கொலை செய்தாள் என்ற காரணம் கிடைக்கும் என்று அமைதியா இருந்தான்.

“ஏனம்மா என்னை விட்டு போன. நானே உன்னை கொன்றுவிட்டேன்” என கூரியவள் மனதில் அவள் வாழ்க்கையின் கடந்து வந்த பாதை அத்தனையும் திரைப்படம் போல் ஒளியெரியது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.