(Reading time: 13 - 25 minutes)

 

ரளாவின் தந்தை அவள் சிறு வயதினிலே ஓர் விபத்தில் இறந்து பிறகு உறவினர்கள் அனைவரும் அவர்களிடம் இருந்த ஒதுங்கி கொள்ள, சரளாவின் அம்மா அவர்களின்  உதவி ஏதும் இல்லாமல் அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து சரளாவை வளத்தார். தாயின் கஷ்ட நிலையை உணர்ந்து சரளா தன் படிப்பில் கவனம் செலுத்தியது மட்டும் இல்லாமல், பள்ளிகூடம் முடிந்த பிறகு தன் அம்மாவிற்கு உதவு செய்வாள்.

இது எல்லாம் அவள் கல்லூரியில் சேரும் வரையில் மட்டுமே. புதிய தோழிகள் அவர்களின்  வாழ்க்கை முறையும் அவர்களின் பெற்றோர் கொடுக்கும் சுகந்திரமும் அவளுக்குள் ஒரு வித ஏக்கத்தை கொடுத்தது.

எங்கே தன் மகள் காதல் எனும் சாக்கடையில் விழுந்து விடுவாளோ என்ற பயத்தில் சரளாவின் அம்மா அவளுக்கு விதித்த கட்டுப்பாடும்  அறிவுரைகளும் அவளுக்கு பிடிக்காமல் போனதில் இருவருக்கும் இருந்த இடைவெளி பெரியதானது.

"அப்பா இல்லாமல் உன்னை நான் கஷ்டப்பட்டு வளர்த்து இருக்கேண்டி, எனக்கு நல்ல பெயரை எடுத்து தா. உன் வாழ்க்கையில் நீயே மண்ணை அள்ளி போட்டுகாதே".  இந்த வார்த்தையை அடிக்கடி சொல்லி தங்களின் நிலையை சரளாவிற்கு உணர்த்த முயன்றார். ஆனால் இவை எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கை போல் ஆனது.

தோழிகளின் மூலம் அறிமுகமான மாறன் நாளடைவில் அவளுக்கு காதலன் ஆனான். அவனின் அக்கறை அவள் மேல் கொண்ட பாசம் இது எல்லாம் அவளுக்கு அவன் மேல் பைத்தியமாக்கியது.  பல வகையில் அவளின் அம்மாவின் சரளாவிற்கு செய்த எச்சரிக்கை காற்றில் பறக்க விட, காதலன் மேல் உள்ள நம்பிக்கையில் அவள் தன்னையே அவனிடம் இழந்தாள். சரளா எனும் பூவின் தேன் குடித்த அந்த வண்டு வேறு ஒரு மலரை தேடி செல்ல அவளிடம்  பெற்றோரிடம் பேசி சம்மதம் வாங்கி வருகிறேன்  என பொய்யான தகவலை சொல்லி சென்றுவிட்டான்.

மகளின் சோர்த்த நிலை அந்த தாயிக்கு கவலையை கொடுக்க உருட்டி மிரட்டி விசாரித்ததில் சரளாவின் காதல் கதையில் உருவான குழந்தை பற்றி தெரிந்த போது அதிர்ந்து போனார்.

“பாவி மகளே உன்னிடம் படித்து சொன்னேண்டி எங்கையாவது என் பேச்சை கேட்டியா. உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்கணும் தானே என் உயிரை கையில் பிடிச்சி இருந்தேன், என் நம்பிக்கை பொய்யாகிவிட்டதே” என கதறி அழுதவரின் இதயம் பலவினத்தால் அது தன் துடிப்பை நிறுத்திக்கொண்டது. 

அம்மாவின் இறப்பிற்கு பிறகு உலக வாழ்க்கையும் உறவினர்களையும் பற்றியும் அவளால் புரிந்துக்கொள்ள முடிந்தது. தன் அம்மாவின் இறப்பிற்கு தானே காரணம் என நினைத்து அவளுள் குற்ற உணர்ச்சி மேலானது.

மாறனின் பற்றி எந்த தகவலும் கிடைக்கதினால் சரளா படிப்பை நிறுத்திக்கொண்டு ஒரு காப்பகத்தில் சென்ற போது அங்கு உள்ள நிர்வாகி சரளாவிடம்

“இக்குழந்தை பிறந்த பிறகு,  குழந்தை இல்லாத பெற்றோருக்கு தத்து கொடுக்கணும். அதில் உனக்கு சம்மதம் இருந்தால் நீ இங்கு தங்கலாம். அதன் பின் உன் படிப்பை தொடர நாங்கள் உனக்கு உதவி செய்வோம்”  என சொன்னவரிடம்

“ஒரு வேளை மாறன் வந்தால் நீங்க குழந்தையை தத்து குடுக்க சொல்ல மாட்டிங்க தானே” என கேட்டவளை  பரிதாபமாக பார்த்தார் அந்த நிர்வாகி.

"அந்த பையன் வந்தால் கண்டிப்பாக நான் உங்கள் இருவருக்கும் திருமணம் செய்து உன் பிள்ளையை உன்னிடம் கொடுத்து விடுவேன் சொன்னவருக்கு தெரியும் விட்டு சென்றவன் மீண்டும் வர மாட்டான் என்று. அங்கு இவளை போல் ஏமாந்து வரும் பெண்கள் பலர் உள்ளனர். அவர்களும் ஆரம்பத்தில் இங்கு வரும் போது கேட்டும் கேள்வி இது என அவருக்கு தெரியும்.

குழந்தை பிறக்கும் வரை மாறன் வருவான் என்ற நம்பிக்கை இருந்த சரளாவிற்கு நாள் அடைவில் குறைந்து  கொண்டே  சென்றது. ஒவ்வொரு நாளும் அவனை எதிர் பார்த்து சோர்ந்து போன நிலையில் மனதினில் தன்கென்று ஒரு கற்பனை உலகத்தை அமைத்து அதில் மாறன் மற்றும் அவர்களின் குழந்தை என  வாழ்ந்து வந்தாள்.

சரளா அவளது கையில் உள்ள மூன்று  மாத குழந்தையை பார்த்துக் கொண்டிருக்க அவளது கைகள்  தலை முதல் பாதம் வரை வருடிக்கொண்டிருந்தது. இன்னும் எத்தனை நாட்களுக்கு அவளுக்கு அந்த பாக்கியம் கிடக்கும் என்று அவளுக்கு தெரியாதே. கையில் இருந்த குழந்தையை படுக்கையில் வைத்து விட்டு, அவசரமாக அவளது கைபேசியை தேட தொடங்கினாள்.

பல மதமாய் உபகயத்தில் இல்லாத அவளது கைதொலைபேசி உயிர்பித்த சில நோடிகளில் சார்ஜ் குறைவாக இருப்பதை காட்ட உடனடியாக அதை சார்ஜில் போட்ட பின், குழந்தையை துக்கி அழகாக படம் பிடிக்க தாயின் செயலை உணர்ந்த பிள்ளை எல்லா படங்களுக்கும் அழகாக சிரித்து.

பிறந்த மூன்று மாத குழந்தையை ஒரு குடும்பத்திடம் தத்து கொடுக்கும் போது முழுவதும்மாக உடைந்து போனாள். யாருக்கும் தெரியாமல் அவள் எடுத்த அந்த புகைப்படமே அவளின் நினைவு சின்னம்.

அந்த காப்பகத்திற்கு வரும் முதியவர் ஒருவர் இவளுக்கு ச்போன்செர் செய்து வேறு ஒரு கல்லூரியில் அவளது படிப்பை தொடர உதவி செய்தார்.  அருகினில் இருக்கும் போது உணராத அம்மாவின் அருமையை வாழ்கையை தனியே பயணிக்கும் புரிந்தது தனிமையின் கொடுமையை.

மாறனை பார்த்து விடலாம் என்ற நம்பிக்கையில் எங்கே சென்றாலும் அவளின் கண்கள் அலைபாயும்.  கல்லூரி வாழ்கை முடிந்து வேலைக்கு ஓர் இடத்தில் சென்ற பிறகே அவள்  மாறனை வேறு ஒரு பெண்ணோடு  பார்க்க நேர்ந்தது. முதலில் அதிர்ந்தவள், பின்னர் இவன் தன்னை கைவிட மாட்டான் என நம்பிக்கையில் அவர்களை பின் தொடந்த்து சென்று அவனின் இருப்பிடத்தை அறிந்துக்கொண்டாள்.

ரு வாரமாக அவனை பின் தொடர்ந்த பின்னரே அவன் அவளை ஏமாற்றி இருப்பது புரிந்தது. ஏமாற்றத்தில் வலியில் அவனை பார்க்க சென்றவளுக்கு மாறன் தன் நண்பனுடன் பேசிகொண்டிருப்பதை கேட்ட நேர்ந்தது.

“டேய் மச்சான் எப்போ டா விருந்து வைக்க போற”

“இருடா இப்போ தான் ஒன்னு மாட்டி இருக்கு”

“இப்போ பணத்துக்கு என்னடா பண்ணறது”?

“போன தடவை ஒருத்தி மாட்டி இருந்தா. அவளை தான் ப்ளாக் மேல் பண்ணி பணம் வாங்கணும்”

“சரி… அந்த சரளாவை என்ன பண்ண”

“அவளை எப்போவோ கலுட்டி விட்டாச்சி, சரியான இம்சை டா அவ”

“அப்போ அவகிட்ட பணத்தை கரந்த்திடலமே”

“போடா அவ எங்கையோ போய்விட்டாள். கண்ணில் பட்டாள் உடனே படத்தை பிரிண்ட் பண்ணி எடுக்கணும்”.

அவனின் சுயருபம் தெரிந்ததில் அவன் சொல்லாமல் பல விஷயங்கள் அவளுக்கு புரிந்தது. ஊருக்கு ஒரு பெயரில் பல பெண்களை காதல் எனும் பெயரில் அவர்களை நம்ப வைத்து  நாசம் செய்து அதை விடியோ அல்லது புகைப்படமாய் வைத்து பணம் சம்பாரிப்பது இவர்களின் தொழில் என புரிந்த நொடியில் கோபம் தலைகேற கையில் கிடைத்த பொருளை அவர்களின் மேல் தூக்கி எறிந்தவள். குடி போதையில் இருந்த அவர்கள் சுட்டகரிக்கும் முன் மாறனின் நண்பனை மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டாள். தடுமாறி விழுந்தவன் ஒரு பெரிய கல்லில் அவன் விழுந்து அங்கேயே இறந்து விட்டான்.

பழம் வெட்டும் கத்தியை கொண்டு மாறனை பல முறை குத்தி கொன்ற பின்னர், அவர்களின் கையில் வைத்து இருந்த அனைத்து புகைப்படங்களையும் நெருப்பு வைத்து கொளுத்திய பின்னும் அவளின் கோபம் குறையவில்லை.

அவனின் அருகே சென்று உன்னை நான் நம்பியத்திற்கு நீ எனக்கு பாடம் படித்துக்கொடுத்தாய், அதற்கு நான் உனக்கு பரிசு கொடுத்துவிட்டேன் என கூறிக்கொண்டு இருக்கையில் போலிஸ் அவளை கைது செய்தனர்.

அவளை போல் ஏமாந்த மற்ற பெண்களின் வாழ்க்கையை கேள்வி குறியாக மற்ற அவளுக்கு விருப்பம் இல்லை அதனால் போலீசாரும் வக்கீல்களும் அவளிடம் கேட்ட கேள்விக்கு எந்த பதில் சொல்லவில்லை. குறிப்பாக அவள் ஏன் அந்த புகைப்படங்களை எரித்தால் என யாரிடமும் சொல்லவில்லை.

னைத்தும் கேட்ட முவரின் மனதில் பல எண்ணங்கள் வந்து போனது.  மது மனதில் இவளை நான் குணப்படுத்த முடியாது. அவளின் அம்மாவின் மரணத்திற்கு அவள் தான் காரணம் என  நினைத்து அவளின் குற்ற உணர்சியே தினமும்  கொள்ளுகின்றது, நினைத்ததை ஏதும் சொல்லாமல் சுரேஷின் முகத்தை பார்த்தாள்.

“டாக்டர் மது சரளாவிற்கு மனநல சரில்லை என ரிப்போர்ட் கொடுங்க”, உணர்ச்சி இல்ல குரலில் சொல்லி அந்த அறையை விட்டு வெளியே சென்றான்.

திசை மாறிய இந்த பறவையின் வாழ்க்கையின் அடுத்த அத்தியாத்தை மருத்துவரின் மட்டும் சட்டத்தின் கையில் உள்ளது. கடந்து செல்லும் பாதையை சரியாய் தேர்வு செய்தால் படுகுழியில் விழுவதை தவிர்க்கலாமே.....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.