(Reading time: 13 - 25 minutes)

 

பொதுவாக என்னை மாதிரி உள்ள பெண்கள் குழந்தை பெத்துக்க மாட்டங்க ...அதுக்கு ஒரு காரணம் எங்க தொழிலை அது பாதிக்கும் .. இதைதான் எல்லாரும் உண்மையான காரணம்னு நினைக்கிறாங்க .. ஆனா எங்க மனசுக்குள்ள இருக்குற காரணம் என்ன தெரியுமா ? சமுதாயம்!!

ஆமா... எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்து அவனை நல்ல படியா வளர்த்தாலும் இந்த சமுதாயம் அவனை தாசியின் மகனாகத்தான் பார்க்கும் ,...அவனின் திறமைய விட அவனின் பிறப்புதான் அடுத்தவங்க கண்ணை உறுத்துது. அதுவே பின் பிறந்தா ? சொல்லவே வேணாம் .,...அந்த பெண் பெண்ணாய் மலருரதுக்கு முன்னாடியே எங்க தொழிலுக்கு  அவளை  பயன்படுத்திகுவாங்க.

நாங்க இதுல  இருந்து தப்பிக்க மாட்டோமான்னு வேண்டாத நாள் இல்லை ...ஆனா உங்க கண்ணனுக்கு தெரியாத இருட்டு உலகத்தில் நாங்க இருக்கோம் .. எங்களை வாங்கினவங்க, வித்தவங்க, இப்படி யாருமே எங்களை மாற விடுறது இல்ல ... மிருகங்களின் பசியை தீர்க்க  எங்களையும் ஒரு விலங்கு மாதிரிதான் நடத்துறாங்க.

எனக்கு ஒரே ஒரு ஆசைதான் பா .. என்னை மாதிரி பொண்ணுங்க போலிஸ் கிட்ட பிடிபட்டா, அவளை அடிச்சு , போட்டோ எடுத்து கேவலபடுத்தி தண்டனை கொடுக்குறாங்க.... அதுக்கு பதிலா , அவளை காப்பாத்தி அவளுக்கும் படிப்பு கொடுத்து மறுவாழ்வு தரனும்... நூருல பத்து பேரு கூடவா வாழணும்னு ஆசைப்பட மாட்டங்க ? அவங்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கணும் ...

நீ படி ...படிச்சு பெரிய ஆபீசர் ஆகு ,.... நீயாச்சும்  இந்த சட்டத்தை மாத்து ... அப்பறம்... உன் அம்மா .... அவங்க கிட்ட நான் மன்னிப்பு கேட்டேன்னு சொல்லு...அவங்க பையனை நான் எப்பவும் பிரிக்கலை... இப்போ கூட பத்திரமா அவங்ககிட்டயே கொடுத்துட்டேன் ... அவங்களை மன்னிச்சு ஏத்துக்கோ பா.,... அவங்க  உருவத்துல நான் உன்னோட இருப்பேன் ....

வரேன் கண்ணா "

ஸ்வாகினியின் கடிதம் படித்துவிட்டு, ஸ்தம்பித்து நின்றாள் ருத்ரா ... அருள் " அம்மா " என்று கண்ணீருடன் ஸ்வாகினி வாழ்ந்த வீட்டை தேடி போக, அங்கு அவளின் வீட்டில் பொருட்கள் எல்லாம் களைந்து  இருந்தது ... கண்ணீருடன் அவளின் அறைக்கு சென்றான் ... அங்கு அவன் அவளுக்காக சேர்த்து வைத்த  பணத்தில் வாங்கிய புடவை மெத்தையில்  இருந்தது ... அன்று அவள் சொன்ன வார்த்தைகளை நினைவு கூர்ந்தான்.

" என்னமா பண்ணுரிங்க ? "

" சேலையை மெத்தை மேல போடுறேன் பா "

" ஏன் மா கட்டிகல ? "

" பொதுவா அம்மா வாசம் இருந்தா பிள்ளை நிம்மதியா தூங்கும்னு படுக்கையில தாயோட புடவையை வைப்பாங்க .... இது என் மகன் எனக்கு தந்த புடவை ... இதுல என் மகன் வாசம் இருக்கும்... அப்போ எனக்காக என் மகன் இருக்கன்னு நானும் நிம்மதியா உறங்குவேன் " என்றாள் ... அதை நினைத்து கதறி அழுதான் அருள் .. ஸ்வாகினியின் ஆசையை நிறைவேற்றுவேன் என்று சூளுரைத்து கொண்டான்.

அம்மா அம்மா நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா எனக்காரு அம்மா
தேடிப்பாத்தேனே காணோம் ஒன்ன
கண்ணாமூச்சி ஏன் வா நீ வெளியே
தாயே உயிர் பிரிந்தாயே
என்ன தனியே தவிக்க விட்டாயே
இன்று நீ பாடும் பாட்டுக்கு
நான் தூங்க வேணும்
நான் பாடும் பாட்டுக்கு
தாயே நீ உன் கண்கள் திறந்தாலே போதும்

அம்மா அம்மா நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா எனக்காரு அம்மா

நான் தூங்கும் முன்னே
நீ தூங்கி போனாய்
தாயே என்மேல் உனக்கென்ன கோபம்
கண்ணான கண்ணே... என் தெய்வ பெண்ணே...
கண்ணில் தூசி நீ ஊத வேண்டும்
ஐயோ ஏன் இந்த சாபம்
எல்லாம் என்றோ நான் செய்த பாவம்
பகலும் இரவாகி மயமானதே அம்மா
விளக்குன் துணையின்றி இருளானதே
உயிரின் ஒரு பாதி பறிபோனதே அம்மா
தனிமை இலையானதே
ஓ... அம்மா அம்மா நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா எனக்காரு அம்மா

நான் போன பின்னும்
நீ வாழ வேண்டும்
எந்தன் மூச்சு உனக்குள்ளும் உண்டு
பாலுக்கும் வண்ணம், பூவெல்லாம் வாசம்
நான் வாழும் உலகில் தெய்வங்கள் உண்டு
நீயென் பெருமையின் எல்லை
உந்தன் தந்தை பேர் சொல்லும் பிள்ளை
ஊரும் பிரிவில்லை தயங்காதே என் கண்ணே
உலகம் விளையாட உன் கண்முன்னே
காலம் கரைந்தோடும் உன் வாழ்வில் துணைசேரும்
மீண்டும் நான் உன் பிள்ளை

இந்த கதை யாரையும் தாழ்துவதற்கோ அல்லது உயர்துவதற்கோ நான் எழுதல.. தண்டனை என்பது தப்பு பண்றவங்களை மாத்தணும் ..அப்படி என்றால் இது போன்ற சூழ்நிலையில் உள்ள பெண்களை அந்த உலகத்தில் இருந்து மீட்டு எடுக்கும் பொறுப்பு நீதிதேவதைக்கு இல்லையா ? வாழ்கையே  கொடுமை .., கடவுள் என்னை மட்டும் நிந்தித்துவிட்டான்.., என்று துவண்டு போகும் பலர், இவர்களின் வாழ்கையை பார்த்தாவது தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் ... நாமும் , இவன் நல்லவன் இவன் கெட்டவன் என்று அவசர முடிவெடுத்து முத்திரையிடாமல் சக மனிதனை முதலில் மனிதனாய் பாவிப்போமே !

சூழ்நிலை கைதிகளான அந்த பேதைகளுக்கும், களங்கமில்லா தாய்மைக்கும் என்கதை சமர்ப்பணம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.