(Reading time: 3 - 6 minutes)

பாசமலர் - பாக்யா

"மீரா, மீரா" அவள் கணவன் அழைத்தான்.

"எல்லாம் எடுத்து வைத்து விட்டாய் தானே., grooming kit எங்கே இருக்கு சொல்லு.காலையில் நான் தான் அப்புறம் தேடனும்" என்று சொன்ன அருண் டெல்லி செல்கிறான்.

"வர 15 days ஆகும் பத்திரம். Okay. take care" என கிளம்பி விட்டான்.

pasamalar

அருண் பெரிய நிறுவனம் ஒன்றில் வைஸ்-ப்ரெசிடெண்ட் ஆக இருந்தான். கம்பெனியில் பெரிய வீடும் கொடுத்திருந்தனர். மீராவின் தந்தையும் காலமாகிய பின் மாதத்தில் 20 நாட்கள் அவள் தனியாகவே இருக்க வேண்டி இருந்தது. அருண் சென்னையில் இருந்தாலும் காலையில் சென்றால் இரவு தான் வருவான்.

ரு நாள் வேலை எல்லாம் முடித்து ஆன்மீக புத்தகத்தை படிக்கும் போது மீராவின் தம்பி கிஷோரே போன் செய்தான். அவன் மகன் சர்வேஸ் சென்னை வருவதாகவும் அங்கு கல்லூரியில் சேர்ந்து படிக்க முடிவு எடுத்திருப்பதாக கூற அவளுக்கு மிகவும் சந்தோசம் அடைந்தாள். சர்வேஸ் USA வில் வளர்ந்தவன். ஆனால் சென்னை யில் Engineering - Architecture சேர்ந்தான்.

ஒரு வாரத்தில் சர்வேஸ் வந்து விட வீடே கல கல வென மாறியது. சர்வேஸ் அவன் ஜூனியர் காலேஜ் இல் நடந்த நிகழ்வுகளை ஹாசியம் கலந்து சொல்லவதும், அவனுடைய அங்கிலம் கலந்த தமிழ் மீராவுக்கு சுவாரசியமாக இருந்தது.

மீராவும் சிறிய வயதில் கிஷோர் உடன் அடித்த லூட்டிகளும் அவன் செய்த குறும்புகளும் சொல்ல சர்வேஷும் எல்லாவற்றையும் ரசித்தான்.

அவன் தங்கை சமானாவிடம் "hi saman you know what i came to know more about dad from அத்தை."

"அத்தை, அத்தை இன்னும் தோசை. சூப்பர் சட்னி."

"இரு வரேன் சர்வேஸ்", என மீரா கூறினாள்.

அவனுக்கு ரவா தோசை அவனுக்கு பிடித்த டிபன். கர கர வென ரோஸ்ட் செய்த தோசை எடுத்து பரிமாறினாள். கூடவே வெங்காய சட்னியும் போட்டாள்.

மீராவுக்கு 10 வயது குறைந்தது போல இருந்தாள். இருக்காதா பின்னே, அவளுக்கு ஒரு அண்ணன் , ஒரு தம்பி , ஒரு தங்கையும் இருந்தனர். தம்பி அமெரிக்காவில் வேலை கிடைத்து அங்கு சென்று விட, தங்கையும் கல்யாணம் ஆகி அட்லாண்டாவில் செட்டில் ஆகி விட்டாள்.

மீராவின் அண்ணனோ கர்ம பூமி எனவும் இந்தியாவே சிறந்தது என்று கூற தம்பி கிஷோரோ வெளி நாட்டில் no pollution என்று அவன் பெருமை பேச, மீரா 2 பேருக்கும் ஜால்ரா போடுவாள். ஏனெனில் அவளுக்கு 2 பேரும் வேண்டும். அனாவசிய வாக்கு வாதம் வேண்டாம் என்பது அவள் கருத்து. அவள் கணவன் இதில் எல்லாம் தலை இடுவதில்லை.

போக, இருவரும் இவளிடம் தான் சொல்வார்களே தவிர நேரில் பார்க்கும் போது மற்றது பேசி விடுவார்கள்.

இப்பொழுது கிஷோரின் மகன் சென்னையில் படிக்க கிருஷ்ணாவின் மகன் M.s செய்ய அட்லாண்டா சென்று விட்டான்.

முதல் ஒரு மாதம் முடிந்தது. சர்வேஸ் எங்கே மீண்டும் அவன் ஊருக்கே சென்று விடுவானோ என பயந்தாள். ஆனால் அவன் adjust , adapt செய்தது மிக்க மகழ்ச்சி அடைந்தாள். ஒரு நாள் அவனுக்கு பரிமாறிய படி சர்வேஸ் ,

"உனக்கு சென்னை பிடித்துவிட்டதா செல்லம் என கேட்க

அவன் உடனே "yep” என்று முதலில் சொன்னான்.

பிறகு சர்வேஸ்,

"சென்னை is good . ஆனால் நீ paavam தானே அத்தை. அப்பா ஒரு நாள் போனில் சுமி அத்தையோடு பேசும்போது, மீரா பாவம் அவள் எப்பொழுதும் தனியாகவே இருக்கிறாள். அத்தானும் எப்பொழுதும் பிஸி. மீராவுக்கு குழந்தை வேறு இல்லை. தனியாகவே இருக்கிறாள் என்று கூறியதை கேட்டேன். அதனால் நான் இங்கு வந்து விட்டேன்" என்றான்.

மீராவுக்கு கண்கள் கலங்கியது.

இந்த மலரை பாசமலர் என்று தான் கூறவேண்டும்.

 

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.