(Reading time: 14 - 28 minutes)

கொஞ்சம் அமைதி அடைந்தவளாக

"தேவை இல்லாம உங்க வாழ்க்கைய எனக்காக வீணாக்காதீங்க."

"என்ன பேச்சு சித்ரா இது?"

"நான் நல்ல பொண்ணு இல்லை ரஞ்சித். உங்களுக்கு எப்படி சொல்லி புரியவைப்பேன்?"

"நீ எப்படி பட்ட பெண்ணா இருந்தாலும் நீ தான் என் மனைவி."

"என்னால உங்க கூட மனைவியா வாழ முடியாது. நல்ல நண்பனா இருந்தே திருமண வாழ்க்கையின் அழகை காட்டிய உங்களுக்கு நான் தகுதி ஆனவள் இல்லை ரஞ்சித்."

"தேவை இல்லாம பேசாத. உன் பழைய நினைவுகளை அழித்து விடு. நீ மாசற்றவள் என்று எனக்கு தெரியும்."

"என்ன தெரியும்?"

"நீ முதுகலை பட்டதாரி என்று தெரியும். நீ ஒரு நிறுவனத்தின் சீனியர் மேனேஜர் பதவி வகித்தவள் என்று தெரியும். முக்கியமாக பிரபு உன்னை காதலித்தது தெரியும்."

"ரஞ்சித்....... நான்.........."

"நீ அவனை திரும்பியும் பார்க்கவில்லை என்றும் தெரியும்."

"..............."

"இன்னும் சொல்லவா?"

"..........."

"பிரபு உன்னிடம் நல்லவன் போல் நடித்து உன்னை காதலிப்பதாக சொல்லி உன் பின்னால் சுற்றியது தெரியும். உன்னை பெண் கேட்டு உன் வீடு வந்ததும் தெரியும். உங்கள் வீட்டில் அவனை அடித்து துரத்தியதும் தெரியும்."

"ரஞ்சித்............."

"இன்னும் கேள் சித்து........... உனக்காக பார்த்த மாப்பிள்ளையிடம் உன்னை பற்றி தவறாக கூறியதும் அதனால் நடக்க இருந்த உன் நிச்சயதாம்பூலம் நின்றதும் தெரியும்."

"தெரிந்துமா என்னை................"

"ஒரு மாப்பிள்ளையிடம் சொன்னதை அடுத்த மாப்பிள்ளை வீட்டில் சொல்ல மாட்டான் என்று என்ன நிச்சயம் சித்ரா?"

"அப்படி என்றால் உங்களையும்.............."

"ஆம்.......... என்னையும் சந்தித்தான். உன் புகைப்படங்களை என்னிடம் தந்தான். அதுவரை உன்னை பார்க்காத நான் அன்று தான் உன்னை முதலில் பார்த்தேன். கண்டவுடன் காதல் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை தான். இருப்பினும் உன் முகத்தை கண்டதும் உன்னை நேரில் பார்க்கும் ஆவல் மேலோங்கியது. உன் கண்கள் பேசும் கண்கள் சித்து."

"போதும் உங்கள் ரசனை.. வேறு என்ன சொன்னான்?"

"ம்ம்......... நீ அவனை காதலிப்பதாகவும், உன் தந்தையின் கட்டாயத்தினால் தான் இந்த கல்யாணத்திற்கு நீ சம்மதம் தெரிவித்ததாகவும் கூறினான். உன்னால் அவன் இல்லால் இருக்க முடியாதாம். நீ எழுதியதாக என்னிடம் ஒரு கடிதத்தையும் கொடுத்தான். புத்திசாலி தான் அவனும். கடிதத்தின் நகல் மட்டுமே என்னிடம் கொடுக்கப்பட்டது. என் காலில் விழாத குறையாக திருமணத்தை நிறுத்த சொன்னான். முடியாது என்றால் கல்யாண நாள் அன்று நேரில் வந்து ஆர்பாட்டம் செய்வேன் என்றும் கூறினான்."

"ஐயோ கடவுளே.............. நான் எந்த தவறும் செய்யவில்லையே."

"நீயும் திருமண நிச்சயம் முடிந்த நாளில் இருந்து என்னுடன் தொலைபேசியில் கூட பேசவில்லை என்றதும் உனக்கும் அவன் மேல் இஷ்டம் என்று நினைத்து அமைதியாக தான் இருந்தேன். எப்படி இந்த திருமணத்தை நிறுத்துவது என்று தீவிரமாகவும் சிந்தித்தேன். ஆனால் உன் முகம் அதில் இருந்த கண்கள் உண்மை பேசியது. உன்னிடம் தவறு இல்லை என்று என் மனம் திரும்ப திரும்ப கூறியது. அதனால் நானே நேரில் வந்து உன் பெற்றோரை சந்தித்தேன். உன்னையும் தொலைவில் இருந்தே கண்காணித்தேன். உன் முகமே காட்டியது உனக்கு அவனை பிடிக்கவில்லை என்று."

"ம்ம்ம்..............."

"என்ன ம்ம்ம்..................."

"ஒன்றுமில்லை.... நீங்கள் சொல்லுங்கள்."

"இப்படி பக்கத்தில் வந்து உட்காருவதுதானே.அப்போதுதான் எனக்கு சொல்ல வசதியாக இருக்கும்.........."

"இல்லை இங்கேயே..............."

"எங்கே?"

"சரி போ நான் சொல்லவில்லை.."

மெதுவாக ரஞ்சித் அருகில் அமர்ந்து,

"உங்களுக்கு என் மேல் சந்தேகம் வரவில்லையா?"

சிரித்தபடியே,

"இல்லவே இல்லை. என்னவள் மீது எனக்கு ஏன் சந்தேகம். அது என்னையே சந்தேகபடுவது போல் அல்லவா ஆகிவிடும்."

"......................"

"உன்னை பிடித்த பிறகு இன்னொருவனுக்கு விட்டு கொடுக்க நான் என்ன மடையனா? அவன் போக்கிலே விட்டேன். அவன் சொல்வதை எல்லாம் நம்புவது போல் நடித்தேன். அவன் கொடுத்த புகைப்படத்தை தவிர கடிதங்கள் அனைத்தையும் எரித்தேன். உன்னை என் அருகிலேயே வைத்திருந்தேன்."

"எப்படி?"

"இப்படி........." என்று அவன் பர்சில் இருக்கும் அவள் படத்தை காண்பித்தான். கண்களில் கண்ணீரோடு அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவனை கட்டிக்கொள்ள மனம் துடித்தது. அவள் அழுகையை நிறுத்தி தோழ் சாய்த்து ஆறுதல் கூற நினைத்த அவன் கைகளை அடக்கினான்.

"அப்பறம் எப்படி இந்த திருமணம் நடந்தது. அவன் வரவில்லையே நம் கல்யாணத்தன்று?"

"என் நண்பன் ஒருவன் போலீசில் இருக்கின்றான். அவன் உதவியோடு அவனை இரண்டு நாள் மட்டும் காவலில் வைக்க ஏற்பாடு செய்தேன். மேலும் அவனை சார்ந்த யாராலும் உனக்கு துன்பம் வர கூடாது என்று சில காவலர்கள் நம் திருமணத்தின் அன்று என் நண்பனின் வேண்டுகோளுக்காக வந்திருந்தனர்."

"எனக்காகவா?"

"ம்ம்.... ", என்று அவளை போல் தலை அசைத்தான் ரஞ்சித்.

"என்னை எப்படி எல்லாம் துன்புறுத்தினான் தெரியுமா? என் நண்பர்களிடம் கூட என்னை பேச விடவில்லை. எல்லோரிடமும் என்னை பற்றி கேவலமாக கூறினான். என்னால் தாங்கி கொள்ளவே முடியவில்லை. என்னை பற்றி எதுவும் சொல்லாமல் உங்களுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர் என்று தான் நினைத்தேன். யாரிடமும் பேச பிடிக்கவில்லை. எங்காவது ஓடிவிடலாம் என்று கூட நினைத்தேன். எனக்கெல்லாம் கல்யாணம் தேவை தானா என்று கூட அழுதேன். என் நண்பர்கள் யாருமே என்னுடன் பேசவில்லை, எல்லோரும் என்னை தவறாக நினைத்து விட்டார்கள்."

"யார் சொன்னது அப்படி?"

"எனக்கு தான் தெரியுமே?"

னக்கு என்னதான் தெரியும்? இந்த ரஞ்சித்தின் அன்பு புரிந்ததா? பக்கத்தில் இருந்த என் அன்பே புரியவில்லை பின்னர் தொலைவில் இருக்கும் அவர்கள் அன்பு உனக்கு எப்படி புரியும்? நீ மக்கு தானே?"

"என்ன?"

"நீ தான் என் மக்கு பொண்டாட்டி ஆச்சே". என் மொபைல் எடுத்து பார். தினமும் உன் நலம் குறித்து விசாரிக்காத உன் நண்பர்கள் யாராவது இருக்கின்றனரா என்று?"

"என் நண்பர்கள் உங்களுக்கு எப்படி?'

"எப்படியோ.................

"சொல்லுங்கள் ப்ளீஸ்" என்று அவன் கன்னம் தடவி கேட்டாள்.

"இப்படி எல்லாம் கேட்டால் எப்படி சொல்லுவேன்", என்று ரஞ்சித் கிறங்கினான்.

வெட்கத்தால் முதல் முறையாக அவள் முகம் சிவந்தது.

"ஐயோ சித்து கொள்ளாத டீ என்னைய. முடியல என்னால."

"....................."

"உன் நண்பர்கள் சுகன்யா, ரம்யா, ப்ரீத்தி, ஷோபனா, சந்துரு, கிருஷ்ணா.... லிஸ்ட் சரியா?"

"ம்ம்......"

"எல்லாரும் தினமும் எனக்கு மெசேஜ் அனுப்பி உன்னை பற்றி விசாரிப்பாங்க. நம்ம கல்யாண வீடியோ இவங்க எல்லாருக்கும் போய்டுச்சி. எல்லாரும் நம்ம கல்யாணத்த பார்த்தாச்சு. உனக்கு அவங்க அனுப்பின பரிசு எல்லாம் அந்த அறையில இருக்கு."

"உங்களுக்கு எப்படி இவங்கள தெரியும்?"

"உன் அம்மா தான் சொன்னாங்க".

"என்னால எதையும் நம்ப முடியல.."

"நான் வேணும்னா ஒரு முத்தம் கொடுக்கவா?"

"ஐயோ வேண்டாம்."

"ஏன் வேண்டாம்?"

"என்னைய நீங்க முழுசா நம்பறீங்களா?"

"நீ வேற நான் வேற இல்லை சித்து. உன்னை எப்போவுமே சந்தேகபடமாட்டேன். ஆனால் இப்படி தள்ளியே இருந்தா சந்தேகம் வரத்தான் செய்யும்? அப்பறம் என்னைய குற்றம் சொல்ல கூடாது."

"சந்தேகம் மட்டும் வேண்டாமே, ப்ளீஸ்."

"அப்போ மாமாவ கட்டி பிடிச்சி ஒரு முத்தம் குடு.."

"ரஞ்சித்...."

"சித்து ப்ளீஸ்டீ. இதுலயும் என் பொறுமையா சோதிக்காத."

"ஐ லவ் யு ரஞ்சித்."

"ஹேய் என்ன சொன்ன? சொன்னது நீ தானா? சொல் சொல்", என்று பாடல் பாட ஆரம்பித்தான் ரஞ்சித்.

வெட்கம் தாளாமல் அவன் மார்பில் புதைந்தாள் சித்ரா. மனதில் இருந்த பாரம் இறங்கி இவன் என்னுடையவன் தான் என்று முழுமையாக நம்பினால் சித்ரா. ரஞ்சித் கூறியது போல் மீண்டும் விடுமுறை கிடைத்ததும் தன் தாய் தந்தையோடு சித்ராவின் பெற்றோரையும் வரவழைத்தான். முறைப்படி பெரியவர்கள் அவர்களின் தனிகுடித்தனத்திற்கு ஏற்பாடு செய்தனர். அதே நாளில் சித்ராவின் நண்பர்கள் அனைவரையும் அழைத்து விருந்து கொடுத்து தன் ஆசை மனைவியை சந்தோஷத்தில் தினறவைத்தான். ரஞ்சித்தோடு சித்ராவின் இல்லற வாழ்வு சுகமாக அமைந்தது அது போல் சித்ராவின் நண்பர்களோடு விட்டு போன உறவு மீண்டும் மலர்ந்தது. மனைவியின் முகத்தில் சந்தோஷத்தை மட்டுமே காண நினைத்து வாழ்ந்தான் ரஞ்சித். ரஞ்சித்தின் காதல் திருமணத்திற்கு பின் மட்டும் அல்ல திருமணத்திற்கு முன்னால் துவங்கியது. இவர்களின் காதல் அடையாளமாக இன்னும் ஐந்து மாதங்களில் குட்டி சித்ரா அல்லது குட்டி ரஞ்சித் அவர்கள் இல்லத்தை அலங்கரிக்க வரப்போகின்றது.

This is entry #45 of the current on-going short story contest! Please visit the contest page to know more about the contest

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.