(Reading time: 7 - 13 minutes)

ஏன் இந்த எண்ணங்கள்

உண்டோ இதற்கு அர்த்தங்கள்

இருக்கிறாளா என்று நித்தம் தேடி

இப்படி நான் ஏங்கலாமோ! (32)

 

சுழலில் சிக்கிய விண்மீனென

சதுரங்கத்தில் உருண்டிடும் பகடையென

விதியின் வீச்சில் கலங்கிய மதி

விரைவில் அடைந்திடுவரோ நிம்மதி (33)

 

இளையவர் நிலையோ இப்படி

பெற்றவர் தவிப்போ மேலும் ஒரு படி

அவர்கள் விருப்பம் கேளாது செய்வது

சரியோ என்று சஞ்சலம் உண்டாகுது (34)

 

சுற்றமும் நட்பும் சூழ அதே

சந்நிதியில் செய்திடுவோம் சம்பந்தம் 

சிறியவர் மறுப்பாரோ அனைவரின் முன்னிலையில்

சந்தேகம் வேண்டாம் அனைத்தும் அவன் கையில்(35)

 

வானுயர்ந்த கோபுர கசலங்கள்

வண்ணக் கோலமிட்ட மணி மண்டபங்கள்

வாழ்த்த காத்திருந்த பேரழகு சிற்பங்கள்

வானமும் பார்த்திருந்தது இன்னும் ஓரிரு கணங்கள் (36)

 

பூஜை நடக்கும் மண்டபம் அங்கு

பிரகாரம் சுற்றி வந்துவிடு விரைந்து

பெற்றோர் பணித்திட சரியென்றாள்

பாத அடிகள் செலுத்தியது எங்கென்று  அவளறியாள்(37)

 

அங்கொரு வேள்வி அதில் பங்கேற்கிறோம்

ஆரம்பித்து வைக்க முன் செல்கிறோம்

சடுதியில் சேர்ந்திடு தலையசைத்தான்

கண்கள் எத்திசையில் போகச் சொன்னது அவனறியான் (38)

 

தீபாராதனை நேரம் மணியோசை முழங்க

தேர் போல் எதிரில் வந்த தேவனைக் கண் நோக்க

சிலிர்த்தது நெஞ்சம் வான் மழைச் சாரல்

சறுக்கியது  காலடி பூங்கொடியை  சாய்த்தது தென்றல் (39)

 

மோகனச் சிலை இவளோ  என வியக்க

மெல்ல அவள்  நிலம் நோக்கி சரிய

இடக்கரம் கொண்டு இடை பற்றிய  பொழுது

இடி மின்னல் தேகம் தாக்கிய அதிர்வு(40)

 

ஐம்புலனும் செயல் இழக்க

ஐம்பூதம் அதைக் கண்டு ரசிக்க

இயற்கை வெற்றிக் களிப்பில் திளைக்க

இங்கு மன்மத ரகசியங்கள் மொட்டவிழ (41)

 

இவன் தான் இவனே தான்

இருகண்கள் காணத் துடித்தது இவனைத்  தான்

எத்தனைக் கோடி ஆண்கள் இவ்வுலகில்

என்னை ஒற்றைப்  பார்வையில் வீழ்த்தியது இவன் மட்டும் தான்

இத்தனை நாள் இதயம் பூட்டி வைத்தது இவன் உருவம் தான் (42)

 

இவள் தான் இவளே தான்

கைகள் அணைக்கத் தவித்தது இவளைத் தான்

பாரெங்கும் பெண்கள் எண்ணிலடங்கா மலர்கள்

பட்டு ஸ்பரிசத்தால் அனலை அள்ளித் தெளித்தது இவள் மட்டும் தான்

இத்தனை நாள் நினைவு அடை காத்தது இவள் பிம்பம்  தான் (43)

 

பெற்றவரோ நிறைவான நிம்மதியில்

நிச்சயம் இனிதே நடந்திட்ட மகிழ்ச்சியில்

நடப்பதெல்லாம் நனவே தானா

நாயகன் நாயகி மீளா  இன்ப அதிர்ச்சியில் (44)

 

மன்மத  இரகசியம் ஆரம்பம்

மஹாரதி  இளமாறன் ஜென்மபந்தம்

இப்பிறவியில்  காதலாகி கசிந்துருகி பிரவாகம்(45)

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.