(Reading time: 8 - 16 minutes)

குட் மார்னிங் மதன்.

குட் மார்னிங், என்ன பண்ணிகிட்டு இருக்க.

நைட் தூங்கனதே ரொம்ப லேட். இப்போ தான் எழுந்தேன், டீ குடிக்கணும் போல இருக்கு, ஆனா ரொம்ப நேரம் ஆகிடுச்சு, ஹாஸ்டல இப்போ டீ குடிக்க முடியாது.

சரி கீழ வா, போய் டீ குடிச்சிட்டு வரலாம்.

என்னது?!

நான் உன் ஹாஸ்டலுக்கு வெளிய நிக்கறேன். வா டீ குடிக்க போலாம்.

நான் இப்போவேவா,எப்படி?

அப்படியே உன் பட்டியலா நைட் சூட் மேல ஒரு குர்தா போட்டு வந்தேனே 2 நிமிஷம் தான் ஆகும்.

(பதில பாரு). நீங்க ஏன் வந்தீங்க இப்போ?.

நான் போட்ட டீ சரியாய் வரல, அதான் நல்ல டீ குடிக்கலாம்னு வந்தேன். சீக்கரம் வா, இல்லேன்னா பிரேக்பாஸ்ட் டைம் ஆகிடும்.

பரவாயில்லையே சீக்கரம் வந்துட்டியே.

டீ நல்லா இருக்கு இல்ல இங்க.

ஆமா எனக்கு அடிக்கடி தேவைப்படும்னு நினைக்கறேன்.

ஏன்?

நீ இந்த நேரத்துக்கு எழுந்து டீ போட்டு குடுத்து, என் வருங்காலத்தை நெனச்சா திகிலா இருக்கே.

ஹ ஹா. இப்போவே பயந்தா எப்படி மதன். நீங்க டீ போட்டு குடுத்தா கூட எனக்கு ஓகே தான்.

அடிப்பாவி.

இப்போ எதுக்கு ஊருக்கு போற

சும்மா தான் அதுக்கெல்லாம் உங்கிட்ட காரணம் சொல்லமுடியாது

கோவை:

வாங்க வாங்க, வாங்க அத்தை,

நிச்சயத்துக்கு போடற செயின் டிசைன் செலக்ட் பண்ண உன்ன கூட்டிட்டு போலாம்னு வந்தேன் நந்தினி.

இதுக்கெல்லாம் நீங்க அலையனுமா, உங்களுக்கு பிடிச்சதா வாங்கினாலே நல்லாதான் அத்தை இருக்கும்.

நீ வேற நானே செலக்சன் ல வீக், அதான் உன்னை கூப்பிடலாம்னு வந்தேன்.   

மேடம் நந்தினி பேருக்கு ஒரு ஆர்டர் வந்து இருக்கு.

இதோ வரேன்.

மொபைல் போன் மதன் தான்அனுப்பி இருக்காரு அத்தை.

ஹலோ மதன்,

சொல்லுங்க மேடம்.

இப்ப எதுக்கு இந்த புது போன். தேவை இல்லாத செலவு.

சரி விடு.

என்ன விடு, கேக்கறேன் இல்ல. ஹலோ ஹலோ, போன வெச்சுட்டாரு .

பேசிகிட்டு இருக்கும் போதே போன்  வெச்சுட்டான, நீ திருப்பி கூப்படாத மா.

என்ன அண்ணி நீங்களே இப்படி சொல்லிதரீங்க(அது ஒன்னும் இல்லைங்க மதன் நந்தினிக்கு குடுத்த டைம் ரெண்டு குடும்பமும் பயங்கர க்ளோஸ் ஆகிட்டாங்க)

அவன் கூப்டா பேசாதன்னு சொன்னாதான் தப்பு அதென்ன பேசிகிட்டு இருக்கும்போது கட் பன்றது.

இவளும் தான் போன் எடுத்தும் இப்படிகேள்வியா கேட்டா மதனுக்கு டென்ஷன் ஆகாதா.

இவங்க ஆள் மாத்தி ஆள் சப்போர்ட் பண்ணதுகுள்ள அவங்க ரெண்டுபேரும் சமாதானமே ஆகிட்டாங்க.

சரி அத்தை கேளம்பலமா, போலாம்.

இந்த வாரம் போய்டு மறுபடியும் கல்யாணத்துக்கு போடற லீவ்கு தான் ஊருக்கு வரியா நந்து ஆமா அத்தை.

இந்த பையன் அதுக்கும் அப்பறம் தான் வரான் என்னதான் பன்றது, இவன் டைம் கேட்டதும் அதெல்லாம் நான் என் பொண்ணுக்கு வேற மாப்பிள்ளை பாத்துக்கறேன்னு சொல்லி இருந்தா அப்பவே கல்யாணம் பண்ணிக்கறேனு சொல்லி இருப்பான்.

இத கேட்டு நத்தினிக்கு இரும்மல் வந்தது உங்களுக்கு தெரியுதா.

ஹலோ மேடம்,

சொல்லுங்க மதன்.

சரி சாயந்தரம் பீச் போலாம் பொறுமையா ரெடி ஆகிட்டு போன் பண்ணு.

சரி சரி.

ஈவ்னிங் சென்னை சிக்னல்

மதன்.........................

சாரி சார் சாரி சார்.

சரி போங்க.

ஹே நந்து ஒன்னும் இல்ல, ரிலாக்ஸ் ரிலாக்ஸ்., என்ன பாரு,இங்க பாரும்மா என்ன.

சோம்பேறி, மேல ஏறி வந்து இருக்கலாம் இல்ல. ஏன் இவளோ பெரிய ரோட அப்படியே கிராஸ் பன்ட்ர.

கத்தாதடி, எல்லாரும் நம்மளையே பாக்கறாங்க, ஹே இவளோ பெரிய ரோட அவங்க போடற கொஞ்ச நேர க்ராஸிங் டைம்ல கிராஸ் பண்ண சோம்பேறியால எப்படி முடியும்

சீக்கரம் கல்யாணம் பண்ணிக்கலாம்டி

நீ தானே லேட்டா பண்ணிக்கலாம்னு சொன்ன போடா.

அடிப்பாவி, கதையவே மாத்தற.

கண்கள் பார்த்தே கவி ஆனேன்

இன்னும் பார்த்தால் எங்கே போவேன்

உன்னாலே கம்பன் தாண்டுவேன்

நான் நாளைக்கு ஊருக்கு கெளம்பறேன் மதன், நியாபகம் இருக்கா?

அந்த கொடிய நாள எப்படி மறப்பேன்.

சரி சரி, மறுபடியும் ஆரம்பிக்காதீங்க பாஸ். நாளைக்கு ஸ்டேஷன்ல பாக்கலாம்.

உன் ஆபீஸ்ல எப்படி இவ்வளோ நாள் லீவ் குடுத்தாங்க.

எல்லா பாஸும் உங்கள மாதிரியேவா இருப்பாங்க.

இப்பவே போய் என்ன பண்ண போற நீ, எனக்கு வேற வேலை செம்ம டைட்.

பொய் சொன்னா இப்படித்தான் நீங்க சொன்ன மாதிரியே வேலை அதிகமாகிடுச்சா.

எல்லாம் உன்னாலதான்.

ஹலோ Mr. மதன், நான் நம்ம கல்யாணத்துக்கு தான் போறேன். எதோ கல்யாணத்துக்கு அப்பறம் எங்க அம்மா வீட்டுக்கு போற மாதிரி சீன் போட்றீங்க.

எனக்கு ரெண்டும் ஒன்னுதான்.

போதும் போதும் ட்ரைன் கெளம்ப போகுது

பாரு உனக்கு கம்பெனிக்கு இந்த குட்டி பொண்ணு வேற என்ஜாய்.

பாய் பாய்.

ஆன்டி அந்த அங்கிள் யாரு?

என் ஹஸ்பண்ட் மா (பாரடா)

செப்டம்பர் 5:

பத்திரிக்கை வாசிக்கலாமா,

வாசிங்க,

நிகழும் ஜெய வருடம் ஆவணி மாதம் 21ம் தேதி கோவை நந்தகுமாரன் - மைதிலி மகன் மதன்க்கும், முரளி - தேவி மகள் நந்தினிக்கும் பெரியோர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணம் நடைபெற உள்ளது.

தங்கள் நல்வரவை ஆவலுடன் விரும்பும் குடும்பத்தினர்

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.