(Reading time: 12 - 24 minutes)

"விக்கி. வாட் எ சர்பிரைஸ். ஏண்டா நீ fb குரூப்ல கூட இல்ல" எனக் கடிந்து கொண்டாள் நந்திதா.

"அதெல்லாம் லாங் ஸ்டோரி. இனி அக்டிவா இருப்பேன்" என்ற போதே அப்பா வந்துவிட

"ஹாய் அங்கிள். எப்படி இருக்கீங்க. ஆண்டி எப்படி இருக்காங்க.. அவங்க வத்தக்குழம்பு டேஸ்ட் இன்னும் நாக்குலே இருக்கு" என்றான்.

அவனிடம் உரையாடி விட்டு வீட்டுக்கு வாடா என அழைப்பு விடுத்து தந்தையுடன் காரில் ஏறினாள்.

வீட்டிற்கு செல்லும் அந்த 20 நிமிடங்களில் மீண்டும் நினைவு சாகரத்தில்.

"அம்மா மத்தியானம்  என் பிரண்ட்ஸ் எல்லோரும் வராங்க லஞ்சுக்கு" என திடீரென சொல்ல

பாங்க் கணக்குளைப் பார்த்துக் கொண்டிருந்த ரத்னா," என்னடா இப்போ சொல்ற. மணி பத்தரை. எத்தன பேர் வராங்க. எத்தன மணிக்கு" என கேட்டார்.

"விக்கி கிட்ட பேசிட்டு இருந்தேன்.. சண்டே கூட அதே எல்லோ வாட்டர் தான்னு புலம்பினான்... அதன் என் வீட்டுக்கு வாங்க எல்லோரும்ன்னு சொல்லிட்டேன்.. விக்கி, மணி, அசோக், ரோகிணி, ஹேமா அப்றம் சஞ்சனா எல்லோரும் வராங்க ஒன் ஒ கிளாக்" என்று விட்டு

"நான் போய் என் ரூம்ல என் பெயிண்டிங் எல்லாம் எடுத்து வைக்கிறேன் காட்ட" என்று சென்று விட்டாள்.

இவர் வேற இப்போன்னு பார்த்து தான் மதுரைக்கு போகணுமா, இந்த அக்கவுண்ட்ஸ் எல்லாம் இனி எப்போ பார்க்கிறது என மூட்டைக் கட்டி வைத்தார் ரத்னா..

"ஆன்டி. யு ஆர் கிரேட்" என்று  சஞ்சனா  வந்து கட்டிக் கொண்டாள்.

அவள் வீடு ஜெய்ப்பூரில் இருப்பதால் வருடத்திற்கு ஓர் முறை தான் வீட்டுக்கு செல்வாள். ரத்னா  சப்பாத்தி , பனீர் மசாலா செய்ததை சப்புக் கொட்டி சாப்பிட்டு ஆனந்த கண்ணீர் உகுத்தாள்.

அம்மா  நிஜம்மா எவ்ளோ கிரேட். என் பிரண்ட்ஸ் கூட எப்போவும் சொல்லுவாங்களே" உன் அம்மா ஜாலியா பழகறாங்க. சோ பிரன்ட்லி. பேங்க் மனேஜெர் வேற.. எவ்ளோ  டேஸ்டா  சமைக்கிறாங்க. ஆல் ரவுண்டர் உன் அம்மா. சூப்பர் டி" நான் தான் அம்மாவை டேக் இட் பார் கிராண்டட்ன்னு எடுத்துகிட்டேன்.

வீடு வந்துவிட." அம்மா" "அம்மா" என ஒரே நேரத்தில் இரு குரல்கள். நந்திதா தன் அம்மாவை விழிக்க, அவளை  அம்மாவாக்கிய  இரண்டு  வயது நித்திலா தாவி அணைத்துக் கொண்டாள். 

இரவு சாப்பிட்டு முடித்ததும் லாப்டாப் திறந்து அமர்ந்த நொடி நித்திலா ஓடி வந்து," டாடிட்ட பேசலாம்" எனவும் ஸ்கைப்பில் சந்தோஷ் உடன் உரையாடினார்கள்.

சந்தோஷ் ஒரு முக்கியமான பிஸ்னஸ் விஷயமாக நியு யார்க் சென்றிருக்கிறான். சந்தோஷின் அம்மாவும் அப்பாவும் அங்கு சிகாகோவில் இருக்கும் மகள் வீட்டிற்கு அப்படியே சென்று வரலாம் என உடன் சென்றிருந்தார்கள்.

இந்த பிராஜெக்ட் காரணமாக நந்திதா உடன் செல்ல முடியவில்லை. அதனால் மகளை தாய் வீட்டில் இரு வாரங்கள் நந்திதா விட்டிருந்தாள்.

ஆபீசில் இருந்து மெயில் செக் செய்ய விடாமல் மகள் மடியில் அமர்ந்து லாப்டாப்பில் விளையாட அதில் லயித்துப் போய் ஆபீஸ் வேலை கூட நினைவின்றி இருந்தாள். ஒரு வாரம் குழந்தைய பார்க்காம இருந்திருக்கேன் என தன்னையே கடிந்து கொண்டாள்.

பால் கொண்டு வந்த ரத்னா," நித்தி குட்டி. அம்மாக்கு வேலை இருக்காம்.  இன்னிக்கு அம்மம்மா உனக்கு பிள்ளையார் கதை சொல்றேன். வா " எனவும் ஒரு நொடி நந்திதாவின் முகத்தைப் பார்த்தது குழந்தை.

என்ன சொல்ல போறா  நித்தி. நான் பிடிவாதம் பிடிச்ச மாதிரி அம்மாவை விட்டு வர முடியாதுன்னு சொல்ல போறாளா என பரிதவிப்பாய் இருந்தாள் நந்திதா.

"அம்மா வேல இக்கா. அம்மம்மா ஸ்டோரி சொல்றா... போட்டா" என தலை சரித்து மகள் கேட்கவும் அருகில் இருந்த தன் அன்னையையும்  மகளோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.

இரவு நித்திலா உறங்கிய பின் ," அம்மா நா எவ்ளோ பேட் கர்ல்லா சின்ன வயசில் இருந்திருக்கேன்.. ரெண்டு வயசில் என் பொண்ணுக்கு இருக்கிற அறிவு கூட எனக்கு அப்போ காலேஜ் படிச்ச போதும் கூட இல்லைல” என்றாள் நந்திதா.

அவள் தலையை மெல்ல வருடிக் கொடுத்த ரத்னா," அப்படி இல்ல நந்துக்குட்டி. அப்போ உன் பிரண்ட்ஸ் அம்மா எல்லாம் மோஸ்ட்லி ஹோம் மேக்கர்ஸ். அவங்க வீட்ல இருந்து கவனிச்ச மாதிரி உனக்கு என்னால டைம் ஸ்பென்ட் பண்ண முடில" என்று ஆரம்பித்தார்.

"இருந்தாலும் நா ரொம்ப கஷ்டப்படுத்திருக்கேன்ல.. நித்தி உங்ககிட்ட ரெண்டு வாரமா எவ்ளோ சமத்தா இருக்கா. பிராஜக்ட் பைனல் லீவு போடா முடில. என் ப்ரமோஷன் அபெக்ட் ஆகும்ன்னு உங்ககிட்ட விட்டுட்டேன். உங்கள அப்போ டிரைனிங் போக விடமா நான்…. என்னால உங்க ப்ரோமோஷன் " நந்திதா கண் கலங்க

"நந்துகுட்டி. கூட்டத்திலும் கஷ்டப்பட்டு டிரைன் பிடிச்சு வீக் என்ட் வந்திருக்க. கூட்டம்னாலே உனக்கு அலர்ஜி" என்று அம்மா கேட்க

"நித்தி கண்ணுக்குள்ளே நின்னா மா. அவள இப்போ தான் பர்ஸ்ட் டைம் பிரிஞ்சு இருக்கேன்" என நந்திதா சொல்ல

" எனக்கும் அப்படி தான்டா இருந்துச்சு. நானே உனக்கு எல்லாம் செஞ்சு பழக்கிட்டேன் வேற. நித்தி எங்ககிட்ட, அண்ணா மதினி கிட்ட ராஜி கிட்ட எல்லாம் இருந்து பழகிருக்கா" என்று மகளை சாமாதானம் செய்தார்.

"விக்கி பார்த்தேன் மா உங்க வத்தக்குழம்பு மறக்கல அவன். அப்போ கூட உங்க வேலை கெடுத்து நான்……”

“வேலை செய்யற  இடத்தில எவ்வளவு கஷ்டம் நீங்களும் அனுபவிச்சுருபீங்க.. வீட்லேயும் நான் படுத்தி எடுத்திருக்கேன். நித்தி பார்த்துக்க அத்தை மாமா ராஜி எல்லோரும் இருக்காங்க. நீங்க தனிய கஷ்டப் பட்டீங்க. அதுவும் டாடி  மதுரை ஆபீஸ்க்கு டிரன்ச்பார் ஆனா போதெல்லாம்” மகள் வருந்துவதைக் கண்டு தாய்மனம் தவித்தது.

" நந்துகுட்டி. நீ ரொம்ப நல்ல பொண்ணு டா. என்மேல பாசமா உரிமையா இருந்ததால அப்படி பிடிவாதம் பிடிச்ச. ஸ்கூல உன் மிஸ் எல்லாம்  நந்து படிப்பில மட்டும் இல்ல குணத்திலும் டாப். எல்லோருக்கும் உதவி செய்வா.. வெரி நைஸ் சைல்ட்ன்னு சொல்லும் போது அவ்ளோ  பெருமையா இருக்கும்.

"உன் பிரண்ட்ஸ் அந்த குழந்தைங்க எல்லோரும் வயிறார அன்னிக்கு சாப்ட்டு என்ன கட்டி பிடிச்சு தேங்க்ஸ் சொல்லிட்டு போனாங்க. நந்திதா எங்களுக்கு பிரண்டா இருக்க நாங்க குடுத்து வச்சிருக்கோம்னு சொன்னங்க. புகுந்த வீட்லேயும் நல்ல பேர் வாங்கி குடுத்திருக்க.. பெருமையா இருக்கு... ஒரு தாய்க்கு இதை விட என்ன பெரிய சந்தோஷம் இருக்க முடியும்" என்று பெருமிதமாக சொன்னார்.

தன் குழந்தைகளின் நலனையே எப்போதும் நினைத்து, அவர்கள் வெற்றியில் தன் அடையாளம் கண்டு அவர்களே உலகமென வாழ்பவள் அல்லவா அன்னை

"போங்க மா நீங்க என்ன எப்போவும் விட்டுக் கொடுக்கவே மாட்டீங்க" என்று சிணுங்கினாள்.

"என் பொண்ண நான் எப்போவும் விட்டுக் கொடுக்கவே மாட்டேன் தான்.. சரி  தூங்கு" என்று தூங்க வைத்து விட்டு சென்றார்.

காலை விரைவாக எழுந்து தனது பிராஜெக்ட் வேலை முடித்து நேராக கிச்சனுக்குள் நுழைந்தாள்.

"இன்னிக்கு உங்களுக்கு ரெஸ்ட்ம்மா. நானும் என் பொண்ணும் சமையல் செய்ய போறோம்.. சமைக்கலாமா நித்தி" என மகளிடம் ஹை பை கொடுத்துக் கொண்டாள்.

சாயந்திரம் ஷாப்பிங் சென்றவள் மதர்ஸ் டேக்கு தனது அன்னைக்கு மிக பிடித்த புத்தகங்கள் வாங்கி வந்தாள்.

மறுநாள் ஞாயிறு," ஹப்பி மதர்ஸ் டே அம்மா" என தன் அம்மாவைக் கட்டிக் கொண்டு முத்தமிட்டு புத்தகங்கள் பரிசைக் கொடுத்து தன் அன்னையின் கண்களைப் பொத்தி அழைத்துச் சென்றாள்.

ஒரு அழகிய சித்திரம். ஒரு சிறிய குஞ்சு கூட்டினில் இருந்து எட்டிப் பார்க்க தாய்ப் பறவை தன் சிறகுகளால் அணைத்தது போல் தத்ரூபமாக தீட்டி இருந்தாள்.

நித்திலா அங்கு வந்து இவர்கள் கவனத்தைக் கலைக்க அவளது கையில் கசங்கிய காகிதம்.பிரித்து பார்த்தால் குழந்தையின் மழலையாய் கிறுக்கிய சித்திரத்தில் அதே போல் ஒரு  தாய் பறவையும் குஞ்சுப் பறவையும்.

"அம்மா இங்க பாருங்களேன் நித்திக் குட்டி எவ்ளோ சூப்பர்ரா வரைஞ்சிருக்கா.. நைட் நான் வரஞ்சத பார்த்துட்டே இருந்தா மா. எவ்ளோ அப்சர்வேஷன் பாருங்க" என பூரிப்பை சந்தோஷத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மகிழ்ந்தாள் நந்திதா.

ஒரு அர்த்தம் பொதிந்த பார்வையுடன் மகளையும் பேத்தியையும் அணைத்துக் கொண்டார் ரத்னா.

"அம்மா ஐ லவ் யு". நந்திதா சொல்ல அவளை தொடர்ந்தாள் நித்திலாவும்

“அம்மா ஐ லவ் யு”

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.