(Reading time: 10 - 19 minutes)

தை மறைத்தவாறு “யார் நீ?” என்று குறுஞ்சிரிப்போடு கேட்டேன். “ஏன் இன்னும் நீ என்னை யாரென்று அறியவில்லையா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டான். “நீ என் பாதி” என்று என் மனம் சொல்லுயதென்று அவனிடம் சொல்ல இயலாத நான், “உன் பெயர் என்ன?” என்று வினவினேன். “இன்று முதல் ஷிவானியின் காதலனாகிருந்து, சில நாட்களில் அவளின் கணவனாகப்போகும் என் பெயர் மஞ்சு (மஞ்சுநாத்)” என்று சொல்லி என்னை ஆனந்தத்தின் உச்சிக்கு தள்ளினான். அவனின் பதில்கள் என்னை மேலும் கேள்வி கேட்காமல் இருக்கச்செய்தது. மௌனமாய் அவனை பார்த்துச் சிரித்து கொண்டே நின்றேன். சட்டென்று என் கையை பற்றிய அவன் “வா, உன் தாய் மறுபடியும் திட்டுவதற்க்கு முன் வீட்டிற்கு செல்வோம் நேரமாகிறது” என்று சொல்லி என்னை அழைத்துச் சென்றான்.

அவன் வசம் விழுந்த நான், ஏதும் கேட்க வில்லை அவனை குறித்து, ஏதும் சொல்லவுமில்லை என்னைக் குறித்து. மஞ்சுவின் பார்வையும், பேச்சும் என் மனம் சொல்லியதை போல் அவன் என் பாதி என்பதை உறுதி செய்தது. உதட்டில் சிரிப்போடு, மனதில் ஆனந்தத்தோடு காதலில் தொலைந்திருந்தென்னை, அவனே என் வீடு சேர்த்தான். வீட்டில் அனைவரும் அவனை பார்த்து “யார்?” என்று வினவினார்கள். “என் மஞ்சு” என்று சொல்லி அவன் முகம் பார்த்து நாணத்தோடு சிரித்தேன். என் பதில் கேட்ட அனைவரும் என் மீது பல கேள்விக்கணைகளை தொடுத்தனர். அவையனைத்திர்க்கும் அவனே பதில் சொன்னான். எனக்கெந்த கேள்விகளோ, பதில்களோ காதில் விழவில்லை. அவனைப் பார்த்த கணம்முதல் சிரிப்பதை மட்டுமே அறிந்த நான் சிரித்துக் கொண்டே தோட்டத்து பூச்செடியின் பக்கத்தில் அமர்ந்தேன்.

“இதுதான் காதல் மயக்கமா?” என்று என்னை என் மனம் வினவியது. என் சொல்வது என்றறியாமல் திணறினேன். “இல்லை நீ மஞ்சுவின் மயகத்தில் உள்ளாய்” என்று சொல்லி என் தோளில் கைப் பதித்தான் மஞ்சு. அவன் முகம் பார்த்து சிரித்த நான், “உனக்கு என் மனக்குரல் கேட்குமா”? என்று கேட்க முற்ப்பட்டேன். “நீ கேட்கவே வேண்டாமடி என் ஷிவானி செல்லமே!” என்று சொல்லி கொண்டே என் உதட்டின் மீது விறல் வைத்து அழுத்திய அவன் “இன்னும், நீ உன் சந்தேகத்தை வினவவேயில்லை” என்று சொல்லிச் சிரித்தான். ஆனந்தத்தில் அவனை அணைத்துக்கொண்டேன். அவனை நீங்குமெண்ணம் என்னுள் எழவில்லை. இருக்கி அணைத்து அவனுள் என்னைத்தொலைத்து நின்றேன்.

மௌனமாய் இருந்த என் காதோறமாய் சாய்ந்து, “இரண்டு நாட்களுக்குப் பிறகு, “நீ, என்னை இப்படி விடாமல் நாள் முழுவதும் கட்டி அணைத்திருந்தால் எனக்கு எந்த தடையுமில்லை. அப்போது நாம், நம்வீட்டில் இருப்போம். ஆனால், இது உன் வீடு. எல்லோரும் நம்மையே பார்ப்பதால் கூச்சமாய் உள்ளது” என்று முனகினான். இதை கேட்ட எனக்கு அப்போதுதான் வீட்டிலிருப்பவர்களின் நினைவேத் தோன்றியது. அவனை விலக்கி நின்றேன் “இன்னும் இரண்டு நாட்களில் நமக்கு திருமணம். சம்மதமா?” என்று புன்னகையோடு கேட்டான்.

முகத்தில் வெட்கத்தோடு சிரித்துகொண்டே வீட்டினுள்ளே ஓடினேன். அவன் மயக்கத்திலிருந்த எனக்கு இரண்டு நாட்கள் கழிந்த்தே தெரியவில்லை. என் மஞ்சுவை மணக்கும் அந்த நாள், நேரம் வந்ததென்று நினைக்கும்பொழுதே மனதுள் துள்ளலாயிருந்தது. அவன் கண்களிலிருக்கும் காந்தத்தில் நிறந்தரமாய் சிக்கிகொள்ளும் முயற்ச்சியோடு அவன் என் கழுத்தில் இட்டமாலைமயை ஏற்று, நானும் அவன் முகம் பார்த்தபடி மாலையை கையில் ஏந்தி, அவன் கழுத்தில் இடமுயலும் பொழுது ஒரு சத்தம், “ஷிவானி…..ஷிவானி…..” என்று, சிறுப்பதட்டம் ஏற்ப்பட்ட்து. அதையும் மீறி, அவன் முகம் பார்த்து மாலையிடும் முயற்ச்சியில் ஈடுபட்டேன்.

முதலில் கேட்டதைவிட சத்தமாக, “ஷிவானி.. எழுந்திருமா. முகூர்த்ததுக்கு நேரமாகுது. என்ன பசங்களோ, எழுந்திருங்க. எல்லோரும் போய் குளிச்சி கிள்ம்புங்க. இல்லனா உங்கத்தோழி கல்யாணத்த, நீங்க கனவுலதா பாக்கனும்” என்று சொல்லி தோழியின்த்தாய் எங்களை எழுப்பினார். எழுந்தமர்ந்த எனக்கு ஏதுமே புரியாமல் போனது. “என்னமா ஷிவானி? இப்புடி தூங்கரியே உன் கல்யாணத்துக்காவது, சரியான நேரத்துல எழுந்திருப்பியா? இல்ல கனவுலையே கல்யாண்ம் பண்ணிக்கப்போரியா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார் தோழியின் தாய்.

அப்போதுதான் எனக்கு புரிந்தது என் கல்யாணக்கனவெல்லாம் தூக்கத்தில் வந்த கனவென்று. தூக்கத்தில் வந்தது கனவாக இருந்தாலும் “என் மஞ்சுவிற்காக கனவு நிஜமாகி, என் காதல் கைகூடாதா?” என்று ஏக்கமெழுந்தது. அன்று முதல் எனக்கு என் காதலன் மஞ்சுவின் நினைவும், அவனோடு நான் செய்யவிருந்த கல்யாணமுமே கனவாகவும், வாழ்வாகவுமானது. இன்றும் “மஞ்சுவின் மயகத்தில் நான்………”

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.