(Reading time: 13 - 25 minutes)

ப்ரோக்ராம் போய்டு இருக்றப்ப எங்க பக்கத்துல நீ இல்லைன்றத பார்த்துட்டுதான் அவர் உன்னை தேடியே வந்துருப்பார்….யாரோ தனியா இருந்தா அவருக்கு என்ன? தன் ஆள்னதும் டென்ஷனாகுது பாரு அவருக்கு…உனக்கு தலைவலின்னா அவருக்கு தாங்கலை…..அதுவும் ரொம்ப முடியலைனா மட்டும் டேப்ளட் போடனுமாம்…..அது ஒரு பயோகெமிஸ்ட்டுக்கு தெரியாதோமோ….அவர் சொல்லித்தான் தெரியுமாமோ….” ப்ரபாவின் வாத்தைகள் சில்லென்ற தீ மழை செய்தது இவள்வரையில்.

முதன் முறையாக அவன் தன்னை விரும்புகிறானோ என்ற எண்ணம் வந்தது அவள் இதய இடுக்குகளில். அதன் பின் அவனது ஒவ்வொரு வருகைக்கும் செயலுக்கும் சிந்தனைக்கும் இவளே காரணமாகினாள் ப்ரபாவை பொறுத்தவரை.

ஒவ்வொருமுறை அவன் பார்வைக்குட்பட்டபோதெல்லாம்,  சாரல் குளியல் கொண்டாள் சமர்ப்பணா.

ன்று வியாழக்கிழமை. மென்சந்தன நிற பட்டில் சிவப்புநிற பார்டரிட்ட பாவாடை சிவப்பு நிற தாவணியில் வந்தாள் சமர்ப்பணா. தலையில் மல்லிகை சரம். “சமர் சார்க்கு சும்மாவே நீ இருந்தா குளிர் அடிக்கும் பனி பெய்யும்….இதுல தாவணி வேற…. அப்டியே வந்து அள்ளிக்க….” ப்ரபா பேசிமுடிக்கும் முன் இவள் பார்த்து முறைத்தாள். எல்லை தாண்டி போகிறதே பேச்சு.

 “ப்ரபா திஸ் இஸ் டூ மச்…” இவள் சீறலில் அவள் பேச்சை நிறுத்திக் கொண்டாள் அப்பொழுது.

ஆனாலும் லேபுக்கு அட்டென்ட் ஷீட் புக்கை எடுப்பதற்காக சென்ற போது இவள் மனதிற்குள் தந்தன் தந்தன தாளம், சுக ராகம் அதில் சந்தன மல்லிகை வாசம். அவனது லேபை இவள் கடக்க வேண்டி வரும். ஒரு வேளை அவன் அங்கே இருக்கலாம்….இவளது ஒற்றை முத்து கொலுசொலி அறை வாசல் கடக்கும் நேரம் அவன் திரும்பியும் பார்க்கலாம்……அவன் பார்வைக்குட்படும் படலம் சுக வரம்.

அவன் லேபை தாண்டி இவள் லேபுக்கே சென்றுவிட்டாள். எங்குமில்லை அவன். சீ போடா….சிணுங்கியது மனம். ‘உன் மேல எனக்கு கோபம்….’ மனதிற்குள் புலம்பிக் கொண்டே லேபிற்குள் இருந்த அலுவலக அறைக்குள் கவனமின்றி  நுழைந்தாள். 

அந்த அறை மேஜையில் இருக்கும் கம்ப்யூட்டரை சற்று தலை குனிந்து நின்றபடி குடைந்து கொண்டிருந்தான் தன் வலக்கையால் சமர். இடக்கையை மேஜை மீது ஊன்றி படு ஸ்டைலாய் அவன். அவளுக்குப் பிடித்த ப்ளாக் பேண்ட்ஸ் ஒயிட் ஷர்ட்ஸில்.

எதிர்பாரா இன்ப அதிர்ச்சியில் ஒரு கணம் தூக்கிப் போட்டது உடல். எதையோ உணர்ந்து நிமிர்ந்து பார்த்தான் அவனும்.

அதே நேரம் சட சட என்று தொடங்கிய ஒரு சத்தம் டொம் என்ற வெடிப்பொலியுடன் புகையோடு கண்கரிக்க லேபிலிருந்த மாணவர்கள் இவள் பின்னிருந்து பயங்கரமாய் அலறுவது கேட்கிறது.

இவள் தாவணியில் தீ பிடித்திருக்கிறது என்று இவள் உணர்ந்த நொடி அதைப் பற்றி அவன் இழுத்த விதத்தில் தோள் பகுதியில் இருந்த பின் தெறிக்க அந்த ஜார்ஜட் தாவணி உருவி  அவன் கையோடு சென்றது. அதோடு அவன் இழுத்த வேகத்தில் அவன் தோளில் சென்று மோதினாள்.

“கெட் அவ்ட் ….எல்லோரும் வெளிய போங்க……”அதிர்ச்சியில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி முழு பலத்தில் கத்தியவன் இவளை பிடித்து தரையில் குப்புற தள்ளினான். அதே நேரம் மறு கரத்தில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தாவணியை தரையில் போட்டு காலால் நசுக்கினான்.

தரையோடு தரையாக விழுந்து கிடந்தாலும் நன்றாக புரிகின்றது சமர்பணாவிற்கு இவர்கள் இருவருக்கும் அறையிலிருந்து அலறி வெளியே ஓடிக் கொண்டிருந்தவர்களுக்கும் இடையில் நெருப்பு.

அவசரமாக தன் சட்டையை கழற்றி அவளிடம் நீட்டியவன் இவள் அதை அணியவும் நெருப்பு தொடாத ஒரு ஓரப் பகுதி வழியாய் இவளை இழுத்துக் கொண்டு வெளியே ஓடினான். இவள் எப்பொழுது அழத் தொடங்கினாள் என்றெல்லாம் இவளுக்குத் தெரியாது. ஆனால் வெளியே வந்து தீங்கு தொடமுடியா தூரத்தில் நின்று கொண்டு அவனும் மற்றவர்களும் அவசர அவசரமாக ஃபையர் எக்‌டிங்க்குஷர் மூலம் தீயை அணைக்க போராடுவதைப் பார்த்திருந்த போது அழுது கொண்டிருந்தாள்.

தீ அணைந்தும் சற்று நேரம் பின்புதான் அவன் சட்டையை திருப்பித் தர வேண்டும் அவன் சட்டையின்றி நின்று கொண்டிருக்கிறான் என்பதே உரைக்க ஹாஃஸ்டல் சென்று ஒரு சல்வார் செட் இரவல் வாங்கி உடுத்திக் கொண்டு சமர்ப்பணா அவனைத் தேடி திரும்பி வந்தால் அவன் யாருடைய ஷர்ட்டிலோ நின்றிருந்தான்.

சரி துவைத்துவிட்டு திருப்பிக் கொடுக்கலாம் என்று நினைத்துக் கொண்டாள்.

றுநாள் துவைத்து அயர்ன் செய்த அவன் சட்டையுடன் அவன் முன் போய் நின்ற போது திட்டி தீர்த்துவிட்டான் அவன். “லேபிற்கு சிந்தடிக் ட்ரெஸ் போட்டுவரக்கூடாதுன்னு ரூல் இருக்குதானே…..அதுவும் பின்னால வால் மாதிரி ட்ரஸ்ஸை தொங்கவிட்டுட்டு….அது எதுல பட்டு தீ பிடிக்குன்னு கூட தெரியாம…..” அவன் திட்டின் சாரம்சம். அப்பொழுதுதான் கவனித்தாள் அவன் தன் தாடியை நீக்கி இருந்தான். அப்படியானால்????

“சமர் சார் லவ் பண்ண பொண்ணு வீட்ல லவ்க்கு பயங்கர எதிர்ப்பாம்….அதுல அந்த பொண்ணு வெக்ஸாகி சுசைட் செய்துட்டாம்……அதான் சார் தாடி வச்சுருக்கார்…….” கல்லூரியில் உலவும்  அவன் தாடிக் காரணம் அதுதான்.

மனம் அவனிடம் சமர்ப்பணம்.

டுத்து சில கண்ணாமூச்சி ஆட்டங்களுக்குப் பின் அவனிடம் தன் உள்ளத்தை வெளியிட்டேவிட்டாள் சமர்ப்பணா.

“அஸ் அ லெக்ச்சர்ரா ஒரு ஸ்டூண்ட்ட எப்டி பழகனுமோ அப்டித்தான் உன்ட்டயும் பழகினேனே தவிர நத்திங் எல்ஸ்..…இதெல்லாம் கூட இருக்கவங்க தூண்டிவிடுறதால வர்ற குழப்பம்….”

சில நாட்களில் வேலையைவிட்டு சென்றும்விட்டான்.

அடுத்து வந்த காலங்களில் அவன் சொன்னதுதான் உண்மை என இவளுமே உணர்ந்து கொண்டாள்.  

நாட்கள் நகர என்னவெல்லாமோ நடந்துவிட்டது. அப்பாவும் அண்ணனும் ஒரு தீ விபத்தில் இறந்து போக ஒரே நாளில் அனாதையாகிப் போனாள் இவள். வீடும் பேங்கில் இருந்த சில லட்சங்களையும் தவிர எதுவுமில்லை இவளுக்கென. ஆக வீட்டின் தரை தளத்தை வாடகைக்கு விட்டு, மாத வருமானத்திற்கு வழி செய்து, ப்யோகெமிஃஸ்ற்றி கனவுகளை கைவிட்டு பேங்க் எக்ஸாம் எழுதி இன்று பேங்கில் வேலை. கிடைப்பதை ஏற்க பழகிவிட்டாள்.

இவளது கஷ்ட்டகாலத்தில் உடன் நின்ற உண்மை தோழி ஆத்மிகா தன் கணவரின் உறவினர் வகையில் நல்ல வரன் இருப்பதாக சமீபகாலமாக அறித்து வருவதின் விளைபயனாய் சரி பார்க்கலாம் என்று இவள் சொன்ன மறுநாள் இவள் எதிரில் வந்து நின்றான் அவன். சமர் ஜெயன் “ஆத்மிகா அண்ணி உன்னைப் பத்தி சொன்னாங்க” என்றபடி.

இன்று உணர்ச்சி வேகத்திலோ, இல்லை தோழி சொல்லியதற்காகவோ என்றில்லாமல் நிதானமாக யோசித்து, இவள் அவன்பின் அரைவேக்காடு மன நிலையில் சுத்திய காலத்திலும் அவன் கடைபிடித்த கண்ணியம், நேர்மை, இன்றைய அவன் பொருளாதார சூழல், ரிசர்ச் சம்பந்தப்பட்ட அவனது சென்ட்ரல் கவர்மென்ட் வேலை எல்லாம் நிதானித்து அவனிடம் மனம் கொடுத்தாள். திருமணம். இனிக்க இனிக்க  துவங்கியது இல்லறம். அவன் கைவளைவிற்குள் தோள் அணைப்பிற்குள் சொர்க்கம்.

அவன் தாடிகதை இவள் சொல்ல வாய்விட்டு சிரித்தான். “சின்னப்பையனா தெரியுதுன்னு தாடி வச்சா லவ்ஃபெய்லியர்….தீ பட்டுட்டுன்னு ஷேவ் செய்தா நெக்ஸ்‌ட் ரொமன்ஸா….?” இவள் மூக்கைப் பிடித்து ஆட்டியவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

ன்று சமர்ப்பணா தன் பாஃஸ்போர்ட் தேவைப்பட தேடமுடிந்த இடத்திலெல்லாம் தேடிக் கிடைக்காமல் எரிச்சலில் கட்டில் காலை உதைக்க எங்கு மறைந்திருந்தென தெரியவில்லை வந்து விழுந்தது அது. ஒரு தம்ப்ஸைஸ் லேமினேட்டட் கார்ட். அவனது ரா ஏஜென்ட் ஐ டி கார்ட். கல்லூரியில் ஆட்கள் இல்லாத அறைகளில், அவன் சம்பந்தம் இல்லா துறைகளில், முன்பு அவன் சுற்றித் திரிந்தது ஞாபகம் வருகிறது. அப்படியானால்???????????

அரவம் உணர்ந்து அறை வாசலைப் பார்த்தால் அவன்.

“சாரி சம்யூ…..உங்க அப்பா மிலிட்டரி சீக்ரெட்டை எனிமீஸ்க்கு விக்றதா இன்ஃபோ….அந்த காலேஜ்கூட உன் அப்பாவோட பினாமியோடதுன்னு நியூஸ்… இன்வெஸ்டிகேட் செய்யதான் அப்போ வந்தேன்…..உங்கப்பா டெத்க்கு பிறகு கேஸ் க்ளோஸ் ஆகிட்டுது….டிபார்ட்மென்ட் சீக்ரெட்ஸ்….இதெல்லாம் வைஃப்ட்ட கூட சொல்ல கூடாதுடா…சாரிடாமா…”

அப்பாவுக்கும், அண்ணனுக்கும் நடந்தது விபத்து அல்ல, அது கொலை. இவளுக்கு மாத்திரமே தெரிந்த ரகசியம் அது!!!!!!!

இப்பொழுது இவன் வந்தது எதற்காக??????????????

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.