(Reading time: 5 - 9 minutes)

சித்ராவுடன் ஒருநாள் - கீர்த்தனா

சித்ரா ஆர்வமாக தொலைக்காட்சியைத் திருப்பி சில்சீ சேனலை வைத்தாள்.அவளுடைய நேர்காணல் ஒளிபரப்பாகும் நேரம்.

அவளுடைய கணவன் மற்றும் இரு குழந்தைகளையும் நேர்காணலை பார்க்க அவசரப்படுத்தி தொலைக்காட்சியின் முன் உட்கார வைத்தாள். ஊரிலுள்ள அனைத்து சொந்தங்களுக்கும், நண்பர்களுக்கும் தொலைபேசி வாயிலாக நேர்காணலை பார்க்க சொல்லி தொல்லைப்படுத்தி முடித்தாயிற்று. எப்படியும் சித்ராவின் மேல் இருக்கும் பயத்தினால் அவர்கள் நிச்சயம் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை சித்ராவிற்கு (பயபுள்ள அவ்ளோ பயமுறுத்தி வைச்சுருக்கு எல்லாத்தையும்).

“மாலை மங்கும் நேரம்

Mikeஎன் கணவன் சமையல் செய்யும் நேரம்

டிவி பார்த்துக்கொண்டே நானும்

ஸ்நேக்ஸ் போதும் என்று தோன்றும் வரை

தின்று கொண்டே இருந்தால் என்ன”

இப்படி ஊர்ல இருக்க எல்லா பாட்டையும் அவங்களுக்கு ஏத்தபடி மாத்தி பாடறதுதான் நம்ம சித்ராவின் வழக்கம். என்னதான் மாத்தி பாடினாலும் அதுல ஒரு உண்மை ஒளிஞ்சிருக்கும்.அதுக்கு உதாரணம் தான் நீங்க மேல பார்த்த வரிகள்.

இப்படிப்பட்ட சித்ராவுடைய ஒரு நாள் எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்க நீங்க ஆர்வமா இருக்கீங்களா ?உங்க கூட நானும் ஆர்வமா காத்திருக்கிறேன்.வாங்க அவங்ககிட்டையே கேட்டு தெரிஞ்சுக்குவோம்.

தொகுப்பாளர்:வணக்கம் சித்ரா மேடம்.முதல்ல உங்களை பத்தி சொல்லுங்க.

சித்ரா:என்னைப் பத்தி சொல்ல பெருசாலா ஒண்ணுமில்லைங்க.எனக்கு ரசம் நல்லா வைக்க தெரியும்.

தொகுப்பாளர்:வாவ்.எவ்ளோ பெரிய விஷயத்தை இவ்ளோ அசால்ட்டா சொல்லிட்டிங்க மேடம்.செம மேடம்.எனக்கு ரசம் வைக்கவே தெரியாது மேடம்.

சித்ரா:நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்க தானே?

தொகுப்பாளர்:ரசம் வைக்க தெரிஞ்ச நீங்க சொல்லியா நான் தப்ப எடுத்துக்க போறேன் மேடம்.நீங்க சொல்லுங்க மேடம்.

சித்ரா:என்னை மேடம்னு கூப்பிடாதீங்க.எனக்கு ஏதோ வயசான பீலிங்க்ஸ் வருது.

தொகுப்பாளர்:அச்சோ சித்து எனக்கும் உங்களை மேடம்னு கூப்பிடவே தோணலை.ஏன்னா நீங்க பார்க்க,பழக  அவ்ளோ யங்கா இருக்கீங்க. நீங்க தப்பா எடுத்துக்குவீங்கனு தான் மேடம் போட்டேன். இனிமேல் போடலை.சாரி சித்து.

சித்ரா:இட்ஸ் ஓகே.நீங்க கேள்வி கேளுங்க.

தொகுப்பாளர்:உங்களுடைய இந்த எனெர்ஜிக்கு காரணம் என்ன?

சித்ரா:என் கணவர் தான்.

(வீட்டில் சித்ராவின் கணவர் பெருமை மற்றும் காதல் கலந்த பார்வையை தன் மனைவி மீது செலுத்தினார்)

தொகுப்பாளர்:சூப்பர் சித்து.ஏன் உங்க கணவரை சொன்னீங்கனு நாங்க தெரிஞ்சுக்கலாமா?

சித்ரா:அவங்க தான் எனக்கு தினம் காலைல காபி போட்டு வந்து என்னை எழுப்புவாங்க.நான் அப்படியே காபி குடிச்சுக்கிட்டே சில்சீல அன்னைக்கு அப்டேட் பண்ணிருக்க ஸ்டோரி படிப்பேன். அப்புறம் அவர் என்கிட்ட மெனு கேட்டு போய் அவரே சமைச்சுடுவார்.அவருக்கு ரசம் மட்டும் வைக்க தெரியாது.அதனால அதை மட்டும் நான் போய் வைச்சுடுவேன்.அப்புறம் அவர் ஆபிஸ் கெளம்பி போய்டுவார்.நான் அப்படியே சில்சீ,பேஸ்புக்,வாட்ஸ்அப்,வீசேட்னு நேரத்தை ஓட்டுவேன்.சாயிந்திரமா என் வீட்டுக்காரரே வந்து நைட்க்கு தோசை ஊத்தி கொடுப்பார் எனக்கும்,என் பசங்களுக்கும்.

(இப்பொழுது சித்ராவின் கணவரின் முகம் போன போக்கை உங்களின் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்)

தொகுப்பாளர்:குட்.குட்.இப்படிப்பட்ட நல்ல கணவரின் பெயரை நாங்கள் தெரிந்து கொள்ளலாமா?

சித்ரா:நான் அவங்களை கைலாஷ்னு பேர் சொல்லி கூப்பிடமாட்டேன்.மத்தவங்க கேட்டாலும் அவங்க பேரை கைலாஷ்னு சொல்ல மாட்டேன்.ஏன்னா நேக்கு வெக்க வெக்கமா வரும் அவங்க பேரை சொல்லறதுக்குள்ள(அட ராமா இந்த கொடுமையெல்லாம் பாக்க வேண்டி இருக்கே).

தொகுப்பாளர்:சரி உங்க மகன்களைப் பற்றி சொல்லுங்க.

சித்ரா:எனக்கு ரெண்டு பசங்க அரவிந்த்,சிவா.அப்படியே ரெண்டு பேரும் என்னை மாறியே பொறந்துட்டாங்க.

தொகுப்பாளர்:ஏன் சித்து பார்க்க உங்களை மாறி இருப்பாங்களா?

சித்ரா:பாக்க மட்டுமில்லை.சேட்டைலையும் தான்.சொல்ற பேச்சை கேக்கவே மாட்டாங்க.இந்த காலத்துல கல்யாணம் பண்ணனும்னா முக்கியமா தோசை ஊத்திக்க தெரிஞ்சுக்கணும்னு கத்துக்க சொன்னா நீங்க பர்ஸ்ட் கத்துக்கோங்கனு என்னை சொல்றாங்க.இத்தனை வருஷத்துக்கபுறம் கத்துக்கிட்டு நான் என்ன பண்ண போறேன்.சொன்ன கேக்கவே மாட்டேன்கிறாங்க.

(இப்பொழுது சித்ராவின் மகன்கள் கொலைவெறியுடன் சித்ராவை பார்த்து கொண்டிருந்தனர்)

தொகுப்பாளர்:மிக்க நன்றி சித்து.உங்க கூட ஒரு மணி நேரம் எப்படி போச்சுனே தெரில. நேயர்களே அடுத்த வாரம் நாம யாரை சந்திக்க போறோம்னு யோசிச்சுக்கிட்டே இருங்க.இப்போ உங்க கூட இருந்து விடை பெறப் போறது உங்க மனோ.நன்றி.வணக்கம்.

(கைலாஷ்,அரவிந்த் மற்றும் சிவாவின் கூட்டணியில் சித்ராவின் நிலையை நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை)

பின்குறிப்பு: இதெல்லாம் ஒரு கதையானு கேக்க கூடாது.  அதேபோல் இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதில்லை.just for fun.சித்து நோ அரிவாள் பார்சல்.சித்ராவின் கணவரோ,மகன்களோ இதைப் படிக்க நேர்ந்தால் என்னை மன்னித்து விடவும்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.