(Reading time: 7 - 14 minutes)

ந்த நிலைமையிலும் பிறந்த வீட்டில் உதவி கேட்கக் கூடாது என்று நினைத்த கார்த்திக்கின் அத்தை 12 வது படித்து முடித்த நித்யாவை மேலே படிக்க வைக்காமல் அவள் தந்தையை பார்த்து கொள்ள காவல் வைத்து விட்டு அவர் உழைக்கச் சென்றார், இப்படி இருக்க படுக்கையில் விழுந்த கணவன் இறந்து போக தன் மகளை கூட்டிக் கொண்டு பிறந்த வீட்டிற்கு வந்துவிட்டார்.

தன் மகளின் வாழ்க்கையை நினைத்து கவலைப்பட்ட கார்த்திக்கின் பாட்டி தன் மகள் வழி பேத்தியை தன் மகன் வழி பேரன் கார்த்திக்கிற்கு மணம் முடித்து வைக்க விரும்பினார்.

ஆனால் கார்த்திக் இதை மறுத்தான், அதற்கு அவனுக்கு இரண்டு காரணங்கள் இருந்தது, ஒன்று அவர்கள் இருவருக்கும் இருந்த பத்து வயது வித்தியாசம் அடுத்து அவர்களுக்குள் இருந்த படிப்பு வித்தியாசம், ஆனால் அவன் பாட்டியின் முடிவை ஒரு கட்டத்திற்கு மேல் அவனால் மறுக்க முடியவில்லை.

சிறு வயதிலேயே தாயை இழந்த கார்த்திக்கும் மனைவியை இழந்த அவன் தந்தையும் படிப்பிலும் தொழிலும் கவனம் செலுத்தமுடிந்தது என்றால் அது அவன் பாட்டி வீட்டையும் அவர்களையும் பார்த்துக் கொண்டதால் தான், அதனால் அவர் பேச்சை அவனால் மறுக்க முடியவில்லை. கார்த்திக் நித்யா திருமணம் நடைப்பெற்றது.

வீட்டு வேலைகளை சிரத்தையாக செய்தாலும் மனைவி என்ற முறையில் கார்த்திக்கின் தேவைகளை பூர்த்தி செய்தாலும் மற்ற நேரங்களில் நத்தை தன் ஓட்டுக்குள் ஒளிந்து கொள்வது போல் ஒடுங்கிக் கொண்டாள், முதலில் அதை கவனிக்காத கார்த்திக் அவள் விலகலை உணர ஆரம்பித்தான். இவனுக்கு இருந்த பண வசதி, வயது வித்தியாசம், படிப்பு குறைவு இவையெல்லாம் ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி இவனிடம் இருந்து அவள் ஒதுங்கி கொள்ள காரணமாக இருந்தது. இரவில் படுக்கையை பகிர்ந்து கொள்ளவும் இவனுக்கு பணிவிடை செய்வதும் தான் மனைவியின் வேலையா என்ன..?? அவளை மாற்ற வேண்டும் என்று இவன் நினைத்தான்.

நித்யாவை மேலே படிக்க கல்லூரியில் சேர்த்துவிட்டான், அதுமட்டுமில்லாமல் வீட்டை நிர்வகிக்கும் பொறுப்பை அவன் பாட்டியிடம் இருந்து வாங்கி நித்யாவிடம் ஒப்படைத்தான், மேலும் வீட்டில் எடுக்க வேண்டிய முக்கியமான முடிவுகளை அவளையே எடுக்கவிட்டான், முதலில் எல்லாவற்றையும் தயக்கமாக செய்த அவள் இந்த ஐந்து வருடங்களில் அனைத்தையும் திறமையாக செய்ய கற்றுக் கொண்டாள்.

இப்போது இவன் மட்டும் நித்யாவின் பேச்சுக்கு தலையாட்டுவதில்லை, அவன் குடும்பமே தலையாட்டுகிறது. இத்தோடு அவள் முன்னேற்றத்திற்கு அவன் தடை விதிக்கவில்லை, அலுவலகத்திலும் அவள் திறமையை காட்டவேண்டும் என்று கார்த்திக் நினைத்தான்.ஆனால் அவள் முடிவெடுத்து விட்டாள், இவன் குழந்தைக்கு முதலில் தாயாக வேண்டுமென்றும் பிறகு தான் மற்றதெல்லாம் என்றும் கூறிவிட்டாள்.

கணவன் பதவியிலிருந்து தந்தை பதவிக்கு உயர்வு கிடைத்தால் யார் தான் மனைவிக்கு அடங்கிப் போகமாட்டார்கள்..??

நித்யாவிற்கு அவள் கணவனை பற்றி தெரியாதா..?? மிகப்பெரிய தொழில் நிறுவனத்தை நடத்தும் தன் கணவனுக்கு தொல்லை செய்து ஒரு சாதாரண வேலையை செய்ய சொல்லி அனுப்புவாளா..?? இதைப்பற்றி தெரியாதவர்கள் என்னென்ன பேசுகிறார்கள்.

அவள் இப்போது இரண்டு குழந்தையை தன் கருவில் சுமக்கும் நிறை மாத கர்ப்பிணி, அவள் கருவுற்றிருந்த போது ஒரு முடிவெடுத்திருந்தாள் நல்லபடியாக பிரசவம் ஆகவேண்டும் என்பதற்காக தன் ஆயுள் முழுவதும் தன்னால் இயன்ற வரை அனாதை குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் உணவு செலவையும் பண்டிகை தினங்களில் ஆடையும் எடுத்து தருவதென, இவன் அனுமதியோடு அதை அவளே செய்து கொண்டும் இருக்கிறாள்.

இப்போது அவளுக்கு நிறைமாதம் என்பதால் இதை மூன்றாம் நபரிடம் ஒப்படைக்க விரும்பாமல் இவனிடம் ஒப்படைத்தாள், அதுவும் தன் மாமனார் ஊரில் இல்லாததால், இதை அறிந்த கார்த்திக்கும் செய்வதாக ஒப்புக்கொண்டு அலுவலக வேலையில் மறந்து விட்டான், இதை அவள் ஞாபகப்படுத்தினாள்.

இதை அறியாத நிலையில் இவனையும் இவன் மனைவியைப் பற்றியும் "யார் என்ன பேசினால்... என்ன". இவனைப் பொறுத்தவரை வீட்டில் எலி.. வெளியில் புலியாக இருப்பதில் இவனுக்கு சந்தோஷமே..!!

This is entry #13 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.