(Reading time: 10 - 19 minutes)

வள் என்னிடம் மீண்டும் பேசிய மகிழ்ச்சியை யாரிடமாவது சொல்லி சந்தோச பட வேண்டும் போல் இருந்தது.

"  அதுலாம் அஞ்சு நிமிசத்துல படிச்சிடுவேன். ஆனா இந்த தெளசன் டைம் இம்போசிஷன்... இத நினைச்சா தான் ரொம்ப கவலையா இருக்கு அம்மாக்கு வேற உடம்பு சரி இல்ல வீட்டு வேலைய முடிக்கவே நேரம் சரியா இருக்கும் இதுல நா எப்படி ஆயிரம் தடவ எழுத..."

" இவ்வளோ தானா நா இன்னக்கி ஃப்ரீ தான் கொடு நா எழுதி தரேன்."

"இல்ல உனக்கு இல்ல... வேண்டாம்....."

இத்தனை நாளாய் பேசாமல், இன்று தனக்கு தேவை படும் போது அவள் என்னிடம் பேசுவதாய் நான் எண்ணி விட கூடாதே என்று அவள் நினைப்பது எனக்கு தெளிவாய் தெரியவே அவளுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாய்...

"என்ன வேண்டாம் நா உன் ஃப்ரண்ட் இல்லயா.. உனக்கு நா ஹெல்ப் பண்ண் கூடாதா..? "  எனக் கூறிய பின்னே அவள் முகம் தெளிவடைந்தது.

அவளை என்னிடம் பேச வைத்ததற்கு அந்த கடவுளுக்கே ஆயிரம் நன்றி மடல் எழுதலாம்.. இந்த இம்போசிஷன் எழுத மாட்டேனா?..

தன் பின் என் வாழ்வு பசுமையாய் செழித்து வளர்ந்தது.

காலங்கள் இரண்டு வேகமாய் கடக்க நாங்கள் எங்கள் கல்லூரி படிப்பை தொடங்க ஆரம்பித்த தருணம்...

என் காதலை ஒரு வாலிபனாய் நான் உணர்ந்த தருணம்.

+2 விற்கு பிறகு அவள் வீட்டில் கல்லூரி படிப்பதெல்லாம் குதிரை கொம்பு தான். அதோடு அவளோ, வீட்டின் ஒரே பிள்ளை. காலாகாலத்தில் கல்யாணம் செய்து வை , என்று யாராவது சங்கு ஊதி விட்டால், அவள் அம்மா தலையாட்டி விடுவார். 

ஆனாலும் ஒரு நம்பிக்கை. எங்கள் பள்ளி ஆசிரியரான அவள் தந்தை அவளை மேல் படிப்பு படிக்க வைக்க நினைத்தால் அவர் சொல்லுக்கு கட்டு படுவார் இவள் அன்னை.

ஆனால் அவர் சம்மதிக்க வேண்டுமே.. எங்கள் ஊரில் இருந்து பக்கத்து ஊருக்கு தான் கல்லூரிக்கு செல்ல வேண்டும். வயது பெண்ணை அவ்வாறு அனுப்புவது என்பது ஒரு தந்தையின் பார்வையில் இருந்து யோசித்தால்,...

விடை காண இயலவில்லை என்னால்.

பள்ளி நண்பர்களோடு கல்லூரியை அடைந்தேன். பார்க்கும் முகமெல்லாம் அவளே எனக்கு தெரிகிறாள். அதோ அந்த பச்சை கலர் சுடிதார் அணிந்த பெண்ணும் கூட அவளாய் தெரிய ... சிரிப்புடன் தலையை தட்டியவாறு , எங்கள் அறையை தேடி உள்ளே நுழைய கால் வைத்த நொடி...  அதே பச்சை சுடிதார்... அவளின் முகமே ..... அவளே.... எப்போதும் போல் புருவத்தை இரு முறை தூக்கி என்னை கண்ட விதம்... அய்யோ,

முதல்   முறை.. அப்படியே அவளை  கட்டி அணைக்க வேண்டும் போல் ஒரு கிளர்ச்சி ... எனக்காக அடம்பிடித்து இந்த கல்லூரியில் சேர்ந்திருக்கிறாள். இத்தனை நாட்களும் எனக்குள் மட்டுமே இருப்பதாய் நான் நினைக்கும் என் காதல்.. இன்று அவளுள்ளும்.... நினைக்கவே இனிக்கிறது..

ன்று என் நண்பனோடு வகுப்பை நோக்கி சென்று கொண்டிருந்தேன்.திடீரென்று எங்கிருந்து வந்தாளோ அந்த வளைவினில் , என் நெஞ்சின் மேல் வெண்பஞ்சாய் விழுந்தாள். 

  தடுமாறி விழ போனவளை சட்டென்று இரு கரம் கொண்டு தாங்கி பிடிக்க ஒரு நிமிடம் சுற்றும் முற்றும் ஒன்றும் விளங்க வில்லை. உடன் வந்த நண்பர்கள் நினைவு கொண்டு இருவரும் விலக , என்ன காரணத்திற்காக கீழே வந்து கொண்டிருந்தாளோ அந்த நினைவே இன்றி வகுப்பை நோக்கி ஓடி விட்டாள். ஜன்னல் அருகினில் சென்று அவளை காண குங்குமமாய் சிவந்திருந்த அவள் முகம் ஓராயிரம் விளக்கம் கூறியது எனக்கு...

அதன் பின் வந்த நாட்களில் அவளிடம் என் காதலை சொல்ல சொல்லி என் நண்பர்கள் கூறினாலும் முடியாது என்று விட்டேன். இன்னுமொரு முறை அவளை இழக்க நான் தயாராய் இல்லை.

ன்னை சுற்றி கேட்ட கரவோசைகளினால் நினைவில் இருந்து நிகழ்வுக்கு மீண்டான் . 

அரங்கமே அழகு கோலம் பூண்டிருந்தது.

இறுதி ஆண்டு மாணவர்களுக்கான ஃபேர்வல் ஃபங்ஷன் அது. இவனும் இன்னும் ஒரு பெண்ணும் தொகுத்து வழங்கி கொண்டிருக்கின்றனர்

அருகில்  நின்று கொண்டிருந்த பெண் அவனை நோக்கி என்ன? என்று வினவ ,

ஒன்றும் இல்லை என்று தலை ஆட்டினான்.

கையில் இருந்த புத்தகத்தை நோக்கினான். 

அவனின் அவள்  கொடுத்தது.. 

அவன் மனதில் தேக்கி வைத்திருந்த அவளின் நினைவுகளை

" என் நினைவினில் உன் காதல்"

என்று பட்டியலிட்டு அவனிடம் கொடுத்து இருந்தாள். 

அணுஅணுவாய் அவள் அவனை ரசித்ததை... அழகாய் வரைந்திருந்தாள். ஆம் வரையும் கலையில் தேர்ச்சி பெற்றவளுக்கு இது ஒன்றும் பெரிய விஷயமில்லையே...

அதை பார்த்தவன், அவளை  அங்கும் இங்கும் தேடினான். அவன் அருகில் நின்று கொண்டிருந்த பெண்ணோ , 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.