(Reading time: 10 - 19 minutes)

டுத்ததாக நம்மை இசை மழையில் மூழ்க செய்ய வருகிறார் நம் சித்ரா... என்று கூற 

சட்டென்று அவளை புரியாமல் பார்த்து விட்டு தன் கையில் இருந்த அட்டவணை தொகுப்பை கண்டான். அதில் அப்படி எதுவும் இல்லாததால்.. மீண்டும் அவளை புரியாமல் நோக்கினான்.

அவனை பார்த்து கண்ணடித்தவள்,

உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கத்தான் அதுல எழுதல.. என்று கூறி விட்டு மேடையை கண் காட்டினாள்.

கல்லூரியில் அனைவருக்குமே , ஏன் அவற்கள் இருவருக்குமே , தாங்கள் ஒருவரை ஒருவர் காதலிப்பது தெரியுமானாலும் எதோ ஒன்று அவர்களை தடுத்தது இத்தனை காலமும் . ஆனால் இன்றோ அவள் தன் காதலை தெளிவான தொகுப்பில் தொகுத்து அவனிடம் நீட்டி தெளிவாய் விளக்கவே கண்ணுக்கு தெரியாத தடையும் தகர்த்தெறிய பட்டது.

மேடை மேல் தோன்றிய நட்சத்திரத்தை கண்டான்.

அடர் நீல நிற பட்டு புடவை..., அளவான ஒப்பனை... அழகுற மிளிர்ந்தாள் அவன் சித்ரா

கரகோஷம் மேடையை அதிர வைக்க 

மெதுவாக கண்களை மூடியவள் தொண்டையை லேசாக செருமினாள்.

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது

அதன் பேர் என்னவென கேட்டேன் 

என் கண்ணில் ஒரு தீ வந்தது 

அதன் பேர் என்ன என்னவென கேட்டேன் 

என்ன அது இமைகள் கேட்டது

என்ன அது இதயம் கேட்டது 

காதல் என உயிரும் சொன்னதன்பே 

காதல் என உயிரும் சொன்னதன்பே

என் பெயரில் ஒரு பேர் சேர்ந்தது அந்த 

பேர் என்னவென கேட்டேன் 

என் தீவில் ஒரு ஆள் வந்தது அந்த 

ஆள் எங்கு என கேட்டேன் 

கண்டுபிடி உள்ளம் சொன்னது

உன்னிடத்தில் உருகி நின்றது 

காதல் இது உயிரும் சொன்னது அன்பே 

காதல் இது உயிரும் சொன்னது அன்பே

சில நேரத்தில் நம் பார்வைகள் 

தவறாகவே எடை போடுமே 

மழை நேரத்தில் விழி ஓரத்தில் 

இருளாகவே ஒளி தோன்றுமே 

எதையும் எடை போடவே 

இதயம் தடையாய் இல்லை 

புரிந்ததும் வருந்தினேன் உன்னிடம் 

என்னை நீ மாற்றினாய் 

எங்கும் நிறம் பூட்டினாய்

என் மனம் இல்லையே என்னிடம் 

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது 

அதன் பேர் என்னவென கேட்டேன் 

என் கண்ணில் ஒரு தீ வந்தது 

அதன் பேர் என்ன என்னவென கேட்டேன்

உன்னை பார்த்ததும் அந்நாளிலே

காதல் நெஞ்சில் வரவே இல்லை 

எதிர்காற்றிலே குடை போலவே

சாய்ந்தேன் இன்று எழவே இல்லை 

இரவில் உறக்கம் இல்லை

பகலில் வெளிச்சம் இல்லை 

காதலில் கரைவதும் ஒரு சுகம் 

எதற்கு பார்த்தேன் என்று

இன்று புரிந்தேனடா 

என்னை நீ ஏற்றுக்கொள் முழுவதும்

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது 

அதன் பேர் என்னவென கேட்டேன் 

என்கண்ணில் ஒரு தீ வந்தது 

அதன் பேர் என்ன என்னவென கேட்டேன் 

என்ன அது இமைகள் கேட்டது

என்ன அது இதயம் கேட்டது

காதல் என உயிரும் சொன்னது அன்பே

காதல் என உயிரும் சொன்னது அன்பே

காதல் இது உயிரும் சொன்னது அன்பே 

காதல் இது உயிரும் சொன்னது அன்பே

னைவரின் முன்னும் அவள் தன் காதலை அவனிடம் தெரிய படுத்தினாள்.

அவன் இதழ்களோ புன்னகையால் விரிந்தது.

கரகோஷமும் கைத்தட்டல்களும் அவர்களை சூழ புன்னகை வடிவாய் அவனை நோக்கினாள் சித்ரா.

அவளை அணைக்க துடித்த மனதை அடக்கி அவளின் அருகே சென்றவன், கைகளை மென்மையக அணைத்தான்.

மீண்டும் கைத்தட்டல்  ...

கங்ராட்ஸ் ....மனோ...... என்று

அனைவரிடமும் விடை பெற்று சென்றாலும் அவளின் கையை மட்டும் விட வில்லை .. நீண்ட நாள் தவம் கை கூடியது போல் ஒரு நிம்மதி மனதில்.

சீக்கிரம் ஒரு வருஷம் போகனும் என்றவனை புரியாமல் பார்த்தாள்..

மெலிதாக சிரித்தவன், என் தகுதியை கொஞ்சம் உயர்த்தி ... உன் அப்பாட்ட வந்து பேச தான்... 

என்று கூறினான்.

இந்த ஒரு வார்த்தை கேட்க... என்ன தவம் செய்தேனோ இந்த ஒரு நாளே போதும் ஏழு ஜென்மம் கேட்பேனோ....

என்ற வரியை மெலிதாய் அவன் காதில் முனுமுனுத்தாள்.

இவர்களின் இந்த சுகமான காதலும் கை சேர்ந்தது. இனி நமக்கு இங்கென்ன வேலை.

This is entry #25 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.