(Reading time: 11 - 22 minutes)

ந்த வேதா என்கிற டாக்டர் வேதவள்ளி நாந்தான்… நீ பிறந்ததும் வேலையை விட்டுட்டேன்.. உன் அப்பா என்னை டிவோர்ஸ் எல்லாம் பண்ணல..உனக்கு புரிய வைக்கனும்னுதான் அப்படி பொய் சொன்னேன்..”

“ஏன் மா?” என்று குழம்பினான் ஷ்யாம்.

“ என்ன ஏன் மா ?  தீபிகா பொய் சொன்னா சரி, அதை என்னனு தெரிஞ்சுக்க முயற்சி பண்ணனும்..அப்படி இல்லன்னா சாதாரணமா நினைச்சு விட்டுறனும்… அதை விட்டுட்டு பெரிய பெரிய வார்த்தை எல்லாம்பேசினா என்ன அர்த்தம் ? இது பாரு கண்ணா,  கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் கொடுக்க முடிந்த மிகப்பெரிய பரிசு நம்பிக்கைத்தான்..! அதுதான் அஸ்திவாரமே..மற்றது எல்லாம் இரண்டாம்பட்சம்… அதுவும் உங்க ஜெனரேஷன் ரொம்ப ரொம்ப மோசம்..

விளையாட்டுத்தனத்தாலேயே கண்ணுக்கு தெரியாத எதிரிகளை சம்பாதிச்சுவெச்சு இருக்கும் தலைமுறைகள் நீங்க ! உனக்கே தெரியாமல் உன்னுடைய ஃபோட்டோவை எடுத்து மிஸ்யூஸ் பண்ணிட முடியும்.. அதுவும் பெண்களுக்கு இதெல்லம் ரொம்ப சகஜமா நடக்குற சம்பவம் ஆகிடுச்சு..சாதாரண செல்ஃபியில் தொடங்கி, உடை மாற்றும் அறை வரைக்கும் எல்லா விஷயத்திலும் கவனமாய் இருக்கனும்… சாதாரணமாய் நண்பர்களிடம் பேசுறபேச்சை கூட, ஸ்க்ரீன்ஷார்ட் எடுத்து விளம்பரப்படுத்தி பிரச்சனை வருது “

“…”

“ உங்க காலத்துல உண்மையான காரணங்களை விட அவதூரான பேச்சுக்கும், விமர்சனத்திற்கும் இரையாகி பிரிஞ்ச உறவுகள் தான் அதிகம்..ஒரு சின்ன பொய்க்காக இவ்வளவு யோசிக்கிறியே,நாளைக்கே, தீபிகாவுக்கு பிடிக்காத யாரோ எதையாவது கொண்டு வந்து நீட்டினா,அவளை விட்டுருவியா ?”

“அம்மா” என்று துடித்தான் ஷ்யாம்..லேசாய் விழி கலங்கியது..

“ச்ச தப்பு பண்ணிட்டேன் அம்மா. நீங்க சொல்றது தான் சரி.. நான் இதபத்தி விசாரிக்கவும் மாட்டேன்..இனி இதை நினைக்கவும் மாட்டேன்… ஐ எம் வெரி சாரிம்மா….நான் பேட்பாய் ஆகிட்டேன்…” என்று அன்னையின் மடியில் முகம் புதைத்து குற்ற உணர்வை போக்கி கொண்டான் அவன்…

ன்றிரவு,

“சாரி மை டியர்  மனைவி”  என்று மெசெஜ் அனுப்பினான் தீபிகாவிற்கு…அதை பார்த்தவளுக்கு காரணம் புரியாமல் போனாலும் அன்று காலை தான் பொய் உரைத்து விட்டோமே என்ற குற்ற உணர்வில் “ஐ எம் சாரி டூ” என்று மெசெஜ் அனுப்பினாள்…

அதை கண்டு புன்னகைத்தவன் அப்படியே சிறிது நேரத்தில் உறங்கியே போனான்..

3….2….1…..

00.00AM…

“ ஹேப்பி பெர்த்டே கணவரே” என்று உறங்கிகொண்டிருந்தவனின் செவியருகில் பாடினாள் தீபிகா..உறக்கம் கலைந்து எழுந்தவன் அவளை தேட அவளுக்கு பதிலாய் அவனின் செல்ஃபோன் தான் சிணுங்கியது.. அவனுக்கே தெரியாமல் அவன் ஃபோன் ரிங் டோனை மாற்றி வைத்திருந்தாள் தீபிகா.. “கேடி” என்று முணுமுணுத்தபடி ஃபோனை எடுத்தான்..

“ ஹேய் கேடி எங்க இருக்க ?”

“ பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்னுயிரின் உயிரே”

“நன்றி என் இனியவளே”

“அப்படியே வாசலுக்கு வாங்க”

“ ஏன் ?”

“வாங்க சொல்லுறேன்”

அங்கு வாசலில் பல்சரில் அமர்ந்துகொண்டு அவனை பார்த்து புன்னகைத்தாள் தீபிகா..

“ஹேய் என்னடி இதெல்லாம் ?”

“ பெர்த்டே கிஃப்ட்?”

“வரதட்சனையா ?”

“ அய்யேமூஞ்சி … ஆளை பாருடா…”

“அதெல்லாம் என் ஆளு அட்டகாசமாய்தான் இருக்கா… ஆனா என்ன பண்ணிட்டு இருக்கான்னு தான் புரியல”

“ அட மக்கு பையா, என்னை பெண் பார்க்க வந்தப்போ நீங்க என்ன சொன்னிங்கன்னு மறந்து போச்சா ?”

“என்னடீ ?”என்று குழப்பத்துடன் கேட்டான்… அவன் பாவனையில் அவளுக்கு கோபமே வந்துவிட்டது … இதுவரை கொடுத்த மரியாதையும் பறந்து போனது ..

“ யோவ் தத்தி..உன்னபோயி கட்டிக்கிறேன்னு சொன்னேன் பாரு..என்னை சொல்லனும்… எல்லாரும் பொண்ணுக்கு ஆடத் தெரியுமா ? பாடத்தெரியுமான்னு கேட்பாங்க….ஆனா நீ பைக் ஓட்டத் தெரியுமான்னு கேட்ட..”

“அதெல்லம் நியாபகம் இருக்குடீ  மங்கம்மா… ஆனா நீதான் சைக்கிள்கூட ஓட்டத்தெரியாதுன்னு சொன்னியே”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.