(Reading time: 12 - 24 minutes)

எழுதா மொழிகள் எனது..! - ப்ரியா

This is entry #62 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

unspoken

பௌர்ணமி இரவு.. நிலவின் வெளிச்சம் பாதையெங்கும் பரவி கிடந்தது.. அவனின் இருசக்கர வாகனத்தின் விளக்கின் ஒளி காற்றினூடே கலந்து புணர்ந்து வெளி வந்து தூரத்தில் ஒரு புள்ளியாய் தெரிந்தது!!

அதை கவனித்தவாறு ஏதோ சிந்தனையில் வாகனத்தை செலுத்தி கொண்டிருந்தான் கார்த்திக்.

வெண்ணிலவே வெண்ணிலவே

விண்ணை தாண்டி ஹ்ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்...’

அவன் இடப்பக்க தோளில் தன் வலது கன்னத்தை பதித்தவாறு அவன் தோள்களில் கை வைத்து அமர்ந்து மெல்லிய குரலில் பாடியவாறு எதையோ அசை போட்டு கொண்டிருந்தாள் அவள்.

சிந்தனை வேறெங்கோ இருந்தாலும் அவன் தனிச்சையை வாகனத்தை ஓட்டினாலும் மனதின் ஓரத்தில் இருந்த ஏதோ ஒன்று அவளது அருகாமையை மிகவும் ரசித்தது.

"மயூஊஊஊ...."

"...."

"ஒய்"

"ம்ம்ம்ம்"

"என்ன யோசனை மேடம்க்கு?"

"ஒன்னும் இல்லையே" சட்டென்று வந்தது பதில்.

தன் இடக்கையால் அவள் தலையை தொட்டு,

"லூசு" என்றான் கார்த்திக்.

வனுக்கு தெரியும் அவள் எதை பற்றி யோசிக்கிறாள், எதனால் யோசிக்கிறாள் என்று ஆனால் அவ்வளவு எளிதில் அதை வெளிப்படுத்தி விட மாட்டாள் என்றும் அவனுக்கு தெரியும். இந்த இரண்டு வருடங்களாக அவன் நினைத்திருந்த மாதிரி அல்ல அவள். அப்போது அவளை தூரத்தில் இருந்து பார்த்திருக்கிறான். ஆனால் இந்த மூன்று மாதங்கள் அப்படி அல்லவே?! அவள் அருகில் மிக அருகில் இருந்து அல்லவே அவளை பார்த்து கொண்டிருக்கிறான்.

மயூரா.. பிடிவாதத்தின் மறு உருவம், தன்னம்பிக்கையின் தனி அகராதி. திமிரின் திறவுகோல்,கோபத்தின் கைக்குழந்தை. ஆனால் இதெல்லாம் மற்றவருக்கு தான். ஒருவரை அவளுக்கு பிடித்து விட்டால் யுவதியை போல் அல்லாமல் சில தினங்களே பேச பழகி இருக்கும் குழந்தையை போன்றதாய் இருக்கும் அவளின் செயல்களும் அதில் அடங்கி இருக்கும் உணர்சிகளும்.

நினைவின் பிடியில் இருந்து வெளி வந்தவனை முழுதாய் ஆட்கொண்டாள் மயூரா.

"மாமா"

"ம்ம்ம்ம்"

"ப்ச் மாமா, இங்க பாரு டா"

"ம்ம் என்ன சொல்லு"

"அந்த குழந்தைங்க அழகா இருக்கு பாரு, ட்வின்ஸ் போல இருக்கு மாமா"

"ம்ம்ம் ஆமாம் ல"

"நமக்கு ட்வின்ஸ் பொறந்த நல்ல இருக்கும் ல"

"நல்ல தான் இருக்கும்"

"ஆனா அதுக்கு நீ முதல்ல நல்ல வேளைக்கு போகணும் எங்க அப்பா கிட்ட பேசணும் அப்புறம் கல்யாணம், மண்டபம் எல்லாம் கூட நான் செலக்ட் பண்ணிட்டேனே"

"ஓஹோ இன்னும் என்ன எல்லாம் செலக்ட் பண்ணி இருக்கீங்க?"

"ஹ்ம்ம் போடோக்ராபர், கண்டிப்பா கேண்டிட் போடோக்ரபி தான்"

"பண்ணிக்கலாம்"

"அப்பறம் ஒரு சூப்பர் பிளாட்"

"வாங்கிக்கலாம்"

"இப்போ இருந்தே அதுக்கு எல்லாம் சேர்த்து வைக்கணும் அப்போ தான் ரெண்டு வருசத்துல பண்ண முடியும்"

"பண்ணலாம்"

"என்ன மாமா நீ நான் எவ்ளோ ஆசையா சொல்றேன் நீ இப்படி பேசற?"

"நான் என்ன சொன்னேன் பண்ணிக்கலாம் நு தானே சொன்னேன்?"

"போடா நான் போறேன் பண்ணி"

"ஹே நில்லு"

"இப்போ கூட மயூரா நில்லு நு என் பேர் சொல்லி கூப்பிடறியா நீ? எப்போவது ஒரு தடவை ஆசையா மயூரான்னு..ச்சை போடா"

"சரி கூப்பிடறேன் டி, மயூரா மயூரா மயூரா மயூரா"

நிகழ்காலத்திற்கும் கடந்த காலத்திற்கும் எண்ணங்கள் கட்டிய வெட்ட வெளியில் ஆடும் பாலத்தில் பற்றுகோல் இல்லாமல் தட்டு தடுமாறி பயணித்து கொண்டிருந்தாள் மயூரா.

"யூஊஊ, டோய் மயூ என்ன டா அப்படி யோசனை?"

"ஆங்.. ஒன்னும் இல்ல"

"இது தெரிஞ்சுது தான், இறங்கு காபி குடிக்கலாம் நீ சோர்வா இருக்க மாதிரி தெரியுது"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.