(Reading time: 12 - 24 minutes)

 

"ம்ம்ம்ம்"

"பிஸ்கட்?"

"இல்ல வேண்டாம்"

கார்த்திக் வண்டியை ஓரமாய் நிறுத்தி விட்டு காபி வாங்கி கொண்டு வர அதை குடித்தவாறே  ஏதோ பேசிக் கொண்டிருந்த கார்த்திகை கவனித்து கொண்டிருந்தாள் மயூரா.

எவ்வளவு நல்ல மனசு அவனுக்கு மற்றவருக்கு எப்படியோ, ஆனால் தன்னிடத்தில் இனிமையானவன். அவன் வாழ்வில் நான் வந்திருக்க கூடாதோ? ஆனால் இப்போது தானே கொஞ்சம் சிரித்து வாழ்கையை உணர்ந்து வாழ்கிறான்.

நான் செய்வது சரியா இல்லையா? என்னை எந்த அளவு நேசிக்கிறான் என்று அவனாலும் சொல்ல முடியாது என்னாலும் வரையறுக்க முடியாது. சுயநலம் கலந்து இருந்தாலும் மென்மையான தூய்மையான காதல்..

ப்ச் ப்ச் இல்லை நேசம். காதல் என்ற வார்த்தையின் உதவி எங்களுக்குள் வர கூடாது என்பது அவன் விருப்பம்.

பாதி காபியை சுவைக்கும் வரைக்கும் அமைதியாய் அவனை அளவிட்டவள் பேச ஆரம்பித்தாள்,

"நீ ஏன் கார்த்திக் என்ன லவ் பண்ற?"

"மயூ.. இப்போ எதுக்கு அது?"

"சொல்லு கார்த்திக்"

"வா கிளம்பலாம்"

"கார்த்திக் சொல்லு" அவளின் தீர்க்கமான பார்வையை சந்திக்க முடியாமல் திரும்பி கொண்டான் அவன்.

மார்புக்கு குறுக்காக கைகளை கட்டி அவள் பிடிவாதமாக நிற்க,

"இது ஒன்னு உங்கிட்ட.. பிடிவாதம் எதுக்கு எடுத்தாலும் ஏன் டி இப்படி பண்ற?"

"சொல்லு"

'தெரில மயூ"

"காக்கி சொல்லுன்னு சொன்னேன்"

அவள் அவனை செல்லமாக அழைக்கும் விதம் இது. அதற்கு மேல் அவனால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

"ஹே நிஜமா தெரியல டி, உன்ன பாத்தேன் பிடிச்சுருந்துச்சு, இத காதல் கன்றாவிநு சொல்லாத, அது வேற மாதிரி  இருக்கும் உன்ன பாத்ததும் எனக்கு ஒன்னும் தோணலை ஆனா எப்போ எந்த இடத்துல எந்த நிமிஷத்துல நீயும் நானும் இப்படி நெருக்கம் ஆனோம்ன்னு தெரியல, உனக்கு எப்படியோ பட் எனக்கு உன்ன கல்யாணம் பண்ணிக்கணும் மயூ"

"போலாம் கார்த்திக்", முகத்தில் கடுமை.

"இப்போ எதுக்கு மூஞ்சிய இப்படி வெச்சுருக்க? இது உனக்கு தெரிஞ்சுது தானே?"

"விடு கார்த்திக்"

"மயூ இங்க பாரு காலைல இருந்து  உன் மனசு சரி இல்லன்னு தான் இப்போ டிரைவ் போலாம்ன்னு உன்ன கூட்டிட்டு வந்தேன் இப்பவும் ஏன் இப்படி இருக்க?"

"நான் இப்படி தான் கார்த்திக்"

"இன்னும் எத்தன நாள் மயூ, அவன் தான் போய்ட்டான்ல அவன மறந்துரு, தூக்கி போட்டுடு"

"நானும் அப்படி தான் நினைச்சேன் ஆனா இன்னைக்கு அவன் கிட்ட இருந்து வந்த மெசேஜ்?"

"இப்போ என்ன எதிர்பாக்கிற?"

"ஒன்னும் இல்ல வா டா போலாம்"

"ம்ம்ம்ம்" ஒரு பெருமூச்சுடன் கார்த்திக் வண்டியை கிளப்ப, மயூரா ஏறி கொண்டாள்.

"லோ"

"...."

"ஹலோ?!"

"..."

"ஹலோ ரூபன்"

"ம்ம்ம்ம்"

"தூங்கிட்டு இருக்கியா?!"

"ஆமாம்"

"ம்ம்ம் எப்படி உன்னால தூங்க முடியுது?"

"மணி  என்ன? மணி 3.30 இந்த நேரத்துல.. என்ன ஆச்சு?"

"...."

"அழறியா?"

"ஆமா உன்ன காதலிச்சேன் ல ஐஞ்சு வருஷம் நீ மட்டும் தான் எல்லாம் உன்ன தாண்டி ஏதும் இல்லன்னு யோசிச்சு யோசிச்சு உனக்காகவே எல்லாம் பண்ணிட்டு இருந்தேன் ல அதான் இப்படி பைத்தியம் மாத்ரி இருக்கேன்"

"..."

"உனக்கு இந்த ஐஞ்சு வருசத்துல என்ன டா குறை வைச்சேன்?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.