(Reading time: 12 - 24 minutes)

"ன்னும் இல்ல?"

"உன்ன நல்லா தான பாத்துகிட்டேன்?"

"ஆமா"

"நீ சந்தோசமா தானா இருந்த?"

"ஆமா"

"நான் சந்தோசமா இருந்தேனா நு யோசிச்சியா? நீ எனக்கு என்ன டா பண்ணின?"

"..."

"என்ன ஏமாத்தனும்ன்னு நினைச்சியா?"

"...."

"சொல்லு டா?"

"இல்ல"

"அப்புறம் ஏன் டா இந்த ஆறு மாசம் என்ன பார்க்க வரல, என் முகத்த பார்க்காம என் குரல் கேட்காம நான் உன் வாழ்க்கைல இல்லனாலும் உன்னால இருக்க முடியுது இதோ நிம்மதியா தூங்க முடியுதுல?"

"...."

"ச்சை போடா"

"ஐ டோன்ட் டிசர்வ் யூ"

"என்னடா சொன்ன?"

"இ டோன்ட் டிசர்வ் யூ மயூரா"

விசும்பல்களின் இடையே அழைப்பை துண்டித்தாள் மயூரா.

"யூரா ரூம் வந்துடுச்சு"

"ஆங்.. ஹ்ம்ம்"

"சும்மா அதையே யோசிச்சுட்டு இருக்காத"

"கார்த்திக்"

'என்னம்மா"

"நீ என்ன லவ் பண்ணாத டா,இன்னும் ரூபன் என் மனசுல இருக்கான் அவன என்னால முழுசா மறக்கவோ வெறுக்கவோ  முடியலை டா"

"மயூரா எனக்கு கோபம் வருது நான் போறேன்"

"ப்ளீஸ் நான் சொல்றத கேளு என்னால உன்ன சந்தோசமா பார்த்துக்க முடியாது கார்த்திக், எனக்கு தினமும் தூங்கும் போது கூட உனக்கு ஏதோ பெரிய தப்பு பண்ணுரனொன்னு ரொம்ப கஷ்டமா இருக்கு டா, குற்ற உணர்ச்சி என்ன கொல்லுது, நான் சுயநலவாதி டா, அவன் வந்த என் மானங்கெட்ட மனசு மாறிடுமோன்னு பயமா இருக்கு"

"..."

"காக்கி ப்ளீஸ் அப்போ நீ கஷ்டப்படறதை என்னால பார்க்க முடியாது"

"...."

"காக்கி"

அவன் தோள்களில் சாய்ந்து அழுதவளை தேற்றும் வழியறியாமல் அவள் பேசியவை மூளையை மழுங்க செய்ய அப்படியே நின்றிருந்தான் கார்த்திக். சற்று நேரத்தில் அவள் அழுகை அதிகரிக்க சுதாரித்து அவளை தேற்றினான்.

"டேய் மயூ இங்க பாரு அப்படி எல்லாம் ஒண்ணுமே இல்ல, நான் கஷ்டப்பட மாட்டேன், நீ சந்தோசமா இரு அது போதும் இப்போ போய் நிம்மதியா  தூங்கு"

'ம்ம்ம்"

"எதையும் யோசிக்காத"

"ம்ம்ம்ம்"

"அய்ய சிரிடி கண் அழகி"

"ம்ம்ம்ம் ஈஈஈ"

"ஐயோ அப்பா இதுக்கு நீ அழுறது பெட்டர்"

"சரி நீ பாத்து போ ஒழுங்க டிரைவ் பண்ணு"

"சரிங்க"

வனை அனுப்பி விட்டு வந்து கட்டிலில் விழுந்தவளுக்கு அழுகை பீறிட்டு வந்தது. முடிந்த வரை அழுது தீர்த்தவள் தன் கைபேசியை எடுத்து ரூபனிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியை பார்த்தாள்.

'சாரி நான் வேணும்ன்னு எதையும் பன்னல என்கிட்ட ஒரு தடவை பேசு ப்ளீஸ்'

'நான் அனாதை மாதிரி பீல் பண்றேன் நீ எனக்கு வேணும்'

'நான் உன்கிட்ட ஏதும் மறைக்கல, ஒரு நிர்பந்தம். இப்போ எல்லாமே முடிஞ்சுது உங்கிட்ட சொல்லணும்"

கைபேசியை தூக்கி எறிந்தவள் மீண்டும் படுத்து அழுது கரைந்தாள். அலைபேசி சிணுங்க எடுத்து பார்த்தாள் கார்த்திக் தான் குறுஞ்செய்தி அனுபியிருந்தான்.

'நான் வந்துட்டேன் மயூ'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.