(Reading time: 12 - 24 minutes)

 

'னச போட்டு குழப்பிக்காத நான் ஒன்னும் நாளைக்கே கல்யாணம் பண்ணனும் கேட்கல. என்மேல உனக்கு பயம் வேண்டாம்.அதே மாதிரி அவரும் வர போறது இல்ல இப்போவே. எல்லாம் உன் கைல தான் இருக்கு.இப்போ உன் சந்தோஷம் நிம்மதி தான் முக்கியம்.. நீ அழுத வரைக்கும் போதும் மயூ, இனி சந்தோசமா இரு. இல்ல உனக்கு அவர கூட பேசனும்ன பேசு.. ஆனால் எல்லாம் சரியா இருக்கும்னு யோசிச்சுக்கோ. இப்போ தூங்கு. குட் நைட்.'

வெகு நேரம் சிந்தனையில் ஆழ்ந்தவள் ஒரு முடிவுடன் கைபேசியை எடுத்து ரூபன் எண்ணிற்கு ஒரு சில குறுஞ்செய்திகளை அனுப்பி விட்டு தூங்க சென்றாள்.

சில தினங்கள் கடந்த ஒரு மாலை வேளையில்...

"ன்னடி அமைதியா இருக்க?"

"நான் ஒரு முடிவு பண்ணிருக்கேன் கார்த்திக்"

"என்ன?"

"எங்க அம்மா சொல்ற பையனை கல்யாணம் பண்ணிக்க போறேன்"

"சுத்த பைத்தியகாரத்தனம்"

"இருக்கட்டும் கார்த்திக், நீயா அவனா நு யோசிச்சு யோசிச்சு அழுது, ஒரு நாள் யாரோ ஒருத்தர் விட்டுட்டு இன்னொருதர கல்யணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா வாழ என்னால முடியாது என் குற்ற உணர்ச்சி என்னை கொன்றும், அவன் என்ன இருந்தாலும் என்கிட்ட சொல்லி இருக்கனும்,

நம்பிக்கையும் எந்த ஒரு சூழ்நிலையிலும் கூட நிக்கறது தான் காதல், காதல் மட்டும் இல்ல எந்த உறவுக்குமே அடிப்படை அது தானே அவன் அதையே ஒழுங்கா பண்ணல. என்னால சினிமால வர கதாநாயகிகள் மாதிரி பிரிஞ்ச போன காதலன் வந்து ஒரு உப்பு சப்பில்லாத காரணம் சொன்ன உடனே ஏத்துக்கிட்டு முட்டாள் மாதிரி மறுபடியும் நம்பிக்கை வைக்க முடியாது கார்த்திக்"

"..."

"அதே மாதிரி என்கிட்ட மறைச்சு செய்ற அளவுக்கு கல்யாணத்துக்கு முன்னாடியே நிறைய விஷயங்கள் இருக்கும் போது கல்யாணத்துக்கு அப்புறம்? நான் அவன அப்படி ஒரு நிலைமைல வைக்கல கார்த்திக் இருந்தாலும் அவன் அப்படி நடந்துகிட்டான், எல்லாத்தையும் விட எனக்கு என் தன்மானம் பெருசு கார்த்திக்"

"லூசு மாதிரி பேசாதடி, இது வாழ்க்கை"

'இருக்கட்டும் கார்த்திக், ஒரு தடவை நான் முடிவு எடுத்து அது தப்பா போனது போதும், இன்னொரு பக்கம் என் அம்மாவை ஏமாதிட்டேன்னு ஒரு வருத்தம் இனியாவது அவங்களே முடிவு பண்ணட்டுமே"

"ம்ம்ம் என்னமோ ஆனால் நான் உங்க வீட்டுக்கு வருவேன் உங்க அம்மா கிட்ட பேசுவேன்"

"பேசிக்கோ கார்த்திக் அதை நான் தடுக்க முடியாது ஆனா எங்க அம்மா முடியாது நு சொல்லிட்ட அவ்வளவு தான் அப்புறம் ஏதும் நடக்காது இதையே தான் நான் ரூபன் கிட்டயும் சொன்னேன்"

அவள் அனுப்பிய குறுஞ்செய்திகளை காட்ட இவனிடம் சொன்னதையே தான் அவனுக்கும் அனுப்பி இருந்தாள்.

"மயூரா முதல் காதல் தப்பா போன எல்லாமே அப்படி இருக்கனும்நு அவசியம் இல்ல"

"நான் தேர்ந்தெடுத்த முதல் முடிவு தான் கார்த்திக் தப்பு, முதல் காதல் கடைசி காதல்ன்னு எல்லாம் ஒன்னு இருக்கா என்ன? முதல் காதல் செத்து போன இன்னொரு காதல் கண்டிப்பா வரும்ன்னு ஒரு சிலர் சொல்றாங்க, ஒரு சிலர் முதல்ல வரது எல்லாம் முதல் காதல் இல்ல கடைசில நிக்கற காதல் தான் பெருசுன்னு சொல்றாங்க, ஒரு சிலர் காதல் எத்தனை முறை வேணாலும் வரலாம்ன்னு சொல்றாங்க.. ஆனால் "

"..."

"என்னை பொறுத்த வரைக்கும் காதல் ஒருத்தரோட வாழ்க்கைல ஒரே ஒரு முறை தான் வரும் கார்த்திக், இப்போ ரூபன் இல்லாம நான் சந்தோசமா ஒரு நிமிஷம் சிரிச்சாலும் அதுல காதல் இல்ல, நாளைக்கு அவன்  வந்து ஒரு வேலை நாங்க சேர்ந்தாலும் அது காதலனால அப்படின்னு ஆகிடாது.

காதல் ஒரு முறை ஒரே ஒரு தடவை தான் யாரோ ஒருத்தங்க மேல வரும் கார்த்திக் அவங்க இல்லாம இருக்க முடியாது கடைசில அவங்க நினைவுகள் கூடயாவது வாழணும்னு ஆசையா இருக்கும், அதை தண்டூரா போட்டு ஊருக்கெல்லாம் சொல்லவே தோனது, நிறைவேறினாலும் சரி கைகூடலனாலும் சரி.. ஊமையா மனசோட ஒரு ஓரத்தில அமைதியா அவங்க நலனை மட்டும் எதிர்பார்த்து அதுக்காக வேண்டிக்கிட்டு இருக்கும்.. அது தான் காதல்.. முதலும் கடைசியுமான காதல்.. அனுபவபட்டு தான் தெரிஞ்சிகிட்டேன்"

"மயூ"

"ம்ம்ம்ம் அந்த காதல் வரணும் கார்த்திக் எனக்குள்ள, அதுக்கு முன்னாடி வந்தது அதுக்கு அப்புறம் வர்றது இதையெல்லாம் காதல்ன்னு என்னால எதுக்க முடியாது. தண்ணி எப்புடி பாத்திரத்துக்கு ஏத்த மாதிரி மாறுதோ அது மாதிரி காதலும் மனசுக்கு ஏத்த மாதிரி மாறுபடும், என் காதல் இப்படி தான். இப்போதைக்கு நான் என்னையே காதலிக்கலாம்ன்னு முடிவு பண்ணிருக்கேன்.. நீ என்ன சொல்ற?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.