(Reading time: 5 - 9 minutes)

கடமை - அமுதா

school boy

ன்று திங்கள் கிழமை காலை 7 மணி,ராமன் போர்வையை நன்றாக போர்த்திக் கொன்டு உறங்கிக் கொண்டிருந்தான்.சமையலறையில் இருந்து ஒரு குரல்,"டே ராமா ஸ்கூல்-கு லேட் ஆகிட்டே இருக்கு, இப்போ எழுந்திருக்க போறியா இல்லையா,6- ஆம் வகுப்பு போற இன்னும் கட்டிலிலேயே ஒன்னு போய்ட்டு 7 மணி வர தூங்கற.

எல்லாம் உன் அப்பா குடுக்கிற செல்லம் என்று திட்டிய  படியே கையில் டீ-ஐ குடுத்து ராமனை எழுப்பினாள் அவன் அம்மா கோதை.

டீ-ஐ கையில் வாங்கிய ராமனின் முகம் பயம் கலந்த சோகமாக இருந்தது.காரணம்,வீட்டுப்பாடம் முடிக்கவில்லை,வீட்டுப்பாடம் முடிக்காமல் போனால் மேத்ஸ் டீச்சரின் பெரம்பு தான் பேசும் என்று அவனுக்கு நன்றாக தெரியும்.

எப்படியாவது அம்மாவை சமாளித்து இன்று மட்டும் லீவ் போட்டு விடவேண்டும் என்று எண்ணினான்.மறுபடியும் அவன் அம்மாவின் குரல்,இம்முறை சற்று மிகவும் கோவமாக,"ராமா இன்னுமா அந்த டீய குடிக்கற,சீக்கிரமா ரெடி ஆகு ஸ்கூல்-கு லேட் ஆகுது,தினம் இதே வேலையா போச்சு உனக்கு".

டீ குடித்து விட்டு டம்ளர்-ஐ கிட்சன் உள்ளே அம்மாவிடம் குடுக்க போனவன் மிகவும் சோகமாக,"அம்மா எனக்கு தலை வலிக்குது,இன்று மட்டும் லீவ் போட்டு கொள்கிறேன்",என்றான்.

கோதை,"இப்போ தானே டீ குடிச்ச,எல்லாம் சரி ஆயிடும்,அடிக்கடி ஸ்கூல்-கு லீவ் போடகூடாதுனு போன வாரம் தானே உங்க H.M என்னையும் அப்பாவையும் கூப்பிட்டு சொன்னாங்க,அதுக்குள்ள மறந்துட்டியா,போ போய் குளிச்சிட்டு வா",என்றாள்.

இதை சற்றும் எதிர் பாராத ராமன் தான் போட்ட திட்டம் அம்மாவிடம் பலிக்கவில்லை என்று சோகமாக குளிக்க சென்றான்.

குளியலறையில் குளித்தவாரே ஏதாவது செய்து இன்று பள்ளிக்கு லீவ் போட்டு விட வேண்டும் என தீவிரமாக யோசித்தான்.

'டேய் ராமா இன்னுமா குளிக்கற எனக்கு ஆபிஸ்-கு லேட் ஆகுது சீக்கிரமா வா உன்ன ஸ்கூல்ல விட்டுட்டு நான் ஆபிஸ் போகனும்",என்றார் அவன் அப்பா.

குளித்து ரெடி ஆகி வந்தவனுக்கு அப்படி ஒரு சந்தோஷம், ஆம் வெளியில் அப்படி ஒரு மழை பெய்து கொண்டிருந்தது.

உடனே அவன்,"எனக்கு ஏற்கனவே தலை வலி,இப்போ மழையில் நனைந்தால் காய்ச்சலும் வந்துவிடும்,இன்று ஒரு நாள் மட்டும் லீவ் போட்டு கொள்கிறேன்",என்றான்.

அதற்கு கோதை,"அப்பா ஆபிஸ் போகட்டும் நான் உன்னை ஆட்டோவில் நனையாமல் அழைத்துச் செல்கிறேன்,நீ போயி ரெடி ஆகு என்றாள்.அதற்குள் மழையும் நின்றுவிட்டது.

வழக்கமாக 3 இட்லியும் கெட்டி சட்னியும் வெளுத்து கட்டுபவன், இன்று மேத்ஸ் டீச்சரிடம் அடி வாங்க போவதை எண்ணி 1 இட்லி கூட முளுசாக சாப்பிட முடியவில்லை.

அவன் அம்மா அவனுக்கு பிடித்த வெஜிடபிள் பிரியாணியை லன்ச்சில் பார்சல் செய்து விட்டு ராமனிடம்,"போ போயி ஸ்கூல் பேக் எடுத்துட்டு வா,அப்பா பைக் ஸ்டார்ட் பண்ணிட்டு வெயிட் பண்றாங்க", என்றாள்.

சோகமே உருவாய் பேக் எடுக்க சென்றவனிடம் திடீரென்று ஒரு சத்தம் அம்மாஆஆஆஆஆஆ என்று.அலறி அடித்துக்கொண்டு ரூமிற்கு சென்றனர் அவன் அப்பாவும்,அம்மாவும்..ராமன் விரலில் ரத்தம் சொட்டியது,பென்சில் சீவும் போது விரலை வெட்டிக்கொன்டான் ராமன்.ரத்தத்தை பார்த்த அவன் அம்மாவோ தன் சேலையை கிழித்து அவன் விரலை சுற்றி கட்டினாள்.

மேத்ஸ் ஈச்சரின் அடிக்கு பயந்து ராமன் செய்த வேலை தான் இது,;) தெரிந்தே விரலை நறுக்கிக் கொண்டான்.இப்பொழுது மேத்ஸ் டீச்சர் வீட்டுப்பாடம் பற்றி கேட்டால் விரலில் காயம் ஆகி விட்டது,அதனால் தான் வீட்டுப்பாடம் முடிக்க முடியவில்லை என்று சொல்லி தப்பி விடலாம் அல்லவா.

என்னதான் தெரிந்தே விரலை நறுக்கிக் கொண்டு இருந்தாலும் ,காயம் சற்று நிறையவே வலிக்கத்தான் செய்தது.இருந்தாலும் டீச்சரின் அடிக்கு இந்த வலி எவ்வளவோ பரவாயில்லை,இந்த காயத்தை வைத்தே இன்னும் ஒரு வாரம் வீட்டுப்பாடம் செய்யாமல் நன்றாக நிறைய நேரம் தூங்கலாம் என்று எண்ணினான்.

வலியால் துடித்த ராமனை சமாதானம் செய்து ஒரு வழியாக பள்ளிக்கு அனுப்பினர் அவனது அம்மாவும்,அப்பாவும்.

ப்ரேயர் முடிந்ததும் மாணவர்கள் அனைவரும் வகுப்பிற்கு சென்றனர்,வகுப்பில் சிறு சத்தம் இல்லை,அவ்வளவு அமைதியாக இருந்தது,அனைவரும் மேத்ஸ் டீச்சரின் வருகைக்காக காத்து இருந்தனர்.அந்த நேரம் PT மாஸ்டர் வகுப்பிற்குள் நுழைந்தார்,ராமனுக்கு ஒன்றும் புரியவில்லை,மேத்ஸ் டீச்சர் வரும் நேரத்தில் PT மாஸ்டர் வந்திருப்பதை எண்ணி அனைவரும் குழம்பினர்.

PT மாஸ்டர்,"இன்று உங்கள் மேத்ஸ் டீச்சர் வரவில்லை லீவ்,ஆகையால் இந்த ஒரு மணி நேரம் PT நேரமாக மாற்றப்படுகிறது,மைதானத்திற்கு சென்று விளையாடலாம்",என்றார்.ராமனுக்கு தலையில் இடி இடித்தார் போல இருந்தது.

"தான் பட்ட கஷ்டம் அனைத்தும் வீணாகிவிட்டது,மேத்ஸ் டீச்சரின் அடிக்கு பயந்து தன் கை விரலை தானே வெட்டிக்கொண்டு வலியால் அவதியாயிற்று,டீச்சரோ பள்ளிக்கு வரவில்லை,அதற்கும் மேல் ரொம்ப நாள் கழித்து பள்ளியில் தனக்கு கிடைத்த நேரத்திலும் காயத்தால் அனைவரோடும் சேர்ந்து விளையாட முடியவில்லை",என்று எண்ணி மனம் வருந்தினான்.

தன் கடமையை சரியான நேரத்தில் முடித்துவிட்டால் யாருக்கும் பயப்பட தேவை இல்லை, தானும் கஷ்டப்பட தேவை இல்லை என்பதை நன்றாக புரிந்துக்கொண்டான் ராமன்.அன்று முதல் இன்று வரை தினமும் வீட்டுப்பாடத்தை சரியாக முடித்து விட்டு நல்ல மாணவனாக பள்ளியில் வலம் வர ஆரம்பித்துவிட்டான் ராமன்.

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.