(Reading time: 7 - 14 minutes)

வின்ஸ்டன் - வின்னி

winston

ன்று டொராண்டோவில் நல்ல வேப்பநிலை, 5 டிகிரி C. காருக்குள் சரியான வெக்கை. பனியும் குளிருமாக இருக்கும் மாசி மாதத்தில் இப்படியொரு காலநிலையா என்று எங்களுக்கு ஆச்சரியம்.

வீட்டு வாசலில்  உள்ள  ஐஸ் அகற்றத் தேவையில்லை என்ற சந்தோசம் . 

சகுவும் நானும் வின்ஸ்டனை  சிகை அலங்கார நிலையத்துக்குக் கொண்டு  போய் விட்டுவிட்டு டிம் ஹோர்ட ன் காபி ஷாப்பில் காலைச் சாப்பாட்டை சாப்பிடத் தீர்மானித்தோம்.

இந்த அமெரிக்க கம்பனியின் லாபத்தைக் கூட்டுவது எங்கள் நோக்கமல்ல!.

டொனல்ட் திறம்ப் அதை விரும்புவார். ஆனால் அவர் மேக்சிகோ எல்லையில் கட்டவிருக்கும் அந்த நீண்ட, உயரமான, பெரிய சுவரை, கனடாவின் எல்லைகளுக்குக்  கொண்டுவரமாட்டார் என்ற ஒரு அற்ப ஆசைதான் மூல காரணம்.

மகன்  எனது பிறந்தநாளுக்குத் தந்த டிம் ஹோர்ட ன் கிப்ட் கார்டைப்  பாவிக்க வேணும். அதைப்  பாவிக்காவிட்டால் அடுத்த வருடம் ஒன்றும் கிடையாது என்ற ஒரு சந்தேகம்தான் இன்னுமொரு காரணம்.     

அன்பளிப்பு தேடுவதில் அவனுக்கு கஸ்டம் கொடுப்பதில் எமக்கொரு இன்பம்.

எங்களைக் கெட்ட பெற்றோர்க்கள் என்று எண்ணி விடாதீர்கள்!

"அப்பா உன் பிறந்தநாளுக்கு என்ன வேணும் என்று கேட்பான்" 

நாங்கள் முதலில், எங்களுக்கு வயது போய் விட்டது, எங்களிடம் எல்லாம் இருக்கிறது ஒன்றும் வேண்டாம் என்று  சொல்லுவோம்.

அவன் கோபமாக  கத்தும் போது “சரி ஏதாவது விலை குறைந்த பொருளாகப் பார் என்று  சொல்லுவோம்”. தான் வேலை செய்யத் தொடங்கிய நாள்முதல் ஏதாவது வாங்கித் தந்தபடியெ இருப்பான்.

நான்தான் பணிஒய்வு பெற்று மூன்று வருடங்கள் ஆகிவிட்டதே. இருக்கும் உடுப்புகள் போடக்கூட இடமில்லை.

பல நாட்கள் மூளையைப் பிசைந்து கடைசியில் எதாவது விலை உயர்ந்த பொருளை வாங்கித்தருவான். அது அடுத்த வருஷம் வரை பெட்டியில்அப்படியே ஒரு மூலையில் இருக்கும்.

இளைப்பாறிய எங்களுக்கு ஏன் இந்தப் பொருட்கள்?   

இந்தத் தொல்லை தாங்காமல் அவன் கிப்ட் கார்டுகளை தந்து, "நீங்க உங்களுக்குத் தேவையானதை வாங்குங்க" என்று இருந்து விடுவான். இப்பஎங்களிடம், சியர்ஸ், மக்டோனல்ட்ஸ், வோல் lமார்ட் ,ரெட் லோப்ச்ட்டர், ச்விச்ஸ் சலே... இப்படிப் பல கிப்ட் கார்டுகள்  குவிந்துபோய்  இருக்கின்றன.

எங்களுக்கு வின்ஸ்டனால்  இந்தத்  தொல்லை  இல்லை. அது எங்களுக்கு ஒரு அன்பளிப்பும் தருவதில்லை. நாங்கள் இறக்கும்  போது ஒன்றையும்கொண்டு போவதில்லை என்ற தத்துவம் வின்ஸ்டனுக்குத் தெரியுமோ?  

வின்ஸ்டனின்  சிகை அலங்கரிப்பவர் கொலம்பியா தேசத்தைச் சேர்ந்தவர். அவருக்கு ஆங்கிலம் வராது. (நாயின் முடிவெட்ட ஒரு மொழி வேண்டுமா?).

அனால் அவர்கள் இருவரும் நன்றாகக்  கலந்து பேசி எமக்குத் தேவையான ‘குறு கட்’ அலங்காரத்தை அழகாகச் செய்துவிடுவார்கள். நாங்கள் இல்லாதநேரம் அவர்களுக்குள் என்ன பேசினார்களோ யாருக்குத் தெரியும்.

குரூ  கட், எந்த ஒரு போலீஸ் பயிற்ச்சியில் இருப்பவரும் விரும்பக்கூடிய ஒரு  அலங்காரமல்ல. எனது பள்ளிக்கூட நாட்கள் நினைவுக்கு வருகின்றன! "குரூ கட் “உன் முகத்தைத் தெளிவாகக் காட்டும் ". கடெட் மாஸ்டர் சொன்னது எனக்கு ஞாபகம் வருகிறது! அப்பாவுக்கும், அவருக்கும் எனது விருப்பம்பெரிதல்ல!

எனது சுத்தம் பண்ணாத விலையுயர்ந்த, மண்ணிறச் சப்பாத்து, கசங்கிய காக்கி யூனிபோம், சுருங்கிய தலை முடி, தமிழனுக்குத் தேவையான கருத்த தடித்த மீசை,ஒன்றையும் அவர்களுக்குப் பிடிக்காது.         

வின்ஸ்டனுக்கு அலங்காரம் நன்றாகப் பிடித்து விட்டது. சந்தோசத்தில் துள்ளிக் குதித்தபடி இருந்தது. நீண்ட வளைந்த  மயிர்கள் மறைந்தன, கூரான நீண்ட நகங்களும், காதுக்குள் இருந்த மயிர்களும், அதன் உடம்பிலும் காதிலும் இருந்த ஊத்தையும் மறைந்துவிட்டன.

அதனுடைய கருப்பும் உப்பு நிறமான மேனி அழகாக மினுங்குகிறது.

வின்ஸ்டனுக்கு அலங்காரத்துக்கு முன்னர் குளிப்பது பிடித்ததோ என்ற சந்தேகம் எனக்கு. ஆனால் ஷம்பூவின் வாசனை அதோடு சேர்ந்த கண்டிஷனர் எமக்குப் பிடித்தது. அதைக் கட்டிப் பிடித்துத் தழுவ வேண்டும் போல இருக்கும்.  

மூடிய கதவுகளின் பின்னால் என்ன நடந்ததோ தெரியாது! ஆனால்  எல்லாம் நல்லபடியாக முடிந்து விட்டது. வின்ஸ்டனுக்கு ஸ்பானிஷ் தெரியுமா?

ஏன் வின்ஸ்டனுக்கு இவ்வளவு வரவேற்பு? அங்கிருந்த இளம் பெண்களெல்லாம் அவனைக் கட்டிப்பிடிப்பதும், கொஞ்சுவதும், அவனோடு உரசுவதும்,அவனைப் பற்றி புகழ்ந்து சொல்வதும் எனக்கு பொறாமையாக இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.