(Reading time: 7 - 14 minutes)

காஷியர் மேசையின் அருகில் நின்ற கொளுத்த, துக்கமான முகத்துடனிருந்த பிரிட்டிஷ் புல் டோகுக்கு என்னைவிட இன்னும் பொறாமை. அதுவின்ச்டனை எரிச்சலோடு கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தது.

தன்னை விட மூன்று மடங்கு பெரிய அளவுள்ள அதைப்பார்த்து வின்ஸ்டன் குலைக்கத் தொடங்கியது.

அங்கிருந்த பெண்களை வைத்த கண் வாங்காமல் ரசிச்சுக்கொண்டிருந்தான் அந்த நாயின் சொந்தக்காரன். பயங்கர பச்சை குத்திய, தடித்த, ஆறடிஉயரமான அவனைப் பார்க்கவே பயமாக இருந்தது. அவன்  எங்களை முறைத்துப் பார்க்க, நாங்கள் பில்லுக்கு காசைக் கொடுத்து விட்டு, அங்கிருந்துமறைந்தோம்.

டிப்ஸ் கொடுக்க மறந்து விட்டீர்களே என்று வின்ஸ்டன் முனுமுனுப்பது கேட்கிறது.  

வீட்டுக்கு வந்ததும் வின்ஸ்டன் சந்தோசத்தில் தரையில் இருந்த  இரண்டு அங்குல தடிப்புள்ள “தமிழர் வழிகாட்டி” என்ற வியாபார கைநூலை சுக்குநூறாக கிழித்து, சிறு சிறு துண்டுகளாக வீடெல்லாம் பரப்பி வைத்தது.

ஆத்திரமடைந்த என் மனைவி அதை கூண்டினுள் அடைத்து வைத்து தண்டித்தாள். அது அதிக நேரம் நீடிக்கவில்லை. அதன்மேல் பரிதாபப்பட்டு அதை கூட்டுக்கு வெளியே விட்டு, இருவரும் விளையாடியபடி திரிந்தார்கள்      

ஒரு நாளும் பேப்பரைக் கிழிக்காத அதன் செய்கைக்கு என்னால் இரண்டு காரணங்கள்தான் கற்பனை செய்ய முடிந்தது.

முதலில் நாங்கள் அதற்கு தமிழ் வாசிக்கக் கற்றுக்கொடுக்கவில்லை! அடுத்தது அந்த புத்தகத்தில் தொண்ணுறு வீதம் விளம்பரம்.

வின்ஸ்டனை குறை சொல்ல முடியாது! எங்கள் இரண்டு பிள்ளைகளுக்கும் நாங்கள் அதே பிழையைச் விட்டோம்  அவர்களுடன் கதைப்பது ஆங்கிலத்தில்,கோபம் வந்து ஏசுவது மாத்திரம் தமிழில்! "நீங்கள் தமிழராகப் பிறந்தும், பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கவில்லையே" என்று வின்ஸ்டன்முனுமுனுப்பது கேட்கிறது!

வின்ஸ்டனின் தாய்மொழி என்ன என்று எங்களுக்குத் தெரியாது. ஜப்பனிசாக இருக்குமோ? அதை ஒரு ஜப்பான் காரரிடம் இருந்துதான் வாங்கினோம்!.ஆனால் அதன் பாட்டன், பூட்டன் எல்லாம் ஜேர்மனி.

ஹிட்லரின் செல்ல நாயும் அதே இனத்தைச் சேர்ந்தது.        

விவின்ஸ்டனுக்கு நாட்டின் பொருளாதார நிலை தெரியாது போலும். தனது  விலைஉயர்ந்த, சத்துள்ள நாய் சாப்பாட்டை விட, அது எனது உறைப்பானகோழி பிரியாணியைத் தான் தின்ன ஆசைப்படுகிறது.

விளம்பர பேப்பர் போடும் பக்கத்து வீட்டு பையன். ஒரு கிழமைக்கு இரண்டு டாலர்கள் டிப்ஸ்  கேட்கிறான்! ஏன் விளம்பரம் செய்பவர்கள் அவனுக்கு தகுதியான ஊதியம் கொடுப்பதில்லை?. கனடாவிலும் அடிமைத் தொழிலா?  

வின்ஸ்டன் அவனைக் கண்டால் கத்திக்  குலைக்கும். அவனும் குடல் தெறிக்க ஓடுவான்.  வின்ஸ்டனால் எனக்கு ஓர் வருசத்துக்கு நூற்றுனாலு டாலர்ஸ் சேமிப்பு!.

வின்ஸ்டனுக்கு சிறுபிள்ளைகளை நன்றாகப் பிடிக்கும், அந்தப் பையனைத் தவிர. அதற்கு முக்கிய காரணம் நாங்கள் சீனாவுக்கு விடுமுறையில் திரும்பி வந்ததும் முதலில் கண்டது, வீட்டுக்கு முன்னாள் விளம்பரப்  பத்திரிகைகள் காற்றில் எல்லா இடமும் பறந்தபடி இருந்ததுதான்.

எதிர் வீட்டில் ஒரு கூடைப்பந்து. பத்து, பதினைந்து பையன்கள் கூடி நின்று விளையாடுவது, ஓடிப்பிடிப்பது, சத்தம் செய்வது ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூடம் முடிந்ததும் நடப்பது.

நான் தென்னன மட்டையில் செய்த பட்டால் டென்னிஸ் பந்தில் நண்பர்களுடன் வீட்டுக்கு எதிரில் கிரிக்கட் விளையாடிய ஞாபகம் வந்தது. 

நா னும் வின்ஸ்டனும் வெளியில் அமர்ந்து அவர்கள் விளையாடுவதை ரசித்துக் கொண்டிருப்போம்.

அன்று இரு சிறுவர்களுக்கு இடையில் காரசாரமான வாக்குவாதம். அது சண்டையில் போய் முடிந்தது. ஒருவன் பேப்பர் போடும் பையனைக் கீழே தள்ளிஅடித்துக்கொண்டிருந்தான். அதைப்பார்த்துக்கொண்டிருந்த வின்ஸ்டனுக்கு பொறுக்க முடியவில்லை.

என் கையிலிருந்து பாய்ந்து அவரகளை நோக்கி துப்பாக்கி ரவை போல் வேகமாக் ஓடியது. அடித்துக்கொண்டிருந்தவன்மேல் அது பாய அவன் ஒரேஓட்டமாக ஓடி விட்டான். அவனைச் சிறிது தூரம் கலைத்துச் சென்ற வின்ஸ்டன் திரும்பி வந்து,  அடி வாங்கி, கீழே விழுந்து நோவில் அழுதபடி இருந்தபையனுக்கு அருகே சென்றது.

அவன் முகத்தை, ஒரு தாய் நோவிலிருக்கும் மகனுக்கு ஆறுதல் சொல்வதுபோல மணந்து, நக்கத் தொடங்கியது.

தன்னை வழமையாக குலைத்தபடி கலைத்துவரும் வின்ஸ்டனின் செய்கையைப் பார்த்து அந்தப் பையனும் தனது நோவை மறந்து வின்ஸ்டனை கட்டிப்பிடிக்தான்.

அவர்கள் இப்போது நண்பர்கள்!

தூரத்தில் அடித்தவனின் தாய் தன பிள்ளையை தாறுமாறாக ஏசிக் கொண்டிருப்பது தெரிகிறது.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.