(Reading time: 8 - 16 minutes)

தான் செய்த தவறை ஒப்புக்கொள்கிறார், ஒரு சபலத்தில் செய்த மிகப் பெரிய    தவறு என்கிறார்! “அவள் தன்னை மன்னிப்பாளா?” என்று வினவுகிறார். அதற்கு எற்ற தண்டனை எதுவாகிலும்  தான் எற்றுக் கொள்ளத் தயார் என்கிறார்.

அவர்கள் இருவரிடமும் எனக்கு ஏற்பட்டது ஒரு பரிதாப உணர்வு! ஆனால் என்னை ஒரு இக்கட்டான நிலைக்குத தள்ளிவிட்டார்களே என்று இருவரிடமும் எனக்கு கோபம் வந்தது.

அவர் சொன்னவற்றை அவரிடமிருந்து எழுத்தில் வாங்கிக்கொண்டு. அவரை ஒரு கிழமை தற்காலிக வேலை நீக்கம் செய்தேன்.                  

அவர்களில் யார் செய்தது தவறு என்பது எனக்குப் புரியவில்லை!. அவள் அவர் மனைவிபோல் அழகாக இருப்பதா? அல்லது அவர் அவளை அரவணைத்து முத்தமிட்டதா?

அழகாக இருப்பது தவறா? எனது மூளை வேலை செய்யவில்லை!   

அவளிடமும் நடந்தவற்றை எழுத்தில் வாங்குகிறேன், ஆனால் ராபர்ட் சொன்னவற்றை கிரிஸ்டீனிடம் கூறவில்லை.

விசாரணை வேண்டுமா  இல்லையா என்பதை அவள்தான் முடிவு செய்ய வேண்டும். அவளுக்கு ஒரு கிழமை அவகாசம் கொடுத்தேன்.

அடுத்த நாள் கிறிஸ்டீன் வேலைக்கு வரவில்லை! அவள் இருக்கும் மனோ நிலையில், வேலைக்கு வராமல் இருப்பதுதான் நல்லது என்று எனக்குத் தோன்றியது.

கிரிஸ்டீன் இல்லாமல் வேலை ஓடவில்லை. வீட்டுக்குப் போக வெளிக்கிடுகிறேன். தொலைபேசி அடிக்கிறது. அது கிறிஸ்டீன்!

என்னை உடனே சந்திக்க விரும்புவதாக கூறுகிறாள். அவளது வீட்டுக்கு அருகிலிருக்கும் காபி ஷாப்பில் முப்பது நிமிடங்களில் சந்திப்பதாகக் கூறுகிறேன்.

தற்போது உள்ள சூழ் நிலையில் அவளை தனிமையில் சந்திப்பது சரியா பிழையா என்று நான் யோசிக்கவில்ல! அவளுக்கு எந்தவிதத்தில் உதவி செய்யலாம் என்பதே எனது நோக்கம்!

இருவருக்கும் உணவு கொண்டுவர சர்வரிடம் சொல்கிறேன்.

அவள் சோர்ந்துபோய் துக்கமாக இருக்கிறாள். என்னை உன்னிப்பாகப் பார்க்கிறாள்! என்னிடம் என்னவோ சொல்லத் தயங்குகிறாள்! அவளது தயக்கத்தை நீக்க, "எதுவாயினும் என்னை நம்பி நீ சொல்லலாம்" என்று நம்பிக்கை ஊட்டுகிறேன்.

அவள் சொல்லப்போவது எனக்கு அதிர்ச்சியை கொடுக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை!   

அவள் ஐந்து வருடங்களாக என்னை நேசிப்பதாகக் கூறுகிறாள்! அதை என்னிடம் எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல், தனது கனவுகளை மனதுக்குள்ளே அடக்கி வைத்திருந்ததை சொல்கிறாள். என்மேல் உள்ள தனது காதலை வெளிப்படுத்துகிறாள்!

என்னை அறியாமலேயே அவளுடைய ஆசைகளை தூண்டி விட்டேனோ என்று எனக்குத் தோன்றுகிறது! ஐந்து வருடங்கள் அவளது காதலை உணராமல் இருந்ததை  என்னால் நம்பவே முடியவில்லை. என் மனதில் ஒரு குற்ற உணர்வு!

ராபர்டின் செய்கை அவளை இப்படிக் சொல்லத் தூண்டியதோ? என்று சந்தேகிக்கிறேன்!

அவளது காதலைப் பெறுவதற்கு நான் எவ்வளவு  கொடுத்து வைத்திருக்க வேண்டும்? அவளை மணந்தால் என் வாழ்க்கை எவ்வளவு நன்றாக இருக்கும்! ஒரு சிறிய சபலம் என் மனதில்!

அவளை மணப்பதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது?

அவளுக்கு என்ன சொல்வது என்று எனக்குப் புரியவில்லை! சற்றுத் தயங்குகிறேன். அவள் என்னைப் பற்றி என்ன நினைப்பாள்? ஒரு சங்கடமான நிலைமை!     

அவளை அதற்கு மேலும் என்னால் ஏமாற்ற முடியவில்லை! நான் தன்பாலீர்ப்பு கொண்டவன் என்பதை அவளுக்கு எடுத்துக் கூறுகிறேன். எனக்கு ஏற்கனவே ஒரு காதலன் இருப்பதாகக் கூறுகிறேன். அவனை விரைவில் வன்கூவரில் மணமுடிக்க இருப்பதாகக் கூறுகிறேன். 

அவளது முகம் சிவப்பாக மாறியது! கண்ணீர் துளிகள் அவள் கண்களிலிருந்து  கசியத் தொடங்கின! அவளது அழகிய கண்களில் தெரிவது ஏமாற்றமா? என்னை காதலித்ததில் அவளுக்கு அவமானமா? என் மனதில் பல சிந்தனைகள் !

ஒரு ஆணைக் காதலித்தவனுக்கு எப்படிப் புரியும் ஒரு பெண்ணின் உணர்வுகள்?ஆணோ! பெண்ணோ! காதல் என்பது ஒன்றுதானே!

ஆனால் தாம்பத்திய வாழ்க்கையில், பெருன்பான்பை சமூகம் அனுமதிக்காத, வழியை பின்பற்றுகிறவனல்லவா நான்! 

“உனக்கு என்னைவிட நல்ல கணவன் கிடைப்பான்” என்று அவளுக்கு ஆறுதல் கூறுகிறேன். அவள் என்னை அணைத்து, “என்னை மன்னித்து விடுங்கள்”, “நான் வருகிறேன்” என்று  கூறியபடி அங்கிருந்து புறப்பட்டாள்.

டுத்த நாள் ராபர்ட் தான் செய்த தப்புக்கு, அவளிடம் நேரடியாக மன்னிப்புக் கேட்கிறார். தனது பதவியை ராஜினாமாச் செய்து விட்டார்! இனியும் அவளை எதிர்கொள்ள, குற்றமுள்ள அவர்  நெஞ்சு இடம் கொடுக்கவில்லை. அவள் அவரைத் தடுத்தும் அவர் கேட்கவில்லை.

கிரிஸ்டீனும் சில நாட்களில் தலைமைக் காரியாலயத்துக்கு வேலை மாற்றம் எடுத்து சியாட்டல் சென்றுவிட்டாள். அவள் வேலை விட்டுப் போனது எனக்கு பேரிழப்பு. 

எனக்கும் ராஜுக்கும் வன்கூவரில் எமது  பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்தது. எமது உறவினர் ஒருவரும் திருமணத்துக்கு வரவில்லை! அது நான் எதிர்பார்த்ததுதான்!    

மூன்று வருடங்கள் பறந்து விட்ட.ன. நான் எனது  கணவன் ராஜுடன் அந்தக சியாட்டல் காபி ஷாப்பில் அமர்ந்திருக்கிறேன்.

கையில் அழகான பெண் குழந்தையுடன், ஒரு பெண் கணவரோடு நுழைவதைக் காண்கிறேன். என்னால் என் கண்களை நம்பவே முடியவில்லை!

அந்தச் சோடி வேறு யாருமல்ல, கிறிஸ்டீனும் ராபர்ட்டும்தான்.

அவர்கள் கணவன் மனைவியா? அவர்களுக்கு ஒரு குழந்தையா?

என் மனதில் ஒரு திருப்தி! வாழ்க்கை வாழ்வதற்கே என்பதற்கு அவள் ஒரு உதாரணம்!

அவர்கள் தனிமையை அழிக்க நான் விரும்பவில்லை! ராஜ் என் கைகளை அழுத்திப் பிடிக்கிறான்.

இந்த கதையில் வரும் எல்லாம் கற்பனையே. ஒருவரையும் குறிப்பிடுவதில்லை          

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.