(Reading time: 19 - 37 minutes)

வனது இந்த பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. இதயத்தில் ஏதோ பாராங்கல்லை தூக்கி போட்ட வலி. கொஞ்ச நேரம் திட்டி விட்டு திரும்ப மன்னித்து பேசி விடலாம் என்று தான் அப்படி சொன்னேன். ஆனா அவன், நான் பேசாதன்னா சரின்னு சொல்லுறானேன்னு ஷாக்.

“சரி விடு இனி இப்படி பண்ணாத.”

“இல்ல நிலா. என்னால உனக்கு கஷ்டம். நமக்குள்ள உள்ள நட்பு உடைய கூடாது. உன்னை நட்பா பார்க்க முடியலை. லவ் ஃபீல் தான் வருது. உனக்கு என் மேல லவ் ஃபீல் இல்லாதப்போ நாம பேசாம இருந்துருவோம். அதான் நல்லது.”

“ஹேய். விடு. அதுக்காக பேசாம எல்லாம் இருக்கவேண்டாம்டா என்னால முடியாது.”

“ப்ளீஸ். புரிஞ்சிக்க பேசவேணாம் நாம.”

“என்னை அழவைக்காதடா.”

“ஹேய் லூசு. உன்னால என்னை லவ் பண்ணமுடியாதுல்ல. அப்போ வேற வழி இல்லை. பேசவேணாம், அதான் நமக்கு நல்லது.”

“ப்ளீஸ்டா என்னை விட்டு போயிடாத லூசு.”

“என்னடி லவ் பண்ணுறவங்க பேசுற டயலாக் பேசுற ஆனா லவ் இல்லன்னு சொல்லுற. ம்ம். என்னை லவ் பண்ணுறீயா நீ?.”

“சீ. சீ. இல்லடா.”

“ஹேய். பொய் சொல்லாத.”

“இல்ல. இல்ல. சரி. அம்மா கூப்பிடுறாங்க நான் போறேன்.”

“ஹேய். சொல்லிட்டு போடி.”

“போடா எருமை. Bye.”

“ஹாஹா Bye.”

கட்டிலில் குப்புற படுத்து கன்னத்தில் கைவைத்து படத்தில் வரும் ஹீரோயினை போல காலை ஆட்டியபடி யோசித்தேன்.

“லவ் பண்ணுறேனா? அவனை?.”

“ஆமாம்..” என்றது மனது. அதோடு, “யெஸ். ஐ லவ் திஸ் இடியட். ஐ லவ் திஸ் லவ்வஃபிள் இடியட்..” என்று வயலின் இசையோடு பாட்டு வேற பாட தொடங்கியிருந்தது மனதில்.

அவனை என்னையும் அறியாமல் காதலித்து தொலைத்திருக்கிறேன். உண்மை உணர்ந்ததும் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சி பறந்தது.

சட்டென்று எழுந்து மொட்டைமாடிக்கு போனேன். ரம்யமாக காற்று வீசிக்கொண்டிருந்தது. துப்பட்டாவை காற்றில் பறக்கவிட்டபடியே,

விழிகளிலே விழிகளிலே புதுபுது மயக்கம் யார் தந்தார்..

அருகினிலே வருகையிலே புதுபுது மயக்கம் யார் தந்தார்..

உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்

எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்..”

என பாடிவிட்டு திரும்பி பார்த்தால், கண்களில் கண்ணீருடன் என் தம்பி அருண் நின்றிருந்தான்.

பதறியபடி “என்னாச்சுடா?.” என்றேன்.

“ஏன்க்கா உனக்கே நியாயமா இருக்கா?. இவ்வளவு நாளா என்னை மட்டும் பாட்டு பாடி கொன்னுட்டிருந்த. இப்போ மொட்டை மாடியில வந்து நின்னு எல்லாருக்கும் கேட்குற மாதிரி பாடி ஊர் மக்களை கொல்லப்பார்க்குறீயேக்கா..” என்ற அவனை அடிக்க விரைந்ததைப் பார்த்து “வெவ்வெவெவ்வே..” என அழகு காட்டியபடி ஓடினான் அவன். “எருமை மாடு..” என அவனை துரத்தி பிடித்து மொத்தி எடுத்தேன்.

பின்பு ஆசையுடன் என் காதலை பரத்திடம் சொல்ல நினைத்து, “லவ் யூ பரத்..” என டைப் செய்து அனுப்பினேன். Msg sending failed என்றே வந்தது. மறுபடியும் அனுப்பினேன். Msg sending failed என்றே வர, சரி போன் பண்ணலாம் என அவன் நம்பருக்கு அழைத்தால், சுவிட்ச் ஆஃப் என வந்தது.

மறுநாள் திரும்ப அனுப்பினேன். Msg send ஆகவே இல்லை. போன் பண்ணினால் யூசர் பிசி என வந்தது. என்னாச்சு அவனுக்கு என எண்ணி எண்ணி வேறு நம்பரிலிருந்து போன் பண்ணினேன். உடனே எடுத்த அவன், நான் தான் பேசுகிறேன் என்பதை அறிந்ததும், நான் அப்புறம் பேசுறேன் என சொல்லி கட் செய்துவிட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.