(Reading time: 19 - 37 minutes)

ழுகை முட்டிக்கொண்டு வந்தது. ஏன் அவாய்ட் பண்ணுகிறான்?. புரியவில்லை. அதோடு அன்றிலிருந்து அவன் Msg வருவதும் சுத்தமாக நின்றிருந்தது.

அவனிடம் பேசாமல் பித்து பிடித்தது போல் இருந்தது. சாப்பிட பிடிக்கவில்லை. தூங்க முடியவில்லை. செல்போனில் சோகபாடல்களை கேட்டு கேட்டு அந்த பாடலை தேய்த்துக்கொண்டிருந்தேன். அழுது அழுது தலையணை முழுதும் கண்ணீரின் கறை.

சோகத்திற்கு வடிகாலாய் கவிதை என்ற பெயரில் டைரியில் கிறுக்கி கொண்டிருந்தேன். செல் போனில் அவன் அனுப்பிய பழைய Msg எல்லாம் வாசித்தபடி இருந்தபோது ஒருகை செல்போனை பிடுங்கியது. யாரென்று பார்த்தால் அப்பா கோபமாக நின்றிருந்தார்.

“ஐ லவ் யூ டி.” என்று எனக்கு அவன் முன்பு அனுப்பிய Msg இருந்தது. வாசித்துவிட்டார் அதை. மேற்கொண்டு வேறு Msg வாசிக்க முற்படுகையில் ஆட்டோமேட்டிக் லாக் ஆகிவிட்டது. பின்பு என்ன, அடி விலாசி எடுத்துவிட்டார் என்னை.

“யாரவன்?.” என்று கேட்டதற்கு மட்டும் கடைசி வரையில் நான் அவன் பெயரை சொல்லவில்லை.

வெளியே எங்கும் போகமுடியவில்லை. ஹவுஸ் அரெஸ்ட் பண்ணி விட்டார்கள். மலரும் முன்பே கருகிய காதலுக்கு அடிவாங்கியது நான் மட்டுமாகத்தான் இருக்கமுடியும். அவனிடம் பேசவும் முடியவில்லை. அவனை மறக்கவும் முடியவில்லை.

என் தோழி கீதாவிடம், அவன் கடை விலாசம் தந்து என் பேரை சொல்லி அவனுக்கு என்ன பிரச்சினை என கேட்க சொன்னேன். அவன் என் பேரை கேட்டதும் யார் என்றே தெரியவில்லை என சொல்லிவிட்டானாம். போதாத குறைக்கு இவள் அண்ணா என கூப்பிட்டதற்கு சிடுசிடுத்தான் போல. தலையில் அடித்துக்கொண்டேன்.

ஒருவேளை டைம் பாஸிற்கு பழகி இருப்பானோ?. நானா அவனிடம் பேசினேன்?. நானா ஐ லவ் யூ சொன்னேன்?. நானா கையை பிடிச்சேன்?. எல்லாம் பண்ணிட்டு இப்படி ஓடிட்டானே என மனது கதறியது.

எப்பொழுதும் அழுது கொண்டே இருக்கிறேன் என்பதற்காக என் பெரியம்மா வீட்டிற்கு என் அம்மா அனுப்பி வைத்தார்கள் என்னை..

அங்கு என் பெரியம்மாவை பார்க்க வந்த ஒரு அம்மணி, என்னை பார்த்தவுடன், “ரொம்ப அழகா இருக்காளே, என் தம்பி மகனுக்கு பொண்ணு பார்த்துட்டு இருக்குறோம். இவளை தருவாங்களான்னு இவங்க வீட்டுல கேட்டு சொல்லுங்க..” என்று கொளுத்தி போட்டுவிட்டு போய்விட்டார்கள்.

“அய்யய்யோ.. அவன் நினைவே அகலவில்லை. இதுல கல்யாணமா?. அதும் இன்னொருத்தனோட?.”.. நினைக்கவே கொடுமையாக இருந்தது.

இரண்டு நாள் கழித்து என் அப்பா வந்து, “உனக்கு கல்யாணம் முடிவு பண்ணியிருக்கேன். பையன் பேரு ராம். பிசினெஸ் பண்ணுறான். அடுத்த மாசம் கல்யாணம்.” என ஏதோ பக்கத்து வீட்டு பிள்ளைக்கு கல்யாணம் என்று கூறுவது போல் சாதாரணமாய் தகவலை ஒரு பெரிய குண்டாய் தூக்கி போட்டு விட்டு சென்றார்.

செத்துவிடலாம் போல இருந்தது. ஆனால் விஷம் குடித்தால் கசக்குமே. தூக்கு மாட்டினால் வலிக்குமே என பயந்து அந்த முடிவினை கைவிட்டு என் கல்யாணம் என்னும் கொடுமையான நாளுக்காக காத்திருந்தேன்.

இன்று என் மணநாள். அழகிய பட்டுடுத்தி, அலங்காரத்துடன் அமர்ந்திருந்தேன் உதட்டில் சிறு சிரிப்பு கூட இல்லாமல்.

கனவுகள் அனைத்தும் சுக்கலாய் உடைந்த வெறுமையுடன் மணமேடைக்கு அழைத்துவரப்பட்டேன்.

அருகில் அமர்ந்திருக்கும் மணமகனை ஏறிட்டு கூட பார்க்கவில்லை. கெட்டிமேளம் கெட்டிமேளம் என கூறியவுடன், அவன் என் கழுத்தில் தாலி அணிகையில் கண்ணில் கண்ணீர் பொங்க அவனை நிமிர்ந்து பார்த்தேன்.

எதிரே என் செல்லம், என் டியர், என் உலகம், என் உயிர், என் ராஜகுமாரன் இருந்தான். என் கண்ணில் தெரிந்த அதே ஆச்சரியம் அவன் கண்ணிலும்..

ஒன்னும் புரியவில்லை. இவன் எப்படி மாப்பிள்ளையாய்?.

திருமணம் முடிந்ததும் அவனுடன் பேசும் சந்தர்ப்பம் அமையவே இல்லை. திருமண சடங்குகள் எல்லாம் முடிந்து அன்று இரவு அலங்காரங்களுடன் அவன் அறைக்குச் சென்றேன்…

என் எதிரில் அவன்… அவன் எதிரில் நான். இது கனவா நனவா புரியவில்லை.

என்னை காதலாக பார்த்த அவன் சட்டையை கொத்தாக பிடித்து உலுக்கியபடி,

“எருமைமாடு எங்கடா போயிட்ட?. ஏண்டா எங்கிட்ட பேசலை லூசு?. நான் செத்துட்டேன் தெரியுமா?.” என சொன்னதும்,

“அப்போ என் முன்னாடி இருக்குறது யாரு, பேயா?. ஆசையா கட்டிப்பிடிப்பேன்னு பார்த்தா கொத்தா சட்டைய பிடிக்குற?. சரி இரு இரு.. என்ன ஆச்சுன்னு சொல்லுறேன். அன்னைக்கு என் பர்த்டே அப்போ உங்கிட்ட பேசும்போது வீட்டுல இருந்தேண்டி. பர்த்டே அப்போ வீட்டுல இருக்குறவங்க கிட்ட பேசாம யார்கிட்ட பேசுறன்னு அம்மா வந்து செல்ல புடுங்கி பார்த்துட்டாங்க. அவ்வளவுதான் ரொம்ப பிராஃப்ளம் ஆகிட்டு. இப்போவே அந்த பொண்ணுகிட்ட பேசமாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணுன்னு சத்தியம் வாங்கிட்டாங்க. அதோட கண்காணிச்சிட்டே இருந்தாங்க. என்னால உங்கிட்ட எதுவுமே சொல்லமுடியலை சாரி நிலா. அப்புறம் திடீர்னு அம்மா ஒரு வாரத்துல வந்து உனக்கு கல்யாணம் முடிவு பண்ணிட்டேன். ஒரு மாசம் கழிச்சு கல்யாணம், நீ தாலி மட்டும் கட்டு. என்னை அவமானப்படுத்திடாதன்னு அழுதுட்டே போயிட்டாங்க. என்னோடதும் ஒன் சைட் லவ் தான. நீ என்னை லவ் பண்ணுறேன்னு சொல்லவே இல்லையே. அதனால வேற வழி இல்லாம அம்மா பார்த்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணினேன்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.