(Reading time: 6 - 12 minutes)

 ‘னக்கும் ஆசை தான்டா. வெயிட் பண்ணு. நானே ஒரு நாள் கால் பண்றேன். வீட்ல எல்லோரும் இருக்காங்க..’ என்றாள்.

 அடுத்த நாள், ‘மகேஸ் நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே..?’

‘ சொல்லு மது..’

 ‘ஒரு ஐம்பது ருபா ரீசார்ஜ் பண்ணிவிடேன்.’

 ‘கண்டிப்பா பண்ணிவிடுறேன். இதெல்லாம் யாராவது தப்பா நெனப்பாங்களா லூசு.’ என உடனே ரீசார்ஜ் பண்ணிவிட்டான். ஒவ்வொரு நாளும் மெசேஜில் பேசி நெருக்கமானார்கள்.

 இரண்டு நாட்கள் கழித்து, ‘மகேசு இப்ப புதுசா வந்த படத்துல பாட்டுலாம் நல்லாயிருக்கு. டவுண்லோடு பண்ணணும். நெட் கார்டு போட்டு விடேன்’ என்று மெசேஜ் அனுப்பினாள்.

 உடனே அவனும் போட்டு விட்டான். இப்படி அவள் ஒவ்வொரு முறை கேட்கும் போதெல்லாம் தவறாமல் ரீசார்ஜ் பண்ணிவிட்டான்.

‘‘மகேசு உன்ன மாதிரி ப்ரெண்டு கிடைக்க குடுத்து வச்சிருக்கணும்டா.’’

‘‘ ஏன் அப்படி சொல்லுற…’’

‘‘ என்னமோ தெரியலடா … உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.’’

‘‘ எனக்கும் தான்டீ..’’

‘ மது இப்படியே எத்தன நாளைக்கு தான் மெசேஜிலே பேசிக்கிட்டு இருப்ப. சீக்கிரமா கால் பண்ணு. உன் வாய்ச கேட்கணும்ணு ரொம்ப ஆசையா இருக்கு.’

‘‘எனக்கு மட்டும் ஆசை இல்லயாடா. இது அப்பா மொபைல்டா. என்கிட்ட மட்டும் மொபைல் இருந்தா என்னைக்கோ பேசிருப்பேன்டா.. ப்ளீஸ் புரிஞ்சுக்கோடா’’

‘‘ம்ம்ம்… சரிப்பா…’’

 மது உங்கூட பேசனும் போல இருக்கு என்று அவன் ஒவ்வொரு முறை கேட்கும் போதெல்லாம் எதாவது ஒரு காரணம் சொல்லி தவிர்த்து கொண்டே வந்தாள். ஆனால் அடிக்கடி ரீசார்ஜ் மட்டும் பண்ண சொன்னாள். இவனும் வீட்டில் எதாவது பொய் சொல்லி பணம் வாங்கி ரீசார்ஜ் பண்ணிவிட்டான். இரண்டு மாதத்தில் ஆயிரம் ருபாய்க்கு மேல் ரீசார்ஜ் பண்ணியிருந்தான். ஆனால் ஒரு நாள் கூட போனில் பேசியதில்லை.

 ப்படியாவது போனில் பேச வேண்டும் என்று நினைத்த அவன் இ ஒரு நாள்; மதுவுக்கு போன் செய்து, தன் தங்கச்சியை பேச வைத்தான்.

ரிங் போனது,

 ஒரு வாலிப பையன் போனை எடுத்து, ‘ஹாலோ..’ என்றான்

 ‘நான் மதுமிதா ப்ரண்ட் பேசுறேன். அவ இருந்தா பேச சொல்லுங்களேன்;’ என்று மகேஸ் தங்கச்சி சொல்ல..

 ‘இங்க அப்படி யாரும் இல்ல. ராங் நம்பர்’ என கட் பண்ணினான். திரும்ப வேறொரு போனில் இருந்து கால் பண்ணினான். மறுபடியும் ராங் நம்பர் என்றார்கள்.

 மகேசுக்கு குழப்பமாக இருந்தது. மது என்ற பெயரில் நமக்கு மெசேஜ் பண்ணுவது யார் என கண்டுபிடிக்க தொடங்கினான்.

 று நாள் மகேஸ், அந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணிக் கொண்டே இன்னொரு நம்பரிலிருந்து கால் பண்ணினான். வாலிப பையன் போனை எடுத்தான்.

 ‘ஹாலோ நான் அன்பு பேசுறேன். மதுமிதா இருந்தா பேச சொல்லுங்களேன்.’

 ‘இங்க அப்படி யாரும் இல்லங்க. ராங் நம்பர்.’

 ‘அப்படின்னா மதுங்கிற பெயருல, இந்த நம்பரிலிருந்து மகேசுக்கு மெசேஜ் பண்றது யாரு..?’

 ‘அப்படி யாரும் மெசேஜ் பண்ணலயே..’

 ‘பொய் சொல்லாத. இப்ப கூட இந்த நம்பரிலிருந்து மெசேஜ் வந்ததே. மதுங்கிற பேருல ஏமாத்துறது நீ தானா.. சொல்லு..’ என்று கோபமாக கேட்க, முதலில் மறுத்தவன் பின்பு ஒரு கட்டத்தில்

 ‘ஆமாண்டா. நான் தான். அதுக்கு இப்ப என்னடா’ என்று போனை கட் பண்ணினான்.

 அடுத்து போன் செய்தால், ‘சுவிட்ச் ஆப்’ என்றது. மது என்கிற பெயரில் இவ்வளவு நாள் மெசேஜ் பண்ணியது ஒரு ஆண் என்பதை அவனால் நம்பமுடியவில்லை. பெண்களின் பெயரில் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என வருத்தப்பட்டான் மகேஸ்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.