(Reading time: 30 - 60 minutes)

.....அவர் பேத்தி என்று சொன்னது இவளை தானா???

“ அது நீதானாத்தா வந்தோனே சொல்லக்கூடாது நா வேற யாரோணு நினசுட்டேன்..... மன்னுச்சுக்கொத்தா “ சில நிமிடங்களுக்கு முன் தன்னிடம் கோவம் கொண்டவர் இவர் இல்லயோ என்று குழம்பிவிட்டாள் சுஹா

ஐய்யோ பரவால்ல ஐயா பெரியவங்க நீங்க எண்ட்ட மன்னிப்பு கேக்காதீங்- சுஹானா

“ யாரா இருந்தா என்னத்தா தப்பு பண்ணா மன்னிப்பு கேக்கணும்

“ பரவால்ல ஐயா “

இதற்க்குள் நடந்ததை ஆதவ் மூலமாய் அறிந்த சித்தார்த் “ எவ்ளோ நேரம் நின்னுட்டே பேசுவீங்க வாங்க உள்ள போகலாம் “

“ ஆமாயா பிள்ள ரொம்ப நேரம் நிக்குது உள்ள கூட்டிட்டு போயா “

நீங்களும் வாங்க தாத்தா –சித்தார்த்

தாத்தா மாத்திரை போட டைம் ஆச்சு அவர் ரெஸ்ட் எடுக்கட்டும் நாம போகலாம் வாங்க என்றான் ஆதவ்

அவரிடம் இருந்து விடைப்பெற்று நடந்தவர்களுக்குள் ஆதவின் காலில் ஏதோ பட்டு தடுமாற டேய் பாத்துடா என்று சித்தார்த் ஆதவின் கைகளை பற்றிக்கொண்டு நடக்க சுஹானா பின்னால் மெதுவாய் வந்தாள்

டேய் நான் போய்க்குவேன் நீ சிஸ்டெர்ர கூட்டிட்டுவா என்று முன்சென்றான் ஆதவ்

என்னாச்சு அம்மு தாத்தா கூட என்ன ஃபைட் – சித்தார்த்

அவனிடம் நடந்ததை சொன்னவள் ஏங்க அவர் இவ்ளோ டென்ஷன் ஆனார் என கேட்டாள்

“ அது முருகேசன் தாத்தாடா அவர் வொய்ஃப் இப்ப தான் ரீசண்ட்ட்டா இறந்துட்டாங்க அவங்க பசங்க வெளிநாட்டுல இருக்காங்க இவர அங்கேயும் கூட்டிட்டு போக முடியாத சிட்சுவேஷன் அதான் அவர இங்க சேர்த்து விட்டுட்டாங்க மாசம் ஆனா அவருக்குனு ஒரு அமெளண்ட் அவர் அகௌண்ட்ல போட்டு விட்டுருவாங்க அதையும் இந்த இல்லதுக்கே குடுத்துருவாரு நல்ல மனுஷன் “

அவனின் பதிலில் மேலும் குழம்பபினாள் “ என்ன அம்முக்கு குழப்பமா இருக்கா “

அதற்க்கு அவளோ முதலில் ஆம் என்பது போல் மேலும் கீழும் தலையசைத்து அடுத்த நொடி இல்லை என்பது போல் இடம் வலமாக தலையசைத்தாள்

அவள் உச்சந்தலையில் தன் வலக்கையை வைத்து மெதுவாக ஆட்டியவன்  “ சரி உள்ள வா எல்லாம் போக போக புரியும் “ என்று அவளை அழைத்துச்சென்றான்

முதலில் அவன் அவளை அழைத்துச்சென்றது ஆதவ் மற்றும் அவனின் உதவியாளன் ரமேஷ் மற்றும் மேலும் இருவர் இருக்கும் ஆஃபிஸ் ரூம்

ஆதவிடம் இவளயும் அழைத்துச்சென்று பேசிக்கொண்டு இருந்தான் அந்த பேச்சுக்கள் எல்லாம் பெர்சனல் என்று இல்லாமல் ஸ்வீட் நத்திங்ஸ்சாக இருந்ததால் அவர்களின் பேச்சுக்களுடன் இவளும் சேர்ந்துக்கொண்டாள் அப்பொழுது தான் அதை உணர்ந்தாள் அவள் அது.... அதவ் ஒரு பார்வையற்றவர் என்பதை

அவனுடன் பேசும் யாரும் இதை எளிதில் கண்டுபிடிக்க முடியாது கடவுளின் படைப்பில் எல்லோரும் சமம் என்றாலும் நமக்குள் இருக்கும் திறமை மட்டுமே நம்மை வேறு படுத்த முடியும் ‌அந்த வகையில் ஆதவ் ஒரு அதிமேதவி தான் அவனிடம் பேசியவள் அவன் ஒரு சாஃப்ட் ஸ்கில்ல் டிரைனர் என்பதை அறிந்துக்கொண்டாள் அவன் சொல்லாமல் இருந்தால் கூட அவன் பேச்சுக்கள் அதை சொல்லி விடும் எல்லா விஷயங்களுக்கும் பாசிட்டிவ் நெகட்டிவ் சைட்ஸ் உள்ளது என்றால் அவனுக்கு நெகட்டிவ் கூட பாசிட்டிவ் தான் யாருக்கும் அப்படி ஒரு ஊக்கம் குடுக்கும் அவன் வார்தைகள்

இங்கு தனக்கும் இன்னும் என்னென்ன புது அனுபவங்கள் காத்துகிடக்கின்றாதோ என்று எண்ணத்தொடங்கினால் சுஹானா பாவம் அவளுக்கு தெரியவில்லை இன்னும் சிறிது நேரத்தில் அவள் நிலை என்ன ஆக போகபோகிறதென்று

அவனிடம் பேசிவிட்டு அவளை அந்த இல்லத்தை சுத்தி பார்க்க அழைதுசென்றான் சித்தார்த்

அந்த இரு மாடி கட்டிடதில் கீழ் தளம் முழுவதும் முதியவர்களுக்கும் மேல் தளம் வயதில் கொஞ்சம் சிரியவர்களுக்கும் என்று பிரித்து இருந்தனர் பார்ப்பதற்க்கு ரொம்ப விசாலமான கட்டிடங்கள் தான் மேலும் அதன் பக்கவாட்டிலும் அதே அளவு இன்னொரு கட்டிடம் அது அங்கு உள்ளவர்களுக்கு சிறுதொழில் கற்பிக்க உபயோக படுதப்படும் கட்டிடம்

அவளுக்கு அதன் சுற்றுபுறங்கள் மற்றும் அங்கு உள்ள மக்களின் எண்ணிக்கை என ஒவ்வொன்றாக விளக்கிக்கொண்டு வந்தான் அவள் கணவன் பிறகு அங்கு உள்ளவர்களை சந்திக்க என்று அவன் முதலில் அவளை அழைத்துச்சென்றது அந்த முதியவர்கள் இருக்கும் பகுதி

அவன் உள்ளே நுழையும் முன்பே வாசலில் இருந்தே ஏகபோக வரவேற்பு தான் “எப்படி இருக்காப்பா? ஏன் இப்பல்லாம் அடிக்கடி வரதில்ல? முன்னைக்கு இப்ப இழசுட்டெயே?” என்ற அனைவரின் கேள்விகளுக்கும் பொறுமையாய் பதில் உரைத்துக்கொண்டு இருந்தான் சித்தார்த்

இவளோ அந்த பகுதியை கண்களாலே அளக்க ஆரம்பித்து இருந்தாள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.