(Reading time: 7 - 13 minutes)

ம்மா, சாவி கிடச்சிருச்சு’ என்று சாவியை எடுத்துக் கொண்டு ஓடிப்போனான் முத்து. உழுத வயில் மழைத்துளி விழுந்தவுடன். எப்படி பறந்து போகுமோ, அப்படி முத்து வீட்டிலுள்ளவர்களின் கவலையும் பறந்து போனது..

அன்று சாயங்காலமே புது வேட்டி, சட்டை, இனிப்பு ஐநூறு ரூபா பணத்துடன் முத்துவின் அப்பா, வேலுச்சாமி தாத்தாவுக்கு நன்றி சொல்லிவிட்டு வந்தார்.

இந்த சம்பவத்திற்கு பின், நான் முத்து, வேலுச்சாமி இன்னும் நெருக்கமாகி போனோம். அதன் பின் அரையாண்டு பரிட்சை லீவு விட்டார்கள். நானும், முத்துவும் வேலுச்சாமி வீட்டுக்கு போனோம். வேலுச்சாமி எங்கள் இருவரையும் காட்டுக்குள் கூட்டிக் கொண்டு போய் சுற்றி காட்டினான். யானையின் கால்தடம், முயல், மர அணில் தண்ணீர் குடிக்கும் மான்கள் ஆகியவற்றை காட்டினான். பின்பு வேலாம் பழம், சூரிப்பழம் பரித்து சாப்பிட கொடுத்தான்.

நானும் முத்துவும் வீட்டுக்கு போகும் போது வேலுச்சாமியின் அப்பா தேன், வள்ளிக்கிழங்கு குடுத்து அனுப்பினார்.

று நாள் வேலுச்சாமி, முத்து வீட்டுக்கு வருவதாக சொல்லியிருந்தான். வேலுச்சாமி வந்ததும், மூன்று பேரும் பக்கத்தில் இருக்கும் கிரவுண்டில் கிரிக்கெட் விளையாடிவிட்டு, முத்து வீட்டுக்கு வந்தோம்.

கிரிக்கெட் விiளாயடி விட்டு, வேலுச்சாமியை அப்படியே வீட்டுக்கு அனுப்பியிருக்க வேண்டும். அப்படி அனுப்பாத தான் நாங்கள் செய்த பெரிய தவறு.

முத்துவின் வீட்டுக்கு வந்ததும், முத்துவின் அம்மா செம்பில் தண்ணீர் குடிக்க குடுத்தார். முத்து தண்ணீர் குடிக்க குடுத்தார். முத்து தண்ணீர் குடித்துவிட்டு என்னிடம் குடுக்க, நான் குடித்துவிட்டு செம்பை வேலச்சாமியிடம் நீட்ட,

‘தம்பி, அந்த செம்புல தண்ணீக் குடுக்காதப்பா..’

‘ஏன்ம்மா..’

‘அது எல்லோரும் புளங்குற செம்புடா..’

‘அதுல அவன் தண்ணி குடிச்சா என்னம்மா..’

‘குடிக்க கூடாதுப்பா..’

தண்ணீர் செம்பை வாங்க கைகளை நீட்டிய வேலுச்சாமி கைகளை இறக்கினான். அவன் முகம் வாடிப்போனது. கண்கள் கலங்கி போனது. தலையை அப்படியே குனிந்து கொண்டு நேராக சைக்கிளை எடுத்துக் கொண்டு வேகமாக கிளம்பி போனான்.

‘டே நில்லுடா வேலு, நில்லுடா’ என கத்தினோம். அவன் திரும்பி கூட பாhக்கவில்லை. போயே போய்விட்டான்.

‘அவனுக்கு ஏம்மா தண்ணி குடுக்காம அசிங்கப் படுத்துனீங்க.’

‘அவங்க தாழ்ந்த சாதிடா தண்ணி தரக்கூடாது..’

‘ஏம்மா அவங்க சாவி கண்டுபிடிச்சு தரும்போது … தேனு வள்ளி கிழங்கு தரும் போது உங்க சாதி எங்கம்மா போச்சு.. சொல்லுமா’ என்று கேட்க.

முத்து அம்மாவுக்கு பதில் சொல்ல முடியவில்லை.

நானும் முத்துவும் மறுநாள் வேலுச்சாமி வீட்டுக்கு போனோம். வேலுச்சாமி வெளியுரில் இருக்கும் அவன் அத்தை வீட்டுக்கு போய்விட்டதாக சொன்னார்கள். ஒரு நல்ல நண்பனை வீட்டுக்கு கூப்பிட்டு அவமானப்படுத்தி விட்டோமே என வருத்தமாக இருந்தது.

 அரையாண்டு பரிட்சை லீவு முடிந்து பள்ளிக்கூடம் வந்த வேலுச்சாமி என்னிடமும் முத்துவிடமும் பேசாமல் முதல் பெஞ்சில் போய் அமர்ந்து கொண்டோம். மதிய இடைவேளையில் அவனிடம் போய்,

 ‘எங்கம்மா அப்படி பேசுனதுக்கு சாரி டா வேலு. அவங்க வேணும்னா சாதி பார்த்து பழகியிருக்கலாம். நாங்க அப்படி ஒரு நாள் கூட நினைச்சது இல்லடா’ என்று அவனை சமாதானப்படுத்தினோம்.

 அதற்கு பிறகு எங்கள் நட்பை யாரலும் பிரிக்க முடியவில்லை. தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.