(Reading time: 9 - 17 minutes)

2017 போட்டி சிறுகதை 03 - நலம் நலமறிய ஆவல் – கீர்த்தனா

This is entry #03 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - நலம் நலமறிய ஆவல்

எழுத்தாளர் - கீர்த்தனா

 Old Parents

காலைப் பொழுது எப்பொழுதும் போல் விடிந்தது. அந்த காலைப் பொழுதில் சூரியன் தன் பொன் ஒளி கதிர்களை வீசியபடி எழுவதை பார்க்க சிலருக்கு பிடிக்கும். பறவைகளின் ரீங்காரம் பிடிக்கும் சிலருக்கு. இரை தேடும் பறவைகளை பார்ப்பது தெவிட்டாத இன்பமாக இருக்கும் சிலருக்கு. மலர்ந்து வீசுகின்ற மலர்களின் வாசனை பிடிக்கும் சிலருக்கு. ஆனால் இவர்களுக்கு....????

45 வருடங்களுக்கு முன்பு:

இனி வரும் நிகழ்ச்சிகளை இரண்டு வீட்டிலும் ஒரே கால கட்டத்தில் நடப்பதாக கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள்.

பெண் குழந்தைகளே சாபக் கேடாக எண்ணிக் கொண்டிருந்த காலமது.

"எனக்கு பையன் பொறந்துட்டான்.ஊருக்கே கெடா விருந்து போடணும்" என ருத்ர மூர்த்தி வீட்டில் இருந்தவர்களிடம் சொல்லி அதற்கான ஏற்பாடுகளை பார்க்க சொன்னார்.

கறி விருந்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடை பெற்றது. ஊர் மெச்ச கறி விருந்தை நடத்தி முடித்தார் ருத்ர மூர்த்தி.

"அம்மாஆஆஆ  எனக்கு அந்த மஹாலக்ஷ்மியே பொண்ணா பொறந்திருக்கா. பாருங்கம்மா" என செல்வம் மகிழ்ச்சியுடன் அவன் தாயிடம் கூறிக் கொண்டிருந்தார்.

"அட கூறுகெட்டவனே உன் பொண்டாட்டி பொம்பளை பிள்ளையை பெத்துருக்கா.அதுக்கு போய் இந்த கூச்சல் போடற. போ போய் கள்ளி பால் ஊத்தி கொன்னுட்டு அடுத்த வேலையை பாரு" என அவன் தாய் அவரிடம் கூறினார்.

செல்வம் அதிர்ந்து "என்னம்மா இப்படி சொல்லிட்டீங்க.குழந்தைகளே அந்த தெய்வத்தோட வரங்கள்ம்மா. பெண் குழந்தைகள் வாழும் வீடு, கடவுள் குடியிருக்கும் இடம்மா.அதை போய் எப்படிம்மா  கொல்றது? இவ எனக்கு வந்த வரம்மா.அவளை எக்காரணம் கொண்டு ம் நான் கொல்ல மாட்டேன்" என்றார்.

செல்வம் தாயோ "அங்க பார் ருத்ர மூர்த்தி பொண்டாட்டில்லா பையனை பெத்து கொடுத்துருக்கா. எனக்கும் வந்து வாய்ச்சுருக்கே பொம்பிளை பிள்ளையை பெத்து கொடுத்திருக்கு.என்ன சாபமோ?என்னமோ பண்ணி தொலை.இனி இவள் விஷயத்துல நான் தலையிட மாட்டேன்" என்று கூறிவிட்டார்.

செல்வத்தின் தாய் அவன் மனைவியிடம் "இதை பாரு இதான் பொம்பளை பிள்ளையா போச்சு. அடுத்து ஆம்பளை பிள்ளையை பெத்து தரணும். இல்லை………….." என்று கையை நீட்டி மிரட்டினார். அவள் செய்வதறியாது தவித்து நின்றாள்.

தாயாக பெண் வேண்டும். சகோதரியாக பெண் வேண்டும். வீட்டுக்கு விளக்கேத்த மனைவியாக பெண் வேண்டும். ஆனால் பிறக்கும் குழந்தை மட்டும் ஆணாக வேண்டுமாம். பெண்கள் வாங்கி வந்த சாபம் இது.

தன் மகன் தான் உலகத்துக்கே ராஜாவாகா இருக்க வேண்டுமென எண்ணி மகனுக்கு அவனீஷ்(Lord of Whole world) என்ற நாமம் சூட்டினார்.மகன் வளர வளர ருத்ர மூர்த்தியிடம் அகங்காரமும் தற்பெருமையும் சேர்ந்தே வளர்ந்தது. தந்தையை பார்த்து வளர்ந்தவனுக்கோ அந்த ஆணாதிக்க குணம் அவனிடம் நிரந்தரமாக குடி கொண்டது.

மகளின் முகத்தை பார்க்கும் போதே நிலவு போல் தெரிய மதி என்ற பெயர் வைக்க ஆசை பட்டார். மஹாலக்ஷ்மியே வீடு தேடி வந்திருப்பதால் அவளுக்கு "ஸ்ரீமதி" என்று பெயர் சூட்டினார்.சிறு வயதில் இருந்தே அவள் தவழ்ந்தது நடந்தது என அனைத்தையும் பெருமையுடன் அனைவரிடமும் கூறுவார்.

ருத்ர மூர்த்தி செல்வத்தை பார்க்கும் பார்வையில் ஒரு ஏளனம் தெரியும். பெண் மகவு பெற்றவன் என்ற இளக்காரம் அவர் பார்வையில் தெரியும். ஊரில் இருக்கும் அனைவரிடமும் செல்வத்தை பற்றி அவதூறாக கூறுவார்.  செல்வம் அதைப் பற்றி கவலையே பட மாட்டார்.அவருக்கு அவர் மகள் அனைவரையும் விட ஒரு படி மேல் தான்.

செல்வம் எங்கே அடுத்து தனக்கு ஆண் குழந்தை பிறந்தால், அம்மா ஸ்ரீமதியை ஏதாவது சொல்லி விடுவார்களோ என்று அடுத்த குழந்தையையே பெற்று கொள்ளவில்லை.

ருத்ர மூர்த்தி தன் மகனை ஆங்கில வழி கல்வி கற்பிக்கும் பள்ளியில் தான் சேர்ப்பேன் என்று சேர்த்தார்.செல்வத்திற்கும் அதே ஆசை இருந்த காரணத்தால் அவனீஷ் மற்றும் ஸ்ரீமதி சிறு வயதிலிருந்தே ஒரே பள்ளியில் படித்து வந்தனர்.

ஸ்ரீமதி செல்வத்தின் வளர்ப்பு.அவளிடம் அனைத்து நல்ல குணங்களும் இயற்கையாகவே அமைந்திருந்தன.பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பதிலாகட்டும், அடுத்தவருக்கு உதவி செய்வதிலாகட்டும் அவளுக்கு நிகர் அவள் மட்டுமே. எனவே அனைவரின் அன்பிற்கும் பாத்திரமானாள். வகுப்பில் அனைத்திலும் முதல் இடம் பெறுவாள். அதனால் அனைத்து ஆசிரியர்களுக்கும் விருப்பமான மாணவி.

அவனீஷ் மற்றும் ஸ்ரீமதி பத்தாம் வகுப்பில் இருந்தனர். இருவருமே ஒரே பள்ளியில் படித்தாலும் அவனீஷிற்குள் இருக்கும் ஆணாதிக்கத்தாலும் பொறாமையாலும் ஸ்ரீமதியை எதாவது சீண்டி கொண்டே இருப்பான். எவ்வளவு சீண்டினாலும் எதுவும் சொல்லாத ஸ்ரீமதி அமைதியே அவனுக்கு சாட்டையடியாக இருக்கும்.

நாட்கள் நகர பத்தாம் வகுப்பில் இருவருமே நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தனர்.

இப்பொழுது இருவரும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதி முடிவுக்காக காத்து கொண்டிருந்தனர். அப்பொழுது தான் அந்த சந்தோஷமான செய்தி அவர்களை வந்து அடைந்தது. அது ஸ்ரீமதி மாநிலத்திலேயே முதல் மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்ததுதான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.