(Reading time: 7 - 14 minutes)

உனது கண்களில் எனது கனவினை காணப்போகிறேன் - அனிதா சங்கர்

Love

வ்வள்ளவு  தைய்ரியம் அவனுக்கு எல்லாத்துக்கும் தலயதலய ஆட்டிட்டு இப்ப அப்படியே தலைகீழ மாறிட்டான்.உடம்பு புள்ளா திமிரு  இருடா மவனே தீபாவளி போட்டும் அப்புறம் இருக்கு ....என்று நம்ப ஹீரோயின் திட்டிக் கொண்டிருகும்போதே கதவ திறந்துகிட்டு வந்தான் விஷ்வா.

அவனை முறைக்க பார்த்தாள் மீரா.(அதாங்க நம்ப ஹீரோயின்). வந்தவன் எதுவும் சொல்லாமல் தூங்க சென்றுவிட்டான்.இப்ப மீராவிற்கு எப்படி இருந்ததுனா (சிங்கம் படத்துல எப்படி அனுஷ்கா தேங்காவ வச்சி அடிக்க பிளான் பண்ணுவாங்களோ அதைவிட பெரிய பிளான் போட்டு அவனுக்கு தெரியாம நல்லா மொத்துமொதுன்னுமொத்துனும் போல இருந்தது அவளுக்கு) என்ன செய்ய பஸ்டிராவல் தந்த களைப்பினால் நித்ராதேவி அவளை வருட தூங்க சென்று விட்டாள் மீரா.

(ஹலோ friends  அதுக்குள்ள நாம விஷ்வா-மீரா பத்தி தெரிஞ்சிக்குவோம் வாங்க)

மீராவும்,விஷ்வாவும்  MNC companyla  வேலை செய்றாங்க. விஷ்வவோட பாரேன்ட்சும், மீராவோட பாரேன்ட்சும் அவங்களுக்கு alliance  பார்க்க.இவுங்க ரெண்டு பேருக்கும் ஜாதகப்பொருத்தமும் ஒத்துப்போக இப்ப கல்யாணமாகி நான்கு மாதங்கள் கடந்துபோச்சு.

இப்ப தல தீபாவளிக்கு ஊருக்கு வந்துருகாங்க.வாங்க அவங்களுக்குள்ள என்ன பிரச்சனை பார்போம்.

காலை மணி 6.00யை தொட்டு இருக்க கண் விழித்தாள் மீரா. கீழே சென்றவள் தன் மாமியார் தந்த காபியைக் குடித்துவிட்டு தன் கணவனுக்கும் எடுத்துச்சென்றாள்.

நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான் விஷ்வா.(சாரி நடித்துக் கொண்டிருந்தான்,அவனுக்கும் மூளை இருக்குள்ள யோசிபோம்ல).டேய்,உனக்கு பெட்காபி கேக்குதா இரு(இது மீரா டயலாக்).காபியை பக்கத்தில் இருந்த டேபிளில் வைத்தவள்,ஒரு கிளாஸ் தண்ணீரை அவன் முகத்தில் ஊற்றி விட்டுச் சென்றுவிட்டாள்.திடீரென முகத்தில் தண்ணீர் விழ எழுந்தவன் அடிபாவி, அப்படி என்னடி என்மேல உனக்கு கோவம் என யோசித்தான்.(பின்ன யோசிக்கமாட்டானா,மூன்று மாதம இப்படியா எழுப்புவா அதை நினைத்தவன் ஒரு பெருமூச்சுடன் எழுந்து குளிக்கச் சென்றான்.

அவன் குளித்துவிட்டு வந்தவுடன் கீழேசென்றான்.(உடனே சாப்பிடனு நினைக்காதீங்க,காலையில் இருந்து பேசாதவ இப்பவந்து கீழே  வாங்கன்னு கூப்பிட்டு போனா போகாமல் இருப்பானா)

கீழபோனா அவனோட மாமனார்,மாமியார் தீபாவளிக்கு கூப்பிடவந்திருந்தாங்க

அவங்கள நலம் விசாரிச்சிட்டு,காலை சாப்பாட முடிச்சிட்டு மீராவோட ஊருக்கு கிளம்பிடாங்க.

கவலைப்படாத விஷ்வா,நமக்கு நம்ப மச்சினிச்சி ஹெல்ப் பண்ணுவா அப்படினு மனச தேத்திக்கிட்டு போவம்.(இதாங்க, விஷ்வோட இப்போதைய நிலமை,பின்ன காலையிலிருந்து அப்படி அவாய்ட் பண்றா)

பாவங்க நம்ப பையன் அப்ப மட்டும் இல்லங்க தீபாவளி அன்னைக்கு கூட அப்படிதாங்க இருந்தா)

இதோ நாளைக்கு ஊருக்கு போறங்க. ஆனால் இன்னமும் விஷ்வாவுக்கு என்ன பிரச்சனணு தெரியாது.

அவன் நம்பி வந்த மீரா தங்கச்சிக்கும் தெரியல.தெரியலங்கறத விட அவளுக்கு அவளோட காலேஜ் பத்தி சொல்லவே டைம் இல்ல.நல்லா விருந்து முடிய உண்ட களைப்புல மதியம் ஒரு குட்டி தூக்கம் போட போய்ட்டான்.

ப்ப மீராவோட பாமிலி மட்டும் பேசுறாங்க வாங்க நாமளும்கேப்போம்.

  “ரொம்ப சந்தோஷமா இருக்குமா,இதே மாதிரி உனோட தங்கச்சிக்கும் ஒரு நல்ல மாப்பிள்ளை கிடச்சா போதும்”இது மீராவோட அம்மா.

“ஆமா,பெரிய அதிசய மாப்பிள்ளை இவ்வங்களுக்கு கிடைச்சிருக்கு, இதே மாதிரி இன்னும் ஒன்னா”இது மீராவோட mind voice.

“ஆமா அக்கா,மாமா மாதிரி யாருமே இருக்க மாட்டாங்க” இது மீராவோட தங்கச்சி.

“ஆமாஆமா இவ்வன மாதிரி நம்பிக்கை துரோகி கிடைக்க மாட்டாங்க”இதுமீராவோட mind voice.

“ஆமாடா, இதே மாதிரி மாப்பிள்ளை யாருக்கும் கிடைக்க மாட்டாங்க”இது மீராவோட அப்பா.

(பாவங்க பொண்ணு,எவ்வளவு நேரம்தான் பொருத்திருப்பா)

“அப்படி, என்னப்பா,அவரு செஞ்சுட்டாரு”,இது மீரா.

“அவரு மாப்பிள்ளையா மட்டும் இல்லாம மகனாவும் இருக்காருல,அதான்மா” இது மீராவோட அப்பா.

“அ...ப்பா என்ன... சொல்லுரிங்க”

“ஆமாமா,இப்ப கூட தீபாவளிக்கு போட்ட ஒரு சவரன்ல கூட பாதி பணம் அவர் போட்டது, அதுவும் இல்லாம உனக்கு எடுத்த dressuku கூட என்னோட மனைவிக்கு நான்தான் எடுப்பேனு.. அப்பப்பா அவ்வளவு அடம்டா,ரொம்ப நல்லவருடா..”.

“ஆமா,அக்கா எனக்கு கூட மாமா த்ரீ மாந்த்ஸா  பாக்கெட்மணி கூட தறாரு,மெஸ்பில் pay பண்ணறாரு,you are really lucky அக்கா”

என்ன சொல்லுவது என்று மீராவுக்கு தெரியவில்லை.ஒரு வழியாக பேசிமுடிக்கவும் விஷ்வா வரவும் சரியாக இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.