(Reading time: 9 - 18 minutes)

நாட்கள் செல்லச்செல்ல சுரேஷ் அண்ணனிடமும் தங்கையிடமும் அவமானப்படுவது அதிகமாயின. இதன் முடிவாக சுரெஷ் வீட்டில் இருந்த துக்கமாத்திரையை விழுங்கினான். 

“என்னப்பா இப்படி செய்திட்டியே!... நானும் அப்பாவும் இல்லையா எங்களை விட்டுட்டுபோக எப்படிப்பா உன்னால் முடிந்தது.” என அலறி வாரி அணைத்துக் கொண்டாள்.

எப்படியோ அவனை மருந்து மாத்திரைகள் மட்டுமல்ல தாயின் அன்பும் அரவணைப்புமே மீண்டும் உலகை பார்க்க வைத்தன.    

வீட்டின் நடு கூடத்தில் எல்லோரும் அமர்ந்திருந்தனர் .கல்யாணிதான் ஆரம்பித்தாள்;.

“உங்களை எங்கபிள்ளைங்கனு சொல்லவே வெட்கமாயிருக்கு உங்களை நாங்க அப்படியா வளர்த்தோம். உலக அறிவும் மருத்துவ அறிவும் ஊடடி ஊட்டி வளர்த்தோம். படித்த நீங்களே இப்படியிருக்கும் போது படிக்காத பாமர மக்கள் எப்படி புரிந்து கொள்ளுவார்கள். நாலு பேர் நாலு விதமாக பேசுகிறார்கள் என்பதற்காக கூட பிறந்தவனையே எப்ப ஒதுக்க நினைத்திங்களோ, அப்பவே நீங்க எங்களையும் ஒதுக்க தயங்கமாட்டிங்னு என்ன நிச்சயம். அதனால்” 

“அதனால….,”வேகமாக கேட்டான் ரமேஷ்”.  

“எந்த மாதிரியான பிள்ளையாக இருந்தாலும் பெத்தது இந்தவயிறுதானே!....எங்களுக்குனு கடமையும் பொறுப்பும் இருக்கு, நீங்க சின்ன பிள்ளை இல்லை.படிப்பதற்கும் தங்குவதற்கும் பணம்தான் ஒருபொருட்டு, அதை நாங்க கொடுத்துடறோம். நீங்க இந்த வீட்டிலேயே இருந்துக்குங்க.” 

பெற்றோர் பேசுவது புரியாமல் மலங்கமலங்க விழித்தனர். 

“மனசாலையும் உடலாலையும் ஒடிந்து போய் இருக்கிற சுரேஷ்க்கு பாதுகாப்பும் பாசமும் வேண்டும். அதனால நாங்க மூன்று பேரும் வெளியே செல்கின்றோம்.” என்று கூறினாள் கல்யாணி, கூறியதுதான்,  

“அப்பா!....” அதிர்ச்சியில் இருவரும் கத்தினர். 

“அவன் மட்டும்தான் உங்கபிள்ளையா….?அப்ப நாங்க யாரு?அவனுக்காக எங்களை விடடுட்டு போறிங்களா?”

ரமேஷின் குரல் அழுகையின் ஊடே வெளிப்பட்டது. வனிதாவோ என்னபேசுவது என்று தெரியாமல் அதிர்ச்சியில் அமர்ந்திருந்தாள். 

என்னதான் இருந்தாலும் அவர்களும் அவள் பிள்ளைகள் தானே! துக்கம் தொண்டையை அடைத்தது. ‘

எங்கே போய்விடப்போகிறார்கள் , இவர்களும் புரிந்துகொள்ளும் காலம் வரும்’. எண்ணியவள் அமைதியாக இருந்தாள்.  

அழுகையின் இடையை “நீங்க ஒன்றும் எங்கும் போகவேண்டாம். ஆனா அவனை எங்களிடம் பேசவேண்டாம் என்று சொல்லுங்கள்.”என்றான் ரமேஷ்.    

கல்யானியும் ராகவனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.முள்ளை முள்ளால்தானே எடுக்க வேண்டும்.

லம் நலம் அறிய ஆவல் என விசாரிக்கும் நிலை இல்லாமல் அந்த வீடே சூன்யமாய் காட்சியளித்தது. எப்பொழூதும் சிரிப்பும் கும்மாளமும் கேட்கும் அந்த வீட்டில் மகிழ்ச்சிகான ரேகை சிறிதும் இல்லை. எதையோ பறிகொடுத்த மாதிரி ஒருவரை ஒருவர் ஏரெடுத்தும் பார்க்காமல் அவரவர் வேலையை அவரவரே பார்த்துக்கொண்டனர்.அவனில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு அதிகமாகவே ஒதிங்கினரே தவிர திட்டவோ கிண்டலோ என வேறெதுவும் செய்வதில்லை. இப்படியே நாட்கள் வாரங்களாயின, மாதங்களை கடந்தன. 

சுரேஷின் முன் ரமேசும், வனிதாவும் கண்கள் கலங்கியவாறு அமர்ந்திருந்தனர். அவர்களைப்பார்த்ததும் சுரேசின் கண்களும் கலங்கியது. 

“எங்களை மன்னிச்சிடுடா! அதைக் கேட்க கூட எங்களுக்குத் தகுதி இல்லை.”  

“என்னண்ணா பெரியவார்த்தையெல்லாம் பேசிகிட்டு”. 

“மத்தவங்களோட கேலிக்கும் கிண்டலுக்கும் பயந்துகிட்டும் பதில் சொல்லமுடியாமதான், உன் மேல் கோபப்பட்டோம். என்னையும் மன்னித்துவிடு அண்ணா!” என்ற வனிதாவைப்பார்த்து,

“என்னடா எனக்கு தெரியாதா, நான் மட்டுமா, அப்பா, அம்மா எல்லாரும் எவ்வளவு வேதனையோட கஷ்டப்பட்டோம் தெரியுமா? இதையெல்லாம் மறந்தடுவோம்டா”.என்றான்.  

மாநிலத்திலேயே சுரேஷ் முதன்மாணவனாக வந்ததால் மீடியாக்களும், பத்திரிக்கைகளும் போட்டிப்போட்டுக்கொண்டு பேட்டி எடுத்து தள்ளின.  

“இந்தளவு மதிப்பெண் எடுப்பிங்கனு எதிர்பார்த்திங்களா?” 

“எதிர்பார்க்கவில்லை. ஆனா ரொம்ப சந்தோஷாமா இருக்கு! அதுக்கு காரணம் என் அப்பா, அம்மா, பள்ளி முதல்வர் , ஆசிரியர். இவர்கள் மட்டும்இல்லைனா இந்த மதிப்பெண் மட்டுமல்ல, நானும் இப்ப உங்க எதிர்க்க இருந்திருக்க முடியாது.” கூறும்போழுதே நாதழுதழுக்க கண் கலங்கியது. 

கல்யாணி தோள்மீது கைவைத்து அழுத்தினாள். அதில் நாங்க இருக்கோம் என்பதை உணர்ந்தாணோ என்னவோ! நிமிர்ந்து நின்று கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் கூறினான். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.